தொடர்ந்தும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் சிராஸ்

1223

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கையின் உள்ளூர் முதல்தரக் கழகங்கள் இடையில் ஏற்பாடு செய்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (6) மொத்தமாக 11 போட்டிகள் நிறைவடைந்திருந்தன.

பாணதுறை விளையாட்டு கழகம் எதிர் BRC

BRC அணியின் சொந்த மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பாணதுறை அணியை BRC வீரர்கள் மொஹமட் சிராஸின் அதிரடிப்பந்துவீச்சோடு குறைவான ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

தமிழ் யூனியனை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்திய ஜீவன் மெண்டிஸ்

இலங்கை கிரிக்கெட் சபை இலங்கையின் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் கழகங்கள்…

எனினும், போட்டியின் வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய BRC அணி, தமது துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தினால் 62 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்த கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பொலிஸ் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்த மொஹமட் சிராஸ், இப்போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டு கழகம் – 195/9 (45) – அஜித் பஸ்நாயக்க 36, ஷெஹான் வீரசிங்க 30, மொஹமட் சிராஸ் 3/30, விகும் சஞ்சய 3/55

BRC – 133 (36.4) – றமிந்த விஜேசூரிய 38, ஷெஹான் வீரசிங்க 4/34

முடிவு – பாணதுறை விளையாட்டு கழகம் 62 ஓட்டங்களால் வெற்றி

Photos: Panadura SC vs BRC – Major Limited Overs Tournament 2018/19


SSC எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

ஹொரனையில் இடம்பெற்ற இப்போட்டியில் SSC அணி சச்சித்ர சேனநாயக்கவின் அபார சதத்தோடு 82 ஓட்டங்களால் இலங்கை துறைமுக அதிகார சபை அணியை தோற்கடித்தது.

போட்டியின் சுருக்கம்

SSC – 364/8 (50) – சச்சித்ர சேனநாயக்க 150, தசுன் சானக்க 64, சமிந்த பண்டார 4/64, ரனேஷ் பெரேரா 2/60

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 282/7 (50) – கயான் மனீஷன் 97, அதீஷ நாணயக்கார 54, பிரஷான் விக்கிரமசிங்க 48, சச்சித்ர சேனநாயக்க 2/43

முடிவு – SSC அணி 82 ஓட்டங்களால் வெற்றி


NCC எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

NCC அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், NCC அணி லஹிரு உதார (110) மற்றும் பெதும் நிஸ்ஸங்க (100) ஆகியோரின் சதங்களோடு பொலிஸ் அணியினை 166 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்தது.

வரலாற்றை மாற்றவுள்ள றோயல் – தோமியரின் 140ஆவது நீல நிறங்களின் சமர்

உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடரில் 2ஆவது இடத்தை…

போட்டியின் சுருக்கம்

NCC – 340/9 (50) – லஹிரு உதார 110, பெதும் நிஸ்ஸங்க 100, தினேஷ் சந்திமால் 59, தினுக் ஹெட்டியராச்சி 4/53

பொலிஸ் விளையாட்டு கழகம் – 174 (42.1) – கிட்டான்ஸ் கேரா 74, அமித் குமார் 55, அசித்த பெர்னாந்து 5/33

முடிவு – NCC அணி 166 ஓட்டங்களால் வெற்றி

Photos: NCC vs Police SC | Major Limited Overs Tournament 2018/19


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், சிலாபம் மேரியன்ஸ் அணி நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தினை 3 விக்கெட்டுக்களால்  தோற்கடித்தது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 236 (49.5) – லசித் குரூஸ்புள்ள 50, சஹான் ஆராச்சிகே 45, திக்ஷில டி சில்வா 5/42

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 240/7 (47.2) – றிசித் உபமால் 67, புலின தரங்க 54, ரொஷேன் பெர்னாந்து 4/35

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

குருநாகல் வெலகதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழக அணியினை கடற்படை விளையாட்டுக் கழகம் தருஷன் இத்தமல்கொட (127) பெற்றுக்கொண்ட சதத்துடன் 63 ஓட்டங்களால் தோற்கடித்தது.

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 292/9 (50) – தருஷன் இத்தமல்கொட 127, சலித பெர்னாந்து 57, அனுருத்த ராஜபக்ஷ  3/52

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 229 (45.5) –  தினுஷ்க மாலன் 61, தனுஷ்க தர்மசிரி 41, திலங்க அனுவர்த்தன 3/39

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 63 ஓட்டங்களால் வெற்றி


இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

பானகொடவில் இடம்பெற்ற இப்போட்டியில் இராணுவப்படை அணி, கண்டி சுங்க கிரிக்கெட் கழகத்தினை 261 ஓட்டங்களால் அபாரமாக தோற்கடித்து.

Photos: Army SC vs Kandy Customs CC | Major Limited Overs Tournament 2018/19

இராணுவப்படை அணியின் வெற்றியினை அஷான் ரன்திக்க 108 ஓட்டங்களுடன் உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 388/7 (50) – அஷான் ரன்திக்க 108, ஜனித் சில்வா 56, துஷான் விமுக்தி 50, விமுக்தி உமகில்லியகே 3/65, சுமேத திஸாநாயக்க 2/68

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 127 (28.5) – நிம்னக்க ரத்னாயக்க 36, சீக்குகே பிரசன்ன 4/34, தனுஷிக்க பண்டார 3/25

முடிவு – இராணுவப்படை அணி 261 ஓட்டங்களால் வெற்றி

அனுபவத்திற்கும் – இளமைக்கும் இடையிலான 113ஆவது வடக்கின் பெரும் சமர்

வட மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்திய…

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் லங்கன் கிரிக்கெட் கழகத்தினை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

Photos: Lankan CC vs CCC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 225/8 (50) – சானக்க ருவன்சிரி 67,கீத் குமார 58, மதுரங்க சொய்ஸா 46, வனின்து ஹஸரங்க 4/47

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 226/6 (36.5) – வனின்து ஹஸரங்க 85*, டில்ஷான் முனவீர 64, துலன்ஞன மெண்டிஸ் 3/41

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி


றாகம கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டு கழகம்

விமானப்படை அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், றாகம கிரிக்கெட் கழகம் 142 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்தது. இப்போட்டியில் றாகம தரப்பில், தேசிய கிரிக்கெட் அணி வீரரான ரொஷேன் சில்வா 68 ஓட்டங்களை குவித்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் – 300/4 (50) – ஷெஹான் பெர்னாந்து 79, ரொஷேன் சில்வா 68*, தினேத் திமோத்ய 59, சுமிந்த லக்‌ஷான் 2/41

விமானப்படை விளையாட்டு கழகம் – 158 (39.5) – சுமிந்த லக்ஷான் 36, நிஷான் பீரிஸ் 4/33, சத்துர பீரிஸ் 3/21

முடிவு – றாகாம கிரிக்கெட் கழகம் 142 ஓட்டங்களால் வெற்றி


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

காலி சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் புளூம்பீல்ட் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 139 (36.2) – அசெல் சிகெரா 35, அசந்த சிங்கப்புலி 28, ரஜீவ் வீரசிங்க 3/25, கயான் சிறிசோம 2/18

காலி கிரிக்கெட் கழகம் – 142/3 (32.5) – தமித்த ஹணுகும்பர 54*, ஹர்ஷ விதான 41*

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி


சரசென்ஸ் விளையாட்டு கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

மக்கொனவில் இடம்பெற்ற இப்போட்டியில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம், 129 ஓட்டங்களால் அபார வெற்றியினை பெற்றுக் கொண்டது.

Photos: Badureliya CC vs Saracens SC | Major Limited Overs Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

சரசென்ஸ் விளையாட்டு கழகம் – 278/8 (50) – கமிந்து கனிஷ்க 94, நிப்புன் கருணாநாயக்க 45, நுவான் துஷார 3/52, சச்சித் பத்திரன 2/54

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 149 (37.5) – லஹிரு சமரக்கோன் 40, தெனுவன் ராஜகுர்ன 28, அஷென் பண்டார 4/17, ரவீன் சயேர் 3/19

முடிவு – சரசென்ஸ் கிரிக்கெட் கழகம் 129 ஓட்டங்களால் வெற்றி

சதத்தின் மூலம் பல சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார் விராட் கோஹ்லி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று (05) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில்…

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

கோல்ட்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், கோல்ட்ஸ் அணி சங்கீத் கூரேயின் (107) சதத்தோடு 73 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Photos: Kalutara Town Club vs Colts CC – Major Limited Overs Tournament 2018/2019

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 280/7 (45) – சங்கீத் கூரே 107, ஹஷான் துமின்து 50, சதீர சமரவிக்ரம 45, எரங்க ரத்னாயக்க 5/46

களுத்துறை நகர கழகம் – 207 (44.5) – நிபுன கமகே 46, விஷாத் ரன்திக்க 2/21

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 73 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<