கொழும்பு கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க

195

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் T-20 லீக் தொடரின் மேலும் ஆறு போட்டிகள் இன்று (18) மாலை நடைபெற்றன.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியை, வனிந்து ஹசரங்கவின் அபார பந்துவீச்சின் மூலமாக கொழும்பு கிரிக்கெட் கழகம் வெற்றிகொண்டது.

மேஜர் T20 யில் அதிரடியை வெளிப்படுத்திய ஜீவன், சீகுகே மற்றும் பானுக

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 211 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 211/8 (20) – டில்ஷான் முனவீர 82, லஹிரு மதுஷங்க 51, மினோத் பாணுக்க 36, சஹன் அதீஷ 3/51, ரொஷேன் பெர்னாண்டோ 2/32, உபுல் இந்திரசிறி 2/35

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 93 (15.3) – பிரசன்ன ஜயமான்ன 39, வனிந்து ஹசரங்க 5/26, லஹிரு கமகே 2/5, மாலிந்த புஷ்பகுமார 2/22

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 118 ஓட்டங்களால் வெற்றி

Photos: CCC vs Negombo CC | Major T20 Tournament 2018/19


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில், கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

Photos: Lankan CC vs Kandy Customs SC | Major T20 Tournament 2018/19

போட்டியில் முதலில் துடுப்பாடிய லங்கன் கிரிக்கெட் கழகம் நிர்ணயித்த 203 ஓட்டங்களை நோக்கி துடுப்பாடிய கண்டி சுங்க அணி, 20 ஓவர்களில் 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 203/3 (20) – மதுரங்க சொய்ஸா 76*, எஸ். கங்கானங்கே 58, சானக்க ருவன்சிறி 55

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 108/8 (20) – புத்திக பிரசாத் 35, டி சுரவீர 17, சிப்ரான் முத்தலிப் 3/28, கீத் குமார 2/21

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 95 ஓட்டங்களால் வெற்றி

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரனித்த லியனாரச்சியின் அரைச்சதத்தின் உதவியுடன் சரசென்ஸ் கழகம், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மலிந்த

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 162/6 (20) – ரமேஷ் மெண்டிஸ் 67, பபசர வதுகே 25, சாமர சில்வா 22, மொஹமட் டில்ஷாட் 2/23, சாலிய சமன் 2/38

சரசெனஸ் விளையாட்டுக் கழகம் – 163/4 (18.4) – ரனித்த லியனாரச்சி 68, அஷேன் பண்டார 42*

முடிவு – சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி


களுத்துறை நகர கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

களுத்துறை நகர கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில், பொலிஸ் விளையாட்டுக் கழகம் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொலிஸ் விளையாட்டுக் கழகம் நிர்ணயித்த 162 ஓட்டங்களை நோக்கி துடுப்பாடிய களுத்துறை நகர கழகம், 105 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

Photos: Police SC vs Kalutara Town Club | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 162/5 (20) – மாலிங்க மாலிகஸ்பே 62*, பவன் டயஸ் 45, மஞ்சுள ஜயவர்தன 25, மதீஷ பெரேரா 3/30

களுத்துறை நகர கழகம் – 105 (18) – எரங்க ரத்னாயக்க 31, சனத் ரன்ஜன் 3/25, மஹேஷ் பிரியதர்ஷன 2/12, அஜந்த மெண்டிஸ் 2/13

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 57 ஓட்டங்களால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

BRC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சினை வெளிக்காட்டியிருந்த ராகம கிரிக்கெட் கழகம் 48 ஓட்டங்களால் விமானப்படை கழகத்தை வீழ்த்தியது.

Photos: Ragama CC vs Air Force SC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் – 152/8 (20) – ரொஷேன் சில்வா 42, சுபேஷல ஜயதிலக்க 23, ஷெஹான் சந்தருவன் 20, சம்பத் பெரேரா 2/18, உமேக சதுரங்க 2/24

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 104 (19.1) – ரவிந்து செம்புக்குட்டிகே 25, உதயவன்ச பராக்ரம 21, ஜனித் லியனகே 2/7, நிஷான் பீரிஸ் 2/9, அமில அபோன்சோ 2/20

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 48 ஓட்டங்களால் வெற்றி


கடற்படை விளையாட்டுக் கழகம் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில், ரன்தீர ரணசிங்க பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுக்களால் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் வெற்றி பெற்றது.

Photos: Navy SC v Kurunegala Youth CC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 158/7 (20) – தரூஷன் இத்தமல்கொட 39, துஷார மதுஷங்க 34, சாலித பெர்னாண்டோ 32, சந்திம விஜேபண்டார 2/19, தினுஷ்க மாலன் 2/26

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 162/5 (19.2) – ரன்தீர ரணசிங்க 50, தமித் பெரேரா 34*, புத்திக மதுஷான் 2/27

முடிவு – குருநாகல் இளைளோர் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க