இந்தியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஐ.சி.சி யின் முக்கியமான இரு தொடர்கள் அங்கிருந்து மாற்றப்படாது என ஐ.சி.சி யின் தலைமை நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.சி.சி அந்தஸ்து கொண்டு நாடுகள் அனைத்தையும் ஒன்றினைத்து, ஐ.சி.சி உலகக் கிண்ண போட்டி, ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டி, ஐ.சி.சி டி20 உலகக் கிண்ண போட்டி என முக்கிய மூன்று கிரிக்கெட் தொடர்களை நடாத்தி வருகின்றது.
கோஹ்லி இல்லாத இந்தியாவை 92 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள்…
ஆரம்பத்தில் டி20 உலகக் கிண்ண போட்டிகள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வந்தது. இருந்தாலும் 2016ஆம் ஆண்டிலிருந்து இந்த போட்டியும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலே மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் (2019) ஐ.சி.சி யினுடைய உலகக் கிண்ண போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 2020ஆண்டு ஐ.சி.சி டி20 உலக் கிண்ண போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
பின்னர் ஐ.சி.சி யினுடைய அடுத்த போட்டியான ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டி 2021ஆம் ஆண்டு இந்தியாவிலும், அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டியும் இந்தியாவில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ண போட்டிகளானது இந்தியாவில் நடைபெற்றிருந்தது. இதன் போது பெறப்பட்ட வருமானத்திற்கு இந்திய மத்திய அரசு வரிவிலக்கு அளிப்பதற்கு மறுத்திருந்தது.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இந்திய ரூபாய் படி 161 கோடி நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து, குறித்த தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தங்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவித்திருந்தது.
மாறாக குறித்த நட்டம் ஏற்பட்ட இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி யினுடைய போட்டிகளான, 2021ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண போட்டி மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டி என்பவற்றை அங்கு நடாத்த முடியாது என ஐ.சி.சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா சென்றுள்ள ஐ.சி.சி யினுடைய தலைமை நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சன் டெல்லியில் நேற்று முன்தினம் (31) நடைபெற்ற நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.
‘சர்வதேச கிரிக்கெட் பேரவை நடாத்தும் உலக நாடுகள் அனைத்தும் பங்குபற்றும் சகல போட்டிகளுக்கும் வரிவிலக்கு பெறுவது உலக கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் பேரவை பெறும் ஒவ்வொரு துளி வருமானமும் மீண்டும் விளையாட்டுக்கே செலவிடப்படுகின்றது.’
‘இவ்வாறு கிடைக்கும் நிதியை கொண்டு கிரிக்கெட் விளையாட்டில் போதியளவு வருமானம் இல்லாத மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கு உதவுகின்றோம். இந்தியாவில் நடாத்த திட்டமிட்டுள்ள குறித்த இரண்டு ஐ.சி.சி யினுடைய தொடர்களையும் அங்கிருந்து வேறு நாட்டுக்கு மாற்றும் திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றேன்.’
நாட்டுக்காக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவேன் – அர்ஜுன
இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் வெற்றி பெற்றால் நாட்டின் நலனை மாத்திரம்…
‘முன்னைய போட்டிகளுக்கும் நடைபெறவுள்ள போட்டிகளுக்கும் நிச்சயம் வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு இன்னும் போதியளவு கால அவகாசம் உள்ளது.’ எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், ‘டி20 தரவரிசையின்படியே போட்டி அட்டவனை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டியின் குழுநிலை ஆட்டங்களின் போது இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.’
‘கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்தும் ஊழல் முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்க ஐ.சி.சி யின் ஊழல் தடுப்பு பிரிவு தீவிரமான செயலாற்றி வருகின்றது. ஆட்டநிர்ணய முறையை ஒழிக்க கடுமையாக முயற்சித்து வருகின்றோம்.’ எனவும் அவர் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டுவரும் தென்னாபிரிக்காவை சேர்ந்த 59 வயதுடைய அவ்வணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான டேவிட் ரிச்சட்சன் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக்கிண்ண போட்டிகளுடன் குறித்த பதவியிலிருந்து விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<