T20 தொடரில் இரண்டு புதுமுக வீரர்களை களமிறக்கும் நியூசிலாந்து அணி

242
courtsey - Getty Images

இந்திய அணியுடன் இடம்பெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடும் நியூசிலாந்து T20 குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது அந்நாட்டு  வீரர்களுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகின்றது.

தொடர் தோல்வியை தொடர்ந்து நியூசிலாந்து குழாமில் திடீர் மாற்றம்

இந்திய அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான நியூசிலாந்து…

இந்த ஒரு நாள் தொடர் நிறைவடைந்த பின்னர் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இடையிலான T20 தொடர் ஆரம்பமாகின்றது.

இந்திய அணியுடனான இந்த T20 தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்திருக்கின்றது.

அதன்படி நியூசிலாந்து அணி அறிமுகம் செய்யும் புதுமுக வீரர்களில் ஒருவரான டேரைல் மிச்செல் துடுப்பாட்ட சகலதுறை வீரர் என்பதோடு, ஏனைய புதுமுக வீரரான ப்லைர் டெக்னர் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

இதில் டேரைல் மிச்செல் நியூசிலாந்தின் உள்ளூர் தொடரான சுப்பர் ஸ்மேஸ் (Super Smash) தொடரில் அண்மைக் காலமாக அசத்தலான பதிவுகளை வெளிப்படுத்தியிருந்ததோடு, நியூசிலாந்து A அணிக்காகவும் ஜொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் மற்றைய புதுமுகவீரரான ப்லைர் டிக்னர், இந்த T20 தொடரில் இடம்பெறும் மூன்றாவது போட்டியில் மட்டுமே ஆடவிருக்கின்றார். அதன்படி, ப்லைர் டிக்னெர் இந்திய அணியுடனான T20 தொடரின் மூன்றாவது போட்டியில் சகலதுறை வீரர் லோக்கி பேர்கஸனின் இடத்தினை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியில் புதுமுக வீரர்கள் உள்ளடக்கப்பட்டது பற்றி பேசியிருந்த அவ்வணியின் சிரேஷ்ட தேர்வாளர்களில் ஒருவரான கேவின் லர்சன், “ டேரைல் (மிச்செல்) அவரது பெறுமதியினை துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதேவேளை ப்லைர் (டெக்னர்) அணி வீரர்களால் மதிக்கப்படும் ஒருவராக காணப்படுவதோடு நல்ல வேகத்தில் பந்தினை வீசும் ஆற்றலினையும் கொண்டிருக்கின்றார். “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், இந்திய அணியுடன் இடம்பெறவிருக்கும் T20 தொடர் மூலம் நியூசிலாந்து அணியினை T20 போட்டிகளில் வழிநடாத்தும் பொறுப்பினை மீண்டும் கேன் வில்லியம்சன் எடுத்துக் கொள்கின்றார். இறுதியாக, நியூசிலாந்து அணி இலங்கையுடனான T20 தொடரில் டிம் செளத்தியினால் வழிநடாத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்துடனான ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய இந்திய அணி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நிறைவுக்கு…

இதேவேளை நியூசிலாந்து அணியின் கடைசி T20 தொடருக்காக உள்ளடக்கப்பட்டிருந்த ஹென்ரி நிக்கோல்ஸ், கிளேன் பிலிப்ஸ் மற்றும் செத் ரென்ஸ் ஆகியோருக்கு இந்திய அணியுடனான T20 போட்டிகளில் ஆட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதேநேரம், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட்டிற்கும் பணிச்சுமை கருதி இந்திய அணியுடனான T20  தொடரில் ஓய்வு வழங்கப்படிருக்கின்றது.

நியூசிலாந்து அணியின் கடைசி T20 தொடரின் போது காயத்துக்கு ஆளாகிய ஜிம்மி நீஷமின் இடத்தினை நிரப்ப அணிக்கு அழைக்கப்பட்டிருந்த டக் ப்ரெஸ்வெல் சிறப்பான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த காரணத்தினால் அவருக்கு இந்திய அணியுடனான T20 தொடரில் தொடர்ந்தும் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நியூசிலாந்து T20 குழாம் – கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டக் ப்ரெஸ்வெல், கொலின் டி கிரான்ட்ஹொம், லோக்கி பேர்கஸன் (முதல் இரண்டு T20 போட்டிகளுக்கு மட்டும்), மார்டின் கப்டில், ஸ்கொட் குக்லெயின், டேரைல் மிச்செல், கொலின் மன்ரோ, மிச்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட், இஷ் சோதி, டிம் செளத்தி, ரொஸ் டெய்லர், ப்லைர் டிக்னெர் (மூன்றாவது T20 போட்டிக்கு மட்டும்)

T20 தொடர் அட்டவணை

  • முதலாவது T20 போட்டி பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி வெலிங்டன் மதியம்30 மணி (இலங்கை நேரப்படி)
  • இரண்டாவது T20 போட்டி பெப்ரவரி 08ஆம் திகதி ஓக்லேன்ட் காலை30 மணி (இலங்கை நேரப்படி)
  • மூன்றாவது T20 போட்டி பெப்ரவரி 10ஆம் திகதி ஹமில்டன் மதியம்30 மணி (இலங்கை நேரப்படி)