இலங்கையில் உள்ள முன்னணி 24 கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 லீக்கின் 12 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதில், இன்று காலை (21) ஆரம்பமான ஆறு போட்டிகளின் முடிவுகள் இதோ…
Photo Album : NCC v Saracens SC – Major T20 Tournament 2018/19
இலங்கை துறைமுக அதிகாரசபை எதிர் குருணாகல் யூத் கிரிக்கெட் கழகம்
கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்ற துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிரான போட்டியில், தனுஷ்க தர்மசிறியின் தனிப்பட்ட போராட்டத்தின் உதவியுடன் குருணாகல் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Photos: SL Ports Authority SC vs Kurunegala Youth CC | Major T20 Tournament 2018/19
போட்டி சுருக்கம்
துறைமுக அதிகாரசபை அணி – 142/6 (20), ப்ரிமோஷ் பெரேரா 39 (37), ப்ரஷான் விக்ரமசிங்க 31 (20), லஹிரு ஜயரத்ன 8/2
குருணாகல் யூத் அணி – 145/9 (19.4), தனுஷ்க தர்மசிறி 67 (50), அனுருத்த ராஜபக்ஷ 16 (16), செஹான் நிசாங்க 31/3
முடிவு – குருணாகல் யூத் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற றாகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் சீகுகே பிரசன்ன இறுதிவரை போராடி அதிரடியை வெளிப்படுத்திய போதும், இராணுவப்படை அணி 10 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
போட்டி சுருக்கம்
றாகம கிரிக்கெட் கழகம் – 160/7 (20), செஹான் பெர்னாண்டோ 72 (46), ஜனித் லியனகே 25 (16), ஜனித் சில்வா 24/2
இலங்கை இராணுவப்படை அணி – 150/10 (18.3), சீகுகே பிரசன்ன 76 (30), லக்ஷித மதுஷான் 22 (25), இஷான் ஜயரத்ன 28/3, செஹான் நாணயக்கார 30/3
முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
SSC எதிர் பாணந்துறை விளையாட்டு கழகம்
பனாகொடை இராணு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற SSC அணிக்கு எதிரான போட்டியில், அபார துடுப்பாட்ட வெளிப்படுத்தலில் உதவியுடன் பாணந்துறை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டி சுருக்கம்
SSC அணி – 163/5 (20), தசுன் சானக 55 (36), கவிந்து குலசேகர 39 (37), மிஷான் சில்வா 30/2
பாணந்துறை விளையாட்டு கழகம் – 164/6 (19.3), செஹான் வீரசிங்க 47 (33), விஷ்வ சதுரங்க 44 (40), தருஷ பெர்னாண்டோ 30* (35), தரிந்து ரத்நாயக்க 17/3
முடிவு – பாணந்துறை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
NCC எதிர் சோனகர் விளையாட்டு கழகம்
கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற NCC அணிக்கு எதிரான போட்டியில், 147 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கிய, சோனகர் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Photos: NCC vs Moors SC | Major T20 Tournament 2018/19
போட்டி சுருக்கம்
NCC அணி – 146/9 (20), லஹிரு உதார 37 (23), தினேஷ் சந்திமால் 35 (36), தரிந்து கௌஷால் 23/3
சோனகர் விளையாட்டு கழகம் – 147/7 (19.3), சரித குமாரசிங்க 37, சாமர சில்வா 23, ரமேஷ் மெண்டிஸ் 29 (30), மாலிங்க அமரசிங்க 41/2
முடிவு – சோனகர் விளையாட்டு கழகம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
ப்ளூம்ஃபீல்ட் மைதாகத்தில் நடைபெற்ற கண்டி சுங்க கிரிக்கெட் கழக அணிக்கு எதிரான போட்டியில், காலி கிரிக்கெட் கழக அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Photos: Galle CC vs Kandy Customs SC | Major T20 Tournament 2018/19
போட்டி சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் – 181/5 (20), சமீன் கந்தநியராச்சி 91 (57), நிஷால் ரந்திக 29 (27), சுமேத திசாநாயக்க 35/2
கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 168/9 (20), டி விஜேசிறி 54 (38), எச். ஹென்னாநாயக்க 44 (35), கயான் சிறிசோம 36/3
முடிவு – காலி கிரிக்கெட் கழக அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொழும்பு கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில்….
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்
பொலிஸ் விளையாட்டு கழகத்துக்கு எதிராக BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Photos: Chilaw Marians CC vs Police SC | Major T20 Tournament 2018/19
போட்டி சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் – 209/8 (20), புலின தரங்க 56 (24), தக்ஷில டி சில்வா 51 (29), சரித் ராஜபக்ஷ 44/4
பொலிஸ் விளையாட்டு கழகம் – 98/10 (19), கமல் புஷ்பகுமார 25 (45), நிமேஷ் விமுக்தி 10/5, புலின தரங்க 22/3
முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி