வருடா வருடம் பாடசைலைகளுக்கு இடையில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் சில இன்று (9) நிறைவடைந்தன. அதன் விபரம் வருமாறு.
3ஆவது சகோதரர்களின் சமர்
ரத்கம, தேவப்பத்திராஜா கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெளிப்படுத்திய அபார துடுப்பாட்டத்தின் மூலம் குலீகொட, மாதம்ப மத்திய கல்லூரிக்கு எதிரான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் 148 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ரத்கம பொது மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தேவப்பத்திராஜ கல்லூரி முதல் இன்னிங்ஸில் 388 ஓட்டங்களை பெற்றதோடு பத்தும் மதுஷங்க 101 ஓட்டங்களை குவித்தார்.
இந்நிலையில் மாதம்ப மத்திய கல்லூரிக்கு 277 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 127 ஓட்டங்களுக்கு சுருண்டது. சதம் பெற்ற மதுஷங்க பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
தேவப்பத்திராஜா கல்லூரி, ரத்கம (முதல் இன்னிங்ஸ்) – 388 (71.2) – பத்தும் மதுஷங்க 101, சசங்க நிர்மால் 96*, சுதீர வீரரத்ன 67, கல்ப சேத்திய 63, கவிந்து விதுரங்க 3/72, சுனெத் மதுரங்க 2/19, சசிந்து நிமேஷ் 2/66
மாதம்ப மத்திய கல்லூரி, குலீகொட (முதல் இன்னிங்ஸ்) – 163 (57.3) – சுனெத் மதுரங்க 33, சமோத் டில்ஹார 32, சுதீர வீரரத்ன 3/12, திசர டில்ஷான் 3/27, பத்தும் மதுஷங்க 3/34
தேவபத்திராஜா கல்லூரி, ரத்கம (இரண்டாவது இன்னிங்ஸ்) – 51/1d (7.3) – சுதீர வீரரத்ன 23*, ஜீவக்க ஷஷீன் 21
மாதம்ப மத்திய கல்லூரி, குலீகொட (இரண்டாவது இன்னிங்ஸ்) – 127 (46.2) – கவிந்து விதுரங்க 32, பசிந்து நிமேஷ் 24, பத்தும் மதுஷங்க 6/20
முடிவு – தேவப்பத்திராஜா கல்லூரி 148 ஓட்டங்களால் வெற்றி
23ஆவது பச்சைகளின் சமர்
சமிந்து நிவர்த்தனவின் அதிரடி பந்துவீச்சு மூலம் பாணந்துறை ரோயல் கல்லூரிக்கு எதிரான பச்சைகளின் சமரில் பாணந்துறை புனித ஜோன்ஸ் கல்லூரிக்கு 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
மொரட்டுவை சொய்சா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஒன் (follow on) செய்த ரோயல் கல்லூரி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தபோதும் நிர்ணயிக்கப்பட்ட 30 ஓட்ட வெற்றி இலக்கை புனித ஜோன்ஸ் கல்லூரி 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் சமிந்து நிவர்த்ன 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (முதல் இன்னிங்ஸ்) – 210 (57.3) – தினுஷ்க மதுஷான் 69, பிரவீன் சந்தமால் 61, ரெஷான் மலித் 23, துஷான் மதுஷங்க 6/56, தினெத் ரஷ்மிக்க 2/29
ரோயல் கல்லூரி, பாணந்துறை (முதல் இன்னிங்ஸ்) – 103 (53.3) – தனஞ்சய பிரசாத் 38, அகில சேனஷ் 30, பிரவீன் சந்தமால் 3/19, அஷான் டில்ஹார 3/24, சசித்த மனுப்பிரிய 3/30
ரோயல் கல்லூரி, பாணந்துறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – F/O 136 (54.4) – துஷன்த மதுசங்க 43*, திமேஷ் ஆகர்ஷ 20*, சமிந்து நிவர்த்ன 6/37
புனித ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 30/2 (8.2)
முடிவு – புனித ஜோன்ஸ் கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி
மேற்கிந்திய தீவுகளை 45 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி
டி-20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டங்களான 45 ஓட்டங்களுக்கு…
கோட்டே சமர்
கோட்டே புனித தோமியர் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர மஹாவித்தியாலய அணிகளுக்கு இடையில் பிரேமதாச அரங்கில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது.
Photos: Sri Jayawardenapura College vs St. Thomas’ College Kotte | 42nd Battle of Kotte | Day 1
புனித தோமியர் கல்லூரி 33 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோதும் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின சுருக்கம்
புனித தோமியர் கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்) – 143 (60.2) – தரின் கிம்ஹான 31, வினுக்க தினசர 2/25, இஷார சமிந்திக்க 2/28, சம்பத் நிசங்க 2/33
ஸ்ரீ ஜயவர்தனபுர மஹாவித்தியாலயம், கோட்டே (முதல் இன்னிங்ஸ்) – 176 (74.2) – புத்திக்க சமிந்த 55, இஷான் பொதேஜு 51, சசித் தேவ்ஷான் 4/29, கெவான் டேவிட் 2/38, மனுஜ நயனஜித் 2/41
புனித தோமியர் கல்லூரி, கோட்டே (இரண்டாவது இன்னிங்ஸ்) – 114/5 (51) – தரின் கிம்ஹான 59*, சம்பத் நிசங்க 3/31
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
Photos: Sri Jayawardenapura College vs St. Thomas’ College Kotte | 42nd Battle of Kotte – Day 2
61ஆவது மழலைகளின் சமர்
கண்டியின் பிரபல கல்லூரிகளான புனித சில்வெஸ்டர் மற்றும் வித்தியார்த்த கல்லூரிகள் மோதிய போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.
Photos: Vidyartha College vs St. Sylvester’s College – 61st Battle of the Babes | Day 1
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் புனித சில்வெஸ்டர் கல்லூரி முதல் இன்னிங்சுக்கு 228 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த வித்தியார்த்த கல்லூரி 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித சில்வெஸ்டர் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை எடுத்தது.
Photos: Vidyartha College vs St. Sylvester’s College | 61st Battle of the Babes – Day 2
போட்டியின் சுருக்கம்
புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 228 (73.3) – அவிந்து ஹேரத் 76, நிஷான்த ஜனவர்தன 49*, கெவின் நிம்ஷான் 38, மெதுனக்க விஜேதிலக்க 4/49, இஷான் சங்கீத் 3/30, கசுன் கருணாதிலக்க 2/40
வித்தியார்த்த கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 146 (54.3) – மெதுனக்க விஜேதிலக்க 67, இசுரு பிரபோத 22, கனிஷ்க ஜயசேகர 3/29, பசன் ஹெட்டியாரச்சி 2/33, ருசிந்து நிசங்க 2/34
புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 149/5 (44) – நெவின் டில்ஷான் 74, பசன் ஹெட்டியாரச்சி 55, சதுரங்க டில்ஷான் 2/13, மெதுனக்க விஜேதிலக்க 2/27
முடிவு – போட்டி சமநிலையில் முடிவு
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<