19 ஆவது வீரர்களின் சமரில் ஸ்கந்தவரோதயா கல்லூரி முன்னிலையில்

132

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான “வீரர்களின் சமர்” என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் சமர், இவ்வருடம் 125 ஆவது ஆண்டு விழாக்காணும்  ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நேற்று (1), ஆரம்பமானது.

இதுவரை இடம்பெற்ற 18 சமர்களில், 9 சமநிலை முடிவுகள், மகாஜனா கல்லூரி  5 வெற்றிகள் ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 வெற்றிகள் என்ற முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வீரர்களின் சமரில் கடைசி வெற்றியினை 2016 ஆம் ஆண்டில் மகாஜன கல்லூரி பதிவு செய்திருந்த அதேவேளை, ஸ்கந்தவரோதயா கல்லூரி 2014 இல் இறுதி வெற்றியினை பதிவு செய்துள்ளது.

புனிதர்களின் சமரின் முதல் நாளில் புனித ஜோசப் கல்லூரி ஆதிக்கம்

இந்த பருவகாலத்தின் ஆரம்பத்தில் வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கிண்ணத்தினை கைப்பற்றியதுடன், யாழின் முன்னணி பாடசாலைகளுக்கும் பலத்த சவாலை விடுத்திருந்தனர். மறுபக்கம், இளைய வீரர்களுடன் அனுபவமற்ற அணியாக களமிறங்கும் மகாஜனவிடமிருந்து கிண்ணத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் களமிறங்கியிருந்தனர் ஸ்கந்தவரோதயன்கள்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயா கல்லூரியின் தலைவர் தனுசனால் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணிக்கப்பட்ட மகாஜன கல்லூரியினர் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

Photos: Skandavarodhaya College vs Mahajana College | 19th Battle of the Heroes – Day 01

தொடர்ந்தும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட 101 ஓட்டங்ளுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர் மகாஜனன்கள். மத்திய வரிசையில் கிருசன்,வரலக்சன் ஜோடி சிறப்பான இணைப்பாட்டமொன்றினை கட்டியெழுப்ப வலுவானதொரு ஓட்ட எண்ணிக்கையினை நோக்கி மகாஜன கல்லூரி நகர்ந்தது.

134 ஓட்டங்களை பெற்றிருக்கையில் மாகாஜனவின் 6 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. டான்சன் அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை சாய்க்க 10 ஓட்ட இடைவெளியில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர் விருந்தினர்கள்.

144 என்ற குறைவானதொரு ஓட்ட எண்ணிக்கையினை மகாஜன கல்லூரி பெற, பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த ஸ்ந்தவரோதயா கல்லூரிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டிலக்சன் அதிரடியாக அரைச்சதம் கடந்து சிறப்பானதொரு ஆரம்பத்தினை வழங்கினார்.

தொடர்ந்துவந்த வீரர்களை மகாஜனவின் பந்துவீச்சாளர்கள் விரைவாக ஆட்டமிழக்க செய்ய ஸ்கந்தா வீரர்கள் 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தனர்.

பிரசன் 25 ஓட்டங்களையும் சோபிதன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மாகாஜன கல்லூரியை விட ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியினர் முன்னிலை பெற்றனர்.

43 ஓவர்களில் 7 விக்கெட்.டுக்களை இழந்து 180 ஓட்டடங்களினை பெற்று ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கையில், முதலாவது நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

களத்தில் கலிஸ்ரன்,டான்சன் ஜோடி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்க, ஸ்கந்தவரோதயா கல்லூரி 36 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

பந்து வீச்சில் நம்பிக்கை கொடுத்த சதுர்ஜன் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டால் 5 வருட சிறைத்தண்டணை: ஹரீன்

இன்று போட்டியின் இறுதி நாளான இரண்டாவது நாள் ஆட்டம் இடம்பெறும்.

“வீரர்களின் சமர்” தொடர்பான புகைப்படங்கள், நேரடி ஒட்ட விபரங்கள் (Live score) சிறப்பு தகவல்கள் மற்றும் போட்டி அறிக்கை ஆகியவற்றிற்கு Thepapare.com உடன் இணைந்திருங்கள்.

போட்டியின் சுருக்கம்

மகாஜன கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 144 (49.4) – கிருசன் 31, வரலக்சன் 25, டான்சன் 4/06, டிலக்சன் 2/19, அமிர்தசரதன் 2/20

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 180/7 (43) – டிலக்ஸ்ஷன் 51, பிரசன் 25, சதுர்ஜன் 4/37

முதலாவது நாள் ஆட்ட நிறைவில் 36 ஓட்டங்களால் ஸ்கந்தவரோதயா கல்லூரி முன்னிலை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<