Home Tamil தோமியர் கல்லூரிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த கலன பெரேரா

தோமியர் கல்லூரிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த கலன பெரேரா

245

உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள நீல நிறங்களின் சமர் என்று அழைக்கப்படும் கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் கிரிக்கெட் சமர், 140ஆவது தடவையாகவும் டி.எஸ் சேனநாயக்க ஞாபகர்த்த கேடயத்துக்காக கொழும்பு SSC மைதானத்தில் இன்று (07) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய புனித றோயல் கல்லூரியின் அணித் தலைவர் கவிந்து மதாரசிங்க முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

வரலாற்றை மாற்றவுள்ள றோயல் – தோமியரின் 140ஆவது நீல நிறங்களின் சமர்

உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது…..

அதன்படி களமிறங்கிய றோயல் கல்லூரி, நிதானமாக விளையாடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டாலும் புனித தோமியர் கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் கலன பெரேராவின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி, இன்றைய ஆட்டநேர முடிவில் 158 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இப் போட்டியில் றோயல் கல்லூரிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கமில் மிஷார மற்றும் சாலின் இஷ்வர திஸாநாயக்க களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே கலன பெரேராவின் அபார பந்துவீச்சில் இஷ்வர திஸாநாயக்க போல்ட் ஆனார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக 42 ஓட்டங்களை பெற்றிருந்த போது, கலன பெரேராவின் பந்துவீச்சில் அஹான் சன்சித 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மத்திய வரிசை வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியிருந்தனர்.

Photo Album : Royal College vs S. Thomas’ College – 140th Battle of the Blues | Day 1

இதன்படி, மதிய போசண இடைவேளையின் போது 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை அந்த அணி இழந்திருந்தது. இதில் நான்கு விக்கெட்டுக்களை இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலன பெரேரா வீழ்த்தியிருந்தார்.

ஒரு புறத்தில் விக்கெட்டுக்கள் சாய்க்கப்பட்டாலும், 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கவிந்து பத்திரன மற்றும் கௌஷான் குலசூரிய ஆகியோர் 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று றோயல் கல்லூரிக்கு நம்பிக்கை கொடுத்தனர். இதில் கவிந்து பத்திரன 62 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டமிழந்ததுடன், அதே ஓவரின் இறுதிப் பந்தில் கௌஷான் குலசூரிய 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்துவந்த பின்வரிசை வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டழிக்க, இறுதியில் 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை றோயல் கல்லூரி பெற்றுக்கொண்டது.

றோயல் கல்லூரி சார்பாக கமில் மிஷார 87 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும், கவிந்து பத்திரன 35 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பதிவு செய்தனர்.

தோமியர் கல்லூரிக்காக சிறப்பாக பந்து வீசிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலன பெரேரா, போட்டியின் போக்கை மாற்றிய அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்தி 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஷெனொன் பெர்னாண்டோ 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

சென் ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்ட டினோஷன்

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம்…..

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி, இன்றைய நாள் ஆட்டநேர நிறைவின் போது, 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதில் தோமியர் கல்லூரியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 35 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. எனினும், 3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த 15 வயதுடைய புதுமுக வீரரான ரையன் பெர்னாண்டோ மற்றும் யொஹான் பெரேரா ஆகியோர் 97 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதில் ரையன் பெர்னாண்டோ 67 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களையும், யொஹான் பெரேரா 90 பந்துகளுக்கு முகங்கொடுத்து 49 ஓட்டங்களையும் அதிகபட்சமாப் பெற்றுக்கொண்டனர்.

றோயல் கல்லூரியின் இன்றைய நாளுக்கான பந்துவீச்சில் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் கமில் மிஷார தோமியர் கல்லூரியின் 3 விக்கெட்டுக்களையும், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் கிஷான் பாலசூரிய 2 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்தனர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


S. Thomas’ College
296/10 (78.5) & 124/3 (20)

Royal College
158/10 (48.3) & 259/10 (108.2)

Batsmen R B 4s 6s SR
Isiwara Dissanayake b Kalana Perera 0 4 0 0 0.00
Kamil Mishara c Shalin De Mel b Shannon Fernando 36 87 6 0 41.38
Ahan Sanchitha lbw b Kalana Perera 15 27 2 0 55.56
Pasindu Sooriyabandara c Shalin De Mel b Kalana Perera 2 5 0 0 40.00
Kavindu Madarasinghe c Shalin De Mel b Shannon Fernando 11 27 2 0 40.74
Bagya Dissanayake c Dellon Peiris b Kalana Perera 12 20 2 0 60.00
Tithira Weerasinghe lbw b Kalana Perera 0 3 0 0 0.00
Kavindu Pathirathne lbw b Kalana Perera 35 61 7 0 57.38
Kaushan Kulasooriya c Shalin De Mel b Shannon Fernando 28 47 5 0 59.57
Lahiru Madushanka not out 6 7 1 0 85.71
Gishan Balasuriya c Shalin De Mel b Shannon Fernando 0 6 0 0 0.00


Extras 13 (b 4 , lb 4 , nb 4, w 1, pen 0)
Total 158/10 (48.3 Overs, RR: 3.26)
Bowling O M R W Econ
Kalana Perera 14 4 54 6 3.86
Shalin De Mel 3 0 12 0 4.00
Kishan Munasinghe 6 1 21 0 3.50
Yohan Perera 1 0 2 0 2.00
Shannon Fernando 15.3 8 27 4 1.76
Dellon Peiris 5 1 18 0 3.60
Dilmin Rathnayake 4 1 16 0 4.00
Batsmen R B 4s 6s SR
Sithara Hapuinna c Kaushan Kulasooriya b Kamil Mishara 14 13 3 0 107.69
Shalin De Mel lbw b Kavindu Pathirathna 21 18 5 0 116.67
Ryan Fernando c & b Kamil Mishara 60 66 9 1 90.91
Yohan Perera c Kavindu Madarasinghe b Gishan Balasuriya 49 90 8 0 54.44
Kishan Munasinghe b Kamil Mishara 8 18 1 0 44.44
Dellon Peiris b Gishan Balasuriya 4 16 0 0 25.00
Ravindu De Silva b Lahiru Madushanka 2 23 0 0 8.70
Dilmin Rathnayake c Kavindu Madarasinghe b Kavindu Pathirathne 3 29 0 0 10.34
Umayanga Suwaris run out (Kavindu Madarasinghe) 62 109 9 0 56.88
Kalana Perera c Kaushan Kulasooriya b Kavindu Pathirathne 62 59 9 1 105.08
Shannon Fernando not out 5 32 0 0 15.62


Extras 6 (b 0 , lb 0 , nb 2, w 4, pen 0)
Total 296/10 (78.5 Overs, RR: 3.75)
Bowling O M R W Econ
Kavindu Pathirathne 16 1 83 3 5.19
Lahiru Madushanka 9 1 37 1 4.11
Kamil Mishara 19 5 70 3 3.68
Gishan Balasuriya 23 9 65 2 2.83
Kaushan Kulasooriya 10.5 2 26 0 2.48
Tithira Weerasinghe 1 0 14 0 14.00
Batsmen R B 4s 6s SR
Isiwara Dissanayake b Shalin De Mel 20 77 2 0 25.97
Kamil Mishara c Shalin De Mel b Kalana Perera 34 58 6 0 58.62
Kavindu Madarasinghe c Shalin De Mel b Shannon Fernando 25 50 5 0 50.00
Ahan Sanchitha c Sithara Hapuhinna b Kalana Perera 26 50 3 0 52.00
Bagya Dissanayake c & b Dellon Peiris 21 96 2 0 21.88
Kavindu Pathirathne c Dellon Peiris b Kalana Perera 24 54 3 0 44.44
Pasindu Sooriyabandara c Dellon Peiris b Yohan Perera 67 160 9 0 41.88
Tithira Weerasinghe c & b Dellon Peiris 0 3 0 0 0.00
Kaushan Kulasooriya c Ryan Fernando b Kishan Munasinghe 14 37 3 0 37.84
Lahiru Madushanka not out 11 64 1 0 17.19
Gishan Balasuriya b Yohan Perera 0 1 0 0 0.00


Extras 17 (b 6 , lb 4 , nb 6, w 1, pen 0)
Total 259/10 (108.2 Overs, RR: 2.39)
Bowling O M R W Econ
Kalana Perera 30 6 102 3 3.40
Shannon Fernando 23 11 35 1 1.52
Dellon Peiris 23 6 53 2 2.30
Kishan Munasinghe 9 6 14 1 1.56
Dilmin Rathnayake 5 2 16 0 3.20
Shalin De Mel 11 5 12 1 1.09
Yohan Perera 5.2 0 15 2 2.88
Umayanga Suwaris 2 1 2 0 1.00


Batsmen R B 4s 6s SR
Sithara Hapuhinna c Bagya Dissanayake b Kamil Mishara 34 30 5 0 113.33
Shalin De Mel not out 67 55 10 1 121.82
Ryan Fernando st Kavindu Madarasinghe b Gishan Balasuriya 3 9 0 0 33.33
Yohan Perera b Lahiru Madushanka 2 17 0 0 11.76
Ravindu De Silva not out 13 9 1 0 144.44


Extras 5 (b 4 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 124/3 (20 Overs, RR: 6.2)
Bowling O M R W Econ
Kavindu Pathirathne 4 0 39 0 9.75
Kamil Mishara 4 0 22 1 5.50
Kaushan Kulasooriya 2 0 16 0 8.00
Lahiru Madushanka 5 0 19 1 3.80
Gishan Balasuriya 5 1 23 1 4.60