முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற ஓஷத பெர்னாண்டோ இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம்

389

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் நான்கு ‘சுப்பர் 8’ போட்டிகள் இன்று (27) நிறைவடைந்தன.

SSC எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

கௌஷால் சில்வா முதல் இன்னிங்ஸில் பெற்ற அபார இரட்டைச் சதத்தின் உதவியோடு இராணுவ விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் SSC அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

முதல்தரப் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களைக் வீழ்த்திய ரங்கன ஹேரத்

CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஒன் (follow on) செய்த இராணுவ அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டபோதும் எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க தவறியது.

இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 75 ஓட்ட வெற்றி இலக்கையும் SSC அணி ஒரு விக்கெட்டை இழந்து எட்டியது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 582/9d (114.5) – கௌஷால் சில்வா 273, கவிந்து குலசேகர 94, சந்துன் வீரக்கொடி 52, சச்சித்ர சேனாநாயக்க 42, துஷான் விமுக்தி 5/155, விராஜ் புஷ்பகுமார 2/141

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.5) – துஷான் விமுக்தி 133, அஷான் ரன்திக 35, லக்ஷான் எதிரிசிங்க 30, தரிந்து ரத்னாயக்க 5/97, தம்மிக பிரசாத் 3/72

இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 335 (99.2) – லக்ஷித்த மதுஷான் 110, டில்ஷான் டி சொய்சா 85*, ஹிமேஷ லியனகே 35, தரிந்து ரத்னாயக்க 4/108, ஆகாஷ் சேனரத்ன 3/44, சம்மு அஷான் 2/63  

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 77/1 (13.2) – சந்துன் வீரக்கொடி 49*, கிறிஷான் ஆரச்சிகே 25*

முடிவு – SSC அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த போட்டி ஐந்து சதங்களுடன் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. இதில் சிலாபம் மேரியன்ஸ் அணி வீரர் ஓஷத பெர்னாண்டோ முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்iடைச் சதம் பெற்று சாதனை நிகழ்த்தினார்.

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிலாபம் அணி 560 ஓட்டங்களை பெற்ற நிலையில் கோல்ட்ஸ் தனது முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களை பெற்றது.

இறுதி டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணியில் புதுமுக வீரர்

இந்நிலையில் ஆட்டத்தின் இறுதி நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வலதுகை துடுப்பாட்ட வீரரான ஓஷத பெர்னாண்டோ 234 ஓட்டங்களை பெற்றார். இந்த ஓட்டங்களை பெறுவதற்கு அவர் 209 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களை விளாசினார்.

இதன் மூலம் இலங்கை முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசியவராகவும் ஓஷத பெர்னாண்டோ புதிய சாதனை படைத்தார்.

இதன்படி சிலாபம் மேரியன்ஸ் அணி 423 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு கோல்ட்ஸ் அணிக்கு 676 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி ஆட்டநேர முடிவின்போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ஓட்டங்களை பெற்றிருந்தது. முதல் இன்னிங்ஸில் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்த சங்கீத் குரே சதம் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 560 (133) – ஹர்ஷ குரே 162, ஓஷத பெர்னாண்டோ 109, திக்ஷில டி சில்வா 79, யசோத லங்கா 75, சங்கீத் குரே 4/105

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 308 (88.2) – பிரியமால் பெரேரா 107, ஹஷான் துமிந்து 68, தனஞ்சய லக்ஷான் 32, சாகர் பரேஷ் 5/84, சதுரங்க குமார 2/56

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 423/5d 81.2) – ஓஷத பெர்னாண்டோ 234, ரிசித் உபமால் 64, யசோத லங்கா 55, நலின் பிரியதர்ஷன 2/114

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 269/5 (52) – சங்கீத் குரே 121*, தனஞ்சய லக்ஷான் 60, நிசல தாரக்க 45*, சாகர் பரேஷ் 3/94

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


NCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் NCC அணி நிர்ணயித்த 224 ஓட்ட வெற்றி இலக்கை சரசென்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த எட்டி ஆறு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இனவெறி கருத்து வெளியிட்ட சர்ப்ராஸ் அஹமட்டுக்கு நான்கு போட்டிகளில் தடை

இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த இந்தப் போட்டியில் NCC அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 427 ஓட்டங்களை பெற்றபோதும் அந்த அணி முதல் இன்னிங்ஸில் போதிய ஓட்டங்களை பெற தவறியது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 253 (87.3) – மஹேல உடவத்த 101, சாரங்க ராஜகுரு 38, சாமிகர எதிரிசிங்க 4/82, மொஹமட் டில்ஷாட் 2/25

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 457 (142.3) – பிரமோத் மதுவன்த 116, கமிந்து கனிஷ்க 81, அஷேன் பண்டார 78, நிபுன் கருணாநாயக்க 55, லசித் அம்புல்தெனிய 96/6, டிலேஷ் குணரத்ன 2/83

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 427/9d (78) – லஹிரு உதார 127, சாரங்க ராஜகுரு 94, மஹேல உடவத்த78, ஹசித போயகொட 34, சாமிக்கர எதிரிசிங்க 4/103, கமிந்து கனிஷ்க 2/90

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 224/4 (46) – அஷேன் பண்டார 94*, நிபுன் கருனாநாயக்க 42*, அன்டி சொலமன்ஸ் 41, லசித் அம்புல்தெனிய 3/66

முடிவு – சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் CCC

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ் யூனியனின் நெருக்கடியை சமாளித்த CCC அணி போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்துக் கொண்டது.

ஆட்டத்தின் இறுதி நாளில் CCC அணிக்கு 350 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. இந்தப் போட்டியில் தமிழ் யூனியள் அணித்தலைவர் தரங்க பரணவிதான முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்திற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை வெற்றி

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 405 (127.5) – தரங்க பரணவிதாரன 215*, தமித சில்வா 72, லஹிரு மதுஷங்க 3/54, அஷான் பிரியஞ்சன் 2/49, வனிந்து ஹசரங்க 2/52

CCC (முதல் இன்னிங்ஸ்) – 324 (89.2) – வனிந்து ஹசரங்க 106, மலிந்து மதுரங்க 65, மாதவ வர்ணபுர 54, ரங்கன ஹேரத் 5/71, சச்சித்ர சேரசிங்க 2/43, திலங்க உதேஷன 2/59

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 268 (84) – ரமித் ரம்புவெல்ல 84, யொஹான் மெண்டிஸ் 61, ரங்க ஹேரத் 32*, லஹிரு கமகே 3/61, லஹிரு மதுஷங்க 3/62, மலிந்த புஷ்பகுமார 3/64

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 196/6 (44) – ரொன் சந்திரகுப்தா 53, லசித் அபேரத்ன 35, தமித் சில்வா 2/31, ரங்கன ஹேரம் 2/35

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<