SLTB அணியை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்றது செரண்டிப்

735

கொழும்பு சுகததாச  விளையாட்டரங்கில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் பிரிவு 1 (டிவிசன்-1) இற்கான கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் SLTB விளையாட்டுக் கழகத்தை மாவனல்லை செரண்டிப் கால்பந்து கழகம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வென்றி கொண்டது. இந்த வெற்றியுடன் செரண்டிப் கால்பந்து கழகம் 2019ஆம் ஆண்டுக்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது.  

சென்னையின் கால்பந்து கழக அணியுடனான மோதலை சமநிலை செய்த கொழும்பு அணி

நேற்று (6) கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இடம்பெற்று முடிந்த…..

செரண்டிப் அணி போட்டியின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் 2ஆவது இடத்தை பிடித்ததோடு SLTB அணி இதே கட்டத்தில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் இந்தப் போட்டியில் வெல்லும் அணி டிவிசன்-1 இல் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதோடு 2019 டயலொக் சம்பியன்ஸ் லீக்கிற்கும் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில், இரு அணிகளும் போட்டியின் ஆரம்பம் தொடக்கம் கடுமையாக போராடின. ஆரம்பத்தில் SLTB அணி ஆதிக்கம் செலுத்தியதோடு பந்தை நேர்த்தியாக பரிமாறியதை காண முடிந்தது. இதன் பயனாக கோணர் கிக் ஒன்றை பெற்றதை அடுத்து அவ்வணியின் மதுஷங்க அதனை தலையால் முட்டி கோல் பெற முயன்றபோதும் பந்து வெளியே பறந்தது.  

இந்நிலையில் ப்ரீகிக் ஒன்றின் மூலம் செரண்டிப் அணிக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும், அதனை கோலாக மாற்ற அந்த அணியால் முடியாமல் போனது.    

எவ்வாறாயினும் 25ஆவது நிமிடத்தில், எதிரணியின் கோலுக்கு வெளியில் இடது புறத்தில் கிடைத்த ப்ரீ கிக்கை செரண்டிப் அணியின் சிரேஷ்ட வீரர்  ராஜ்ஷெரோன் பெற்றார். அவர் உள்ளனுப்பிய பந்தை இவான்ஸ் அசன்டே ஹெடர் மூலம் கம்பங்களுக்குள் செலுத்தி செரண்டிப் அணிக்கு முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

Photos: New Star SC vs Serendib FC | Super 6 | Premier League Division I 2018

ThePapare.com | Brian Dharmasena | 24/02/2019 Editing….

போட்டியில் பின்தங்கியபோதும் SLTB அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்தது. எனினும், அவர்களது முயற்சிகள் செரண்டிப் பிக்கள வீரர்களால் தடுக்கப்பட்டன.

முதல் பாதி  செரண்டிப் கா.. 1 – 0 SLTB வி..

இரண்டாம் பாதி ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்களில் SLTB அணியின் எஸ். சஞ்சீவ, செரண்டிப் அணியின் தரிந்து லியனகேவிற்கு தாக்குதல் நடத்தியதன் காரணமாக, அவர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் 59 ஆவது நிமிடத்தில் சிறப்பாக செயற்பட்ட இவான்ஸ் அசன்டே எதிரணியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து பந்தை கடத்திச் சென்று வாய்ப்பை கோலாக மாற்றினார்.  

இதனிடையே ருவன் ஷானக்க உதைத்த அபார ப்ரீ கிக் மூலம் SLTB அணி கோல் ஒன்றை பெற்றமையினால் 10 வீரர்களுடன் ஆடிய அவ்வணியின் நம்பிக்கை அதிகரித்தது.

போட்டியின் கடைசி 15 நிமிடங்களில் பரபரப்பு அதிகாரித்தது. போட்டியை சமனிலைக்கு கொண்டுவர SLTB கடுமையாக போராடியது. அந்த அணிக்காக ஜயவீர கோல் எல்லை வரை நெருங்கியபோதும் செரண்டிப் பின்கள வீரரினால் தடுக்கப்பட்டார்.  

Photos : Serendib FC vs Police SC | Super 6 Round | Premier League Division 1 2018

ThePapare.com | Hiran Chandika | 05/03/2019 Editing and re-using…….

எவ்வாறாயினும் 79 ஆவது நிமிடத்தில் மொஹமட் ராஜ்ஷெரோன் புகுத்திய கோல் செரண்டிப் அணியின் வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது.  

இதனைத் தொடர்ந்து செரண்டிப் வீரர் மொஹமட் ஆசிருக்கு மிக இலகுவான கோல் ஒன்றை பெறும் வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை அவர் தவறவிட்டார். கோல்காப்பாளரை முறியடித்து இவான்ஸ் பந்தை ஆசிரிடம் கொடுத்தபோது அவருக்கும் கோலுக்கும் இடையில் ஒரு தற்காப்பு வீரர் மாத்திரமே இருந்தார். ஆனால் அவர் பந்தை கம்பங்களுக்கு வெளியே உதைத்தார்.  

தமக்கு எதிரான முடிவு குறித்து SLTB வீரர்கள் நடுவரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கடைசி நேரத்தில் நிலைமை மோசமடைந்தது. பிரதான நடுவர் நிலைமையை கட்டுப்படுத்தி சுமுகமாக போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார்.  

முழு நேரம்  செரண்டிப் கா.. 3 – 1 SLTB வி..

ThePapare.com போட்டியில் சிறந்த வீரர் இவான்ஸ் அசன்டே (செரண்டிப் கா..)

கோல் பெற்றவர்கள்:
செரண்டிப் கா.க. – இவான்ஸ் அசன்டே 25′, 59′, மொஹமட் ராஜ்ஷெரோன் 79′
SLTB வி.க. – ருவன் ஷானக்க 68′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்
SLTB வி.க. – எம்.வி. குமாரசிறி 41, பீ.எம். குமார 85′
செரண்டிப் கா.க. – ராஜ்ஷெரோன் 79′

சிவப்பு அட்டை பெற்றவர்
SLTB வி.க. – எஸ். சன்ஜீவ 48′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<