டி-20 அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய சுரேஷ் ரெய்னா

315
Image Courtesy - Getty

இருபதுக்கு – 20 போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை இந்திய அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.  

சையத் முஸ்தாக் அலி கிண்ண இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நேற்று (25) நடைபெற்ற லீக் ஆட்டத்தில்பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசம்புதுச்சேரி அணிகள் மோதின.

இறுதிப் பந்தில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த அவுஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில்….

போட்டியில் முதலில் துடுப்பாடிய உத்தரபிரதேச அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் 180 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் உத்தரபிரதேச அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய இந்திய அணியின் சிரேஷ்ட வீரரான சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பௌண்டரியுடன் 12 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 11 ஓட்டங்களை எட்டிய போது சுரேஷ் ரெய்னா டி-20 கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து) 8,000 ஓட்டங்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தனது 300ஆவது டி-20 போட்டியில் விளையாடிய அவர், 8,001 ஓட்டங்களைக் குவித்தார். உலக அளவில் டி-20 போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 6ஆவது இடத்தில் உள்ளார்.

அத்துடன், 300ஆவது டி-20 போட்டியில் விளையாடிய 2ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் ரெய்னா பெற்றார். இதற்கு முன் டோனி 300 போட்டிகளில் விளையாடியுள்ளார்.   

வரலாறு படைத்த டெஸ்ட் வீரர்கள் இலங்கை வருகை

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள்…

மேலும், இதுவரை அவர் விளையாடியுள்ள டி-20 போட்டிகளில் 300 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். இந்த மைல்கல்லை ரோஹித் சர்மாவுக்கு பின் ரெய்னா அடைந்துள்ளார். டி-20 போட்டிகளில் கிறிஸ் கெயில் 905 சிக்ஸர்களையும், அதைத் தொடர்ந்து கிரென் பொல்லார்ட் 572 சிக்ஸர்களையும், பிரென்டன் மெக்கலம் 485 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய டி-20 மற்றும் ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அதிலும் ரெய்னா கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

இதேநேரம், மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 12,298 ஓட்டங்களையும் (369 போட்டிகள்), நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் 9,922 ஓட்டங்ளையும் (370 போட்டிகள்), மேற்கிந்திய தீவுகளின் கிரென் பொல்லார்ட் 8,838 ஓட்டங்களையும் (451 போட்டிகள்), பாகிஸ்தானின் சொயிப் மலிக் 8,603 ஓட்டங்களையும் (340 போட்டிகள்), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 8,111 ஓட்டங்களையும் (259 போட்டிகள்) குவித்து முறையே முதல் 5 இடங்களில் உள்ளனர்.

இதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார 264 போட்டிகளில் விளையாடி 6850 ஓட்டங்களைக் குவித்து 15ஆவது இடத்தில் உள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<