அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ரிக்கி பொன்டிங்

429
Getty Images

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் டேவிட் சாகர் தனது பதவியினை இராஜினமா செய்ததனை அடுத்து, எதிர்வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட  வீரர் ரிக்கி பொன்டிங் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்காக தனது தலைமையில் இரண்டு உலகக் கிண்ணங்களை (2003, 2007) வென்று கொடுத்திருக்கும் ரிக்கி பொன்டிங், அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியை இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிரான தொடர்களின் பின்னர் (அதாவது கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இருந்து) எடுத்துக்கொள்வார் எனக் கூறப்படுகின்றது.

ஆஸி. கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் திடீர் இராஜனாமா

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரதி பயிற்றுவிப்பாளரும், வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளருமாக செயற்பட்டுவந்த

இதேநேரம் அவுஸ்திரேலிய அணியினை ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக தயார்படுத்தும் பொறுப்பு அதன் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேம் சிக் இடமே தரப்பட்டிருப்பதால், ரிக்கி பொன்டிங் தன்னுடைய உதவி பயிற்சியாளர் வேலைகளின் போது அவுஸ்திரேலியாவின் ஒரு நாள் அணியின் துடுப்பாட்டத்தையே பலப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.

ரிக்கி பொன்டிங் தனது புதிய பொறுப்பு பற்றி பேசும் போது, “ நான் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்துடன் அணியின் பயிற்சி குழாமில் இணைவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதற்கு முன்னர் ஒரு நாள் அணியிலும், T20 அணியிலும் குறுகிய இடைவெளிகளில் கடமை புரிந்ததும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால், உலகக் கிண்ணம் ஒரு வித்தியாசமான அர்த்தத்தினை தரும் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்னர் ரிக்கி பொன்டிங் அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளிலும் குறுகிய இடைவெளிகளில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத் தொடர் அடங்கலாக இதுவரையில் 375 ஒரு நாள் போட்டிகளுக்கு மேல் ஆடிய அனுபவத்தை ரிக்கி பொன்டிங் கொண்டிருப்பதனால், அவர்  அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக மாறுவது ஒரு நாள் போட்டிகளாக நடைபெறும், கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு மிகவும் பலம்சேர்க்கும் விடயமாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் சிரேஷ்ட பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் மகிழ்ச்சியுடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.