இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு B உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட மேஜர் ப்ரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (8) நிறைவடைந்ததோடு நேற்று முடிவுற்ற ஒரு போட்டியில் புளூம்பீல்ட் அணி வெற்றி பெற்றது.
SSC கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த சச்சித்ர சேனநாயக்க
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில்…
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழம்
கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. ஒரு இன்னிங்ஸ் மாத்திரமே ஆடப்பட்ட இந்தப் போட்டியில் பொலிஸ் அணிக்காக இந்திய வீரர் உதே கவுல் சதம் பெற்றதோடு காலி அணியின் சமீன் கந்தனாரச்சி சதம் குவித்தார்.
போட்டியின் சுருக்கம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 359 (139.5) – உதே கவுல் 158, பவன் டயஸ் 64, சச்சித் மதுஷ்க 56, கயான் சிறிசோம 5/101, ரஜீவ வீரசிங்க 3/88
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 290/9 (104.5) – சமீன் கந்தனாரச்சி 105, நிஷாத் ரன்திக்க 47, தினுக்க ஹெட்டியாரச்சி 5/90, மாலிக் அப்தாப் 2/56
முடிவு: போட்டி சமநிலையில் முடிவு
விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்
விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கீத் குமாரவின் அபார சதத்தின் மூலம் லங்கன் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸிற்கான புள்ளிகளை வென்றபோதும் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
விமானப்படை அணி முதல் இன்னிங்ஸில் 315 ஓட்டங்களை பெற்றதோடு கீத் குமாரவின் 128 ஓட்டங்களின் உதவியோடு லங்கன் அணி 330 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.
போட்டியின் சுருக்கம்
விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 315 (93.5) – கௌஷல்ய கஜசிங்க 75, சானுக்க விஜேசிங்க 57, துலஞ்சன மெண்டிஸ் 4/78, ஷிப்ரான் முத்தலிப் 2/36
லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 330 (118.2) – கீத் குமார 128, சஞ்சுல அபேவிக்ரம 82, ரவிந்து சஞ்சன 4/87, உமேக சதுரங்க 2/70
விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 219/6 (55) – சச்சிக்க உதார 50, ரொஸ்கோ தட்டில் 46, துலஞ்சன மெண்டிஸ் 3/41
முடிவு: போட்டி சமநிலையில் முடிவு
புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்
முதல் இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்ட புளூம்பீல்ட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்டு பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
204 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் புளூம்பீல்ட் அணிக்காக நுவன் ஜயவர்தன ஆட்டமிழக்காது 109 ஓட்டங்களை பெற்று அந்த அணிக்கு இலகு வெற்றி ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 156 (47.4) – வினோத் பெரேரா 43, இம்ரான் கான் 5/36, அரவிந்த பிரேமரத்ன 2/26, ஷாலுக சில்வா 2/27
புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 147 (34.1) – சதுரங்க திகும்புர 46, நுவன் கவிகார 7/37
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 194 (43.4) – காசிவ் நவீன் 60, செஹான் வீரசிங்க 45*, மதுஷன் ரவிச்சந்திரகுமார் 5/54, அரவிந்த பிரேமரத்ன 3/30
புளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 206/3 (53.3) – நுவன் ஜயவர்தன 109*, சனோஜ் தர்ஷிக்க 67*, செஹான் வீரசிங்க 3/64
முடிவு: புளூம்பீல்ட் 7 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<