அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியைச் சேர்ந்த ரெய்லி மெரிடித் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒரு பந்தில் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த அபூர்வ சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தமிம் இக்பாலின் சதத்தோடு சம்பியனாக நாமம் சூடிய கொமில்லா விக்டோரியன்ஸ்
ஆறாவது முறையாக இந்த ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டியில்
8ஆவது பிக் பேஷ் லீக் டி-20 தொடர் தற்போது அவுஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் கடந்த வியாழக்கிழமை (07) நடைபெற்ற 52ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹோபார்ட் அணி, அணித் தலைவர் மெதிவ் வேட்ஸின் அரைச்சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டகளைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு ஆரோன் பிஞ்ச் மற்றும் மார்கஸ் ஹரிஸ் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க, முதலாவது ஓவரை தஸ்மானியாவைச் சேர்ந்த 22 வயதான வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ரெய்லி மெரிடித் வீசினார்.
முதல் இரு பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் பந்துவீசிய ரெய்லி, 3ஆவது பந்தை நோ – போல் (No-Ball) பந்தாக வீசினார். அடுத்த பந்தை அகலப் (Wide) பந்தாக வீச அது விக்கெட் காப்பாளரிடம் இருந்து விலகிச் சென்று பௌண்டரியை தொட்டது. இதனால், மெல்பேர்ன் அணிக்கு 6 ஓட்டங்கள் கிடைத்தது.
அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மீண்டும் அவர் நோ – போலாக வீசியதுடன், அதை ஆரோன் பிஞ்ச் பௌண்டரி எல்லையை நோக்கி அடித்தார். மீண்டும் மூன்றாவது பந்தை வீசியிருந்த ரெய்லி மெரிடித், அதுவும் நோ – போல் பந்தாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தை ஆரோன் பிஞ்ச்சுக்கு வீச மீண்டும் அதை பௌண்டரி எல்லையை நோக்கி விரட்டினார். இதனால் மூன்றாவது பந்தில் 16 ஓட்டங்களை அந்த அணி பெற்றுக்கொண்டது.
இந்திய அணிக்கெதிரான ஆஸி. குழாம் அறிவிப்பு
இந்திய அணியுடான இரு தொடர்களுக்குமான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் குழாம் இன்று
இதன்பிறகு, ரெய்லி வீசிய பந்துக்கு ஒரு ஓட்டம் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டது. எனவே முதலாவது ஓவரில் 3 பந்துகள் வீசி முடிப்பதற்குள் அவர் 3 நோ – போல்களையும், ஒரு வைட்டையும் வீசி 3 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 17 ஓட்டங்களை எதிரணிக்கு வாரி வழங்கினார்.
17 runs… FROM ONE BALL ?
This Bucket Ball bonanza was the worst start to the innings the Hurricanes could imagine.@KFCAustralia | #BBL08 pic.twitter.com/FfS7svQXpm
— KFC Big Bash League (@BBL) February 7, 2019
எனினும், 4ஆவது பந்துவரை 10 தடவைகள் அவர் பந்து வீசினார். தொடர்ந்து 5ஆவது பந்தில் ஒரு ஓட்டம் மற்றும் 6ஆவது பந்தில் மேலும் ஒரு பௌண்டரி என பெற்றுக்கொள்ள முதலாவது ஓவரில் மெல்பேர்ன் ரெனகேட்ஸ் அணி 23 ஓட்டங்களைக் குவித்தது.
இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டுடன் 43 ஓட்டங்களை ரெய்லி மெரிடித் விட்டுக் கொடுத்தாலும், இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக மெதிவ் வேட் தெரிவானார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க