தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 113 ஓட்டங்களால் மோசமான தோல்வி ஒன்றினை தழுவியதனை அடுத்து, தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்றது தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 113
இந்த மோசமான தோல்விக்கு தமது துடுப்பாட்ட வீரர்களின் கவனயீனமான செயற்பாடே காரணம் என இலங்கை அணியின் தலைவரான லசித் மாலிங்க தெரிவித்திருக்கின்றார். துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்க தவறிய போதிலும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“ போட்டியின் முதல் பத்து ஓவர்களுக்குள் அவர்கள் நிறைய பெளண்டரிகளை விளாசியிருந்தனர். எனினும், 15ஆவது ஓவரிற்கு பின்னர் ஆட்டம் எமது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அவர்களை 250 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தி நல்ல வேலை ஒன்றினையே செய்திருந்தோம். ஆனால், எனக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. நீங்கள் உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிக்காட்டிய பின்னர் தேசிய அணிக்காக விளையாடுகின்றீர்கள். இதன் மூலம் உள்ளூர் போட்டிகளில் உங்களால் உயர்தரமான போட்டி ஒன்றில் நன்றாக ஆட முடியும் என்பதனை நிரூபித்துள்ளீர்கள். உங்களுக்கு இந்த வாய்ப்பு இறைவன் இலகுவாக தந்தது அல்ல. நீங்கள் இங்கே வர கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால், தேசிய அணியில் ஆடுவது பெறுமதியான விடயம் என இவர்கள் நினைக்கின்றார்களா? என்பதனை என்னால் உறுதியாக சொல்ல முடியாமல் இருக்கின்றது. “ என லசித் மாலிங்க குறிப்பிட்டிருந்தார்.
“ உங்களுக்கு எல்லா நாட்களிலும் வாய்ப்பு கிடைக்காது. நீங்களே அதிக வாய்ப்புக்களை உருவாக்கி கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை உபயோகம் செய்பவர்களாக இல்லை. “ என மாலிங்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Photos : Sri Lanka vs South Africa – 2nd ODI
ThePapare.com. | 06/03/2019 | Editing and re-using images without permission of ThePapare.com
“ 30 ஓட்டங்களுக்கு மேல் (எமது துடுப்பாட்ட வீரர்கள்) பெறுவது நல்ல தொடக்கம் கிடையாது. 50 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதே நல்ல தொடக்கம். அதன் பிறகு நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். யாராவது 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று சந்தோஷமாக இருப்பார் என்றால் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது துடுப்பாட்ட வீரர்களில் முதல் ஏழு பேரும் நூறு ஓட்டங்களை பெறும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும். அதுவே, அணியினை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும். “
“ எங்களது பந்துவீச்சாளர்கள் அவர்களை 251 ஓட்டங்களுடன் மடக்கி நல்ல வேலையினை செய்திருந்தனர். துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்த வெற்றி இலக்கு எட்டக்கூடியது என்பது தெரிந்திருக்க வேண்டும். ஆனால், துடுப்பாட்ட வீரர்கள் தங்களது பொறுப்பு என்ன என்பதனை மறந்துவிட்டனர். “
கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அணி, ஒருநாள் போட்டிகளில் ஒரு அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நிகழ்வு, தென்னாபிரிக்க அணியுடனான இந்த போட்டியிலேயே இடம்பெற்றிருந்தது. செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொடர்ந்தும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் சிராஸ்
இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் உள்ளூர் முதல்தரக் கழகங்கள் இடையில் ஏற்பாடு செய்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட
“ இந்த தென்னாபிரிக்க அணி, தோற்கடிக்க மிகவும் கடினமான தரப்புக்களில் ஒன்றாகும். அதேநேரம், போட்டிகள் இடம்பெறுவது அதன் சொந்த மைதானத்தில் வேறு. இன்னும் எமக்கு மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. அப்போட்டிகளில் எம்மால் என்ன செய்ய முடியும் என்பதனை காட்ட ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. நாம் எப்போதும், எமது சிறப்பானதையே கொடுக்க விரும்புகின்றோம். இதேநேரம், அடுத்த மூன்று போட்டிகளும் ஒருநாள் தொடரை தீர்மானிப்பவை என்பதால் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும். “
“ தென்னாபிரிக்க அணி J.P. டுமினியிற்கும், அம்லாவிற்கும் ஓய்வு வழங்கியிருக்கின்ற காரணத்தினால் அவர்களது தரப்பில் டூ பிளேசிஸ், குயின்டன் டி கொக் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய மூன்று அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்களை குறைவான ஓட்டங்களுக்குள் வீழ்த்த முடியும் எனில், எங்களுக்கு 300 ஓட்டங்களுக்குள் ஒரு வெற்றி இலக்கை பெற முடியும். பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு இப்போட்டியில் நாங்கள் அதனையே செய்திருந்தோம். “ என மாலிங்க பேசினார்.
அடுத்ததாக தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் தொடரின் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாட டர்பன் நகருக்கு பயணமாகின்றன. டர்பன் மைதானமும், தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி இடம்பெறும் போர்ட் எலிசபெத் மைதானமும் இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் வரலாறு படைத்த இடங்களாக காணப்படுகின்றன.
இதன் பின்னர், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி கேப் டவுன் மைதானத்தில் இடம்பெறுகின்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க