அவுஸ்திரேலிய டெஸ்டில் லஹிரு குமாரவை இழக்கும் இலங்கை அணி

1069

தொடைத்தசை உபாதையினால் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார, அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருக்கின்றார்.

கம்மின்ஸின் வேகத்தால் மூன்று நாட்களில் முடிவை எட்டிய முதல் டெஸ்ட்

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக…

அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் உபாதைக்கு ஆளாகிய லஹிரு குமார போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவெளியில் பந்துவீச மைதானத்திற்கு வந்திருக்கவில்லை. அதேநேரம், லஹிரு குமார உபாதைக்கு ஆளாக முன்னர் அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்களை வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உபாதைக்கு ஆளாகிய பின்னர் லஹிரு குமாரவினை பரிசோதனை செய்த போது அவரது தொடைத்தசையில் உக்கிரமான கிழிவு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியில் உள்ள வீரர்களில் மிகவும் வேகமாக பந்துவீசக்கூடிய 21 வயதான லஹிரு குமார அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இல்லாமல் போயிருப்பது இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

அதேவேளை, லஹிரு குமார தவிர இலங்கை அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான துஷ்மந்த சமீரவும் உபாதை ஒன்றினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் அவரும் அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

இலங்கை குழாத்தில் நுவன் பிரதீப்புக்கு பதில் விஷ்வ பெர்னாண்டோ

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு…

இரு வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லாமல் போகும் நிலையில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடன் பிரிஸ்பேனில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விஷ்வ பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இந்த தொடருக்கான இலங்கை அணியில் பெயரிடப்பட்டிருந்த மற்றொரு வேகப்பந்து விச்சாளரான நுவன் பிரதீப்பும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின்போது உபாதைக்குள்ளாகி, அணியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<