NCC அணிக்கு கைகொடுத்த அஞ்சலோ பெரேராவின் இரட்டைச்சதம்

247

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் ப்ரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் மூன்றாவது வாரத்துக்கான நான்கு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (01) நடைபெற்றன.

இதில் NCC அணியின் அஞ்சலோ பெரேரா இரட்டைச் சதம் பெற்றிருந்ததோடு, பதிலுக்கு துடுப்பாடிவரும் SSC அணியின் சதுன் வீரக்கொடி ஆட்டமிழக்காது 167 ஓட்டங்களைப் பெற்று இரட்டைச் சதத்தை நெருங்கியிருந்தார்.

அவிஷ்க பெர்னாண்டோவின் இரட்டைச் சதத்துடன் முன்னிலை பெற்ற கோல்ட்ஸ் கழகம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று..

NCC எதிர் SSC

இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்சலோ பெரேராவின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் NCC கழகம் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 444 ஓட்டங்களைப் பெற்றது.

NCC கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அஞ்சலோ பெரேரா 201 ஓட்டங்களைப் பெற்று இம்முறை முதல்தரப் போட்டிகளில் தனது முதலாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அத்துடன், இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 203 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் 20 பௌண்டரிகளையும் அவர் விளாசியிருந்தார்.  

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள SSC கழகம் இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி ஆட்டமிழக்காது 167 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 444/10 (103.3)அஞ்சலோ பெரேரா 201, பெதும் நிஸ்ஸங்க 95, லசித் அம்புல்தெனிய 26, தம்மிக பிரசாத் 3/86, ஆகாஷ் சேனாரத்ன 3/91, தரிந்து ரத்னாயக்க 2/99

SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 290/2 (74) – சந்துன் வீரக்கொடி 167*, கிரிஷான் ஆரச்சிகே 48, கவிந்து குலசேகர 37*, லசித் அம்புல்தெனிய 2/59

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

இளம் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவின் இரட்டைச் சதத்தின் மூலம் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையை எட்டியுள்ளது.

இரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கோல்ட்ஸ் அணி 615 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் போது 46 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த 23 வயதுடைய ஹஷான் துமிந்து பெரேரா 70 ஓட்டங்களையும், 19 வயதுடைய ஜெஹான் டேனியல் 61 ஓட்டங்களையும் பெற்று வலுசேர்த்தனர்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் ஆட்ட நேர முடிவின் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 615/10 (154.2) – அவிஷ்க பெர்னாண்டோ 223, சங்கீத் குரே 142, ஹஷான் துமிந்து 70, ஜெஹான் டேனியல் 61, ஜீவன் மெண்டிஸ் 4/192

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 67/2 (23)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்ட சிலாபம் மேரியன்ஸ் அணி, கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 207 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

பந்துவீச்சுப்பாணியை பரிசோதிக்க இந்தியா செல்லும் அகில தனஞ்சய

ஐ.சி.சி. இனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்ட…

இன்றைய தினம் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த லஹிரு மதுஷங்க ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழத்திக் சாகர் பரேஷ் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிவரும் சிலாபம் மேரியன்ஸ் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 186/10 (48.2) – ஓசத பெர்னாண்டோ 52, ரிசித் உபமால் 36, இரோஷ் பெர்னாண்டோ 26, லஹிரு மதுஷங்க 6/51, மாலிந்த புஷ்பகுமார 3/84

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 206/10 (60.3) – லஹிரு மதுஷங்க 51*, மினோத் பாணுக்க 40, அஷான் பிரியன்ஜன் 22, சாகர் பரேஷ் 5/38, திக்ஷில டி சில்வா 3/99

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – யசோத லங்கா 89, ஹர்ஷ குரே 80, ரிஷாத் உபமால் 30*, லஹிரு மதுஷங்க 2/34, வனிந்து ஹசரங்க 2/42

Embed – https://www.thepapare.com/photos-ncc-vs-ssc-major-super-8s-tournament-201819/

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் செரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸினை இன்று தொடர்ந்த இராணுவ விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 350 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் ஹிமாஷ லியனகே மற்றும் டில்ஷான் டி சொய்சா ஆகியோர் சதங்களைக் குவித்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய செரசென்ஸ் விளையாட்டுக் கழகம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 350/10 (98.5) – ஹிமாஷ லியனகே 116, டில்ஷான் டி சொய்சா 101, சன்ஜிக ரித்ம 56, சச்சித்ர பெரேரா 3/42, ரனித்த லியனாரச்சி 3/61, சாமிகர எதிரிசிங்க 3/81

செரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 255/5 (79) – கமிந்து கனிஷ்க 103*, அண்டி சொலமன்ஸ் 62, நிபுன் கருணாநாயக்க 39*, துஷான் விமுக்தி 3/58

சகல போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.