இலங்கையின் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு எதிரான 2019 AFC கிண்ண தகுதிகாண் பிளேஓப் சுற்றுக்காக, இரு தடவை இந்திய சுப்பர் லீக் சம்பியன்களான சென்னையின் கால்பந்து கழகத்தின் 25 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழாத்தில் இந்தியன் சுப்பர் லீக் தொடரில் தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட சென்னையின் அணியில் இடம்பெறாத உள்ளூர் நட்சத்திரம் தன்பால் கனேஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
AFC கிண்ண பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெற்ற கொழும்பு கால்பந்து கழகம்
பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணிக்கு எதிராக AFC கிண்ண ஆரம்ப சுற்றின் இரண்டாம் கட்ட போட்டியில் 2-1 என்ற கோல்கள்……
இரண்டு கட்டங்களைக் (Legs) கொண்ட இந்த தகுதிகாண் போட்டியில் சென்னையின் கால்பந்து கழகம் தனது சொந்த மைதானத்திற்கான போட்டியை அஹமதாபாத்தின் டிரான்ஸ் அரங்கில் ஆடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால் தமிழ் நாட்டில் இலங்கையர்களுடன் ஆடுவது உகந்ததல்ல என்று கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2017-18 இந்தியன் சுப்பர் லீக் தொடரில் வெற்றி பெற்ற சென்னையின் அணி AFC கிண்ணத்தில் ஆடுவது இது முதல் முறையாகும். அந்த அணி தெற்காசிய வலய போட்டியில் இணைக்கப்பட்டுள்ளது. 2019 AFC கிண்ணத்தின் குழு நிலை போட்டிகளில் இடம்பிடிப்பதற்காகவே இந்த இரு அணிகளும் தகுதிகாண் போட்டியில் ஆடவுள்ளன.
ஆரம்பக் கட்ட சுற்றில் கொழும்பு அணி பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடெட் அணியை 9-2 என்ற மொத்த கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்படி சென்னையின் கால்பந்து கழகத்திற்கும் கொழும்பு கால்பந்து கழகத்திற்கும் இடையிலான முதல் கட்டப் போட்டி கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில் இம்மாதம் (மார்ச்) 6 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. சென்னையின் சொந்த மைதானத்திலான போட்டி வரும் மார்ச் 13 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
- மார்ச் 6 – கொழும்பு கா.க. எதிர் சென்னை கா.க. – மாலை 3:30 – ரேஸ்கோஸ் அரங்கு
- மார்ச் 13 – சென்னையின் கா.க. எதிர் கொழும்பு கா.க. – இரவு 7:30 – அஹமதாபாத், டிரான்ஸ் அரங்கு
Photos: Colombo FC v Transport United | 1st Leg | Preliminary Stage | AFC Cup 2019
ThePapare.com | Dinushki Ranasinghe | 20/02/2019 | Editing and re-using images without permission of ThePapare.com…….
வீரர்கள் பரிமாற்றத்தின் ஊடே கடந்த ஜனவரியில் சென்னையின் அணியில் இணைந்த அவுஸ்திரேலிய வீரரான கிறிஸ் ஹேர்ட், பிரேசிஸ் வீரர்களான மெயில்சன் அல்வேஸ், எலி சாபியா மற்றும் ரபேல் அகஸ்டோவுடன் அந்த கழகத்துடன் ஆடவுள்ளார்.
நான்கு இளையோர் அணி வீரர்களும் இந்த குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்கள வீரர் ஹென்ட்ரி அண்டோனாய் (18 வயதுக்கு உட்பட்ட மற்றும் B அணி), 2018-19 இந்தியன் சுப்பர் லீக்கில் முதன்மை அணியில் ஆடிய மத்திய களத்தின் சொனுன்மாவியா (B அணி), பின்கள வீரர் ரீம்சொச்சங் அய்மோல் (B அணி) மற்றும் முன்கள வீரர் பவுல்டே ரோமிங்தங்கா (B அணி) ஆகிய வீரர்களே இவ்வறு சேர்க்கப்பட்டுள்ளனர்.
2018-19 இந்தியன் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த வியாழக்கிழமை கோவா அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னையின் அணி AFC கிண்ணத்திற்காக கோவாவிலேயே தயார்படுத்தல்களில் ஈடுபட்டது. இந்நிலையில் அந்த அணி இன்று (மார்ச் 4) இலங்கை வருகிறது.
டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் டிபெண்டர்ஸ் வசம்
கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற சம்பியன் அணியை தீர்மானிக்கும் டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் 17…….
சென்னையின் கா.க. குழாம்
கோல்காப்பாளர்கள் – கரன்ஜித் சிங், சஞ்சிபான் கோஷ், நிக்கில் பெர்னாட்
பின்கள வீரர்கள் – மெயில்சன் அல்வேஸ் (பிரேசில்), எலி சாபியா (பிரேசில்), சொஹ்மிங்லியானா ரல்டே, ஜெர்ரி லல்சுவாலா, லால்டின்லியானா ரென்திலாய், டொன்டொன்பா சிங், ஹென்ட்ரி அன்டொனாய், ரீம்சொசுங் அய்மோல்
மத்தியகள வீரர்கள் – கிறிஸ் ஹேர்ட் (அவுஸ்திரேலியா), அனிருத் தம்பா, ஜெர்மன்பிரீத் சிங், தன்பால் கனேஷ், ரபேல் அகஸ்டோ (பிரேசில்), தொய் சிங், பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ், இசாக் வன்மல்சோமா, ஹலிசரன் நர்சாரி, சனுன்பாவியா
முன்கள வீரர்கள் – ஜேஜே லால்பெக்லுவா, சீ.கே. வினீத், மொஹமட் ராபி, போல்டே ரொஹ்மிங்தங்கா