தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ள சர்ஜீல் கான்

326
Cricinfo

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஐந்து வருட போட்டித் தடைக்குள்ளாகிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சர்ஜீல் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஊழல் தடுப்பு பிரிவால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன்படி, மிக விரைவில் உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் சர்ஜீல் கானுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இமாம் உல் ஹக்கின் சதம் வீண்; ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்கா முன்னிலையில்

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது…

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் சர்ஜீல் கானுக்கு விதிக்கப்பட்ட போட்டித் தடை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கு முன் தன்னை உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவருக்கு சர்ஜீல் கான் மனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பில் அவதானம் செலுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஊழல் தடுப்பு ஆணையகம், சர்ஜீல் கானின் மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதன்படி, மிக விரைவில் சர்ஜீல் கானுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்கும் என தான் நம்புவதாக சர்ஜீல் கானின் சட்டத்தரணி ஷகான் ஈஜாஸ் தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற 2ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் டி-20 தொடரில் இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடிய சர்ஜீல் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் அணியின் ஆறு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறித்த வீரர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்ததுடன், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இடைக்காலத் தடையும் விதித்தது.

இந்த நிலையில், லாஹூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஷ்கர் ஹைதர் தலைமையிலான மூவரடங்கிய விசேட குழுவொன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்தது. இக்குற்றச்சாட்டின் ஆரம்ப குற்றவாளிகளான சர்ஜீல் கான் மற்றும் காலித் லதீப் தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வழக்கு விசாரணைகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நிறைவுக்கு வந்தது.

இதன்படி, குறித்த சூதாட்ட சர்ச்சையின் பிரதான சந்தேக நபராக விளங்கிய சர்ஜீல் கானுக்கு 5 வருட போட்டித் தடை மற்றும் 2 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணைகளை தொடர்ந்து புறக்கணித்து வந்த காலித் லத்தீபுக்கு 5 வருட போட்டித்தடையும் ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

சர்ப்ராஷ் அஹமட்டை மன்னித்த தென்னாபிரிக்க அணி

தென்னாபிரிக்க அணி வீரர் அண்டில் பெஹலுக்வாயோவின் நிறத்தினை சாடும் …

இந்த நிலையில், குறித்த வீரர்களுக்கான போட்டித்தடை 2017 பெப்ரவரி 10ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்ததுடன், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் அவர்களது போட்டித்தடை நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவுக்கு வரவுள்ள போட்டித் தடைக்கு முன் தன்னை உள்ளூர் போட்டிகளில் அனுமதிக்குமாறு தெரிவித்து சர்ஜீல் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்தார். இதில் அந்நாட்டு கிரிக்கெட் ஊழல் தொடர்பிலான விதிமுறைகளை மீறியதாக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் ஒப்புக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சர்ஜீலின் மனுவை அந்நாட்டு ஊழல் தடுப்பு ஆணையகம் ஏற்றுக்கொண்டது.

எனினும், சர்ஜீல் கானுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு முன் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆளுநர்களின் ஒப்புதலை பெறவேண்டும். அவ்வாறு ஒப்புதல் கிடைத்தால் அவருக்கு உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

எது எவ்வாறாயினும், சர்ஜீல் கானுக்கு மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிரிககெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்காக 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள 29 வயதான சர்ஜீல் கான், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்ததுடன், அதே வருடத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 62

அவுஸ்திரேலிய பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டியில் பொறுப்பற்ற ஆட்டத்தை…

எனினும், இதுவரை 25 ஒருநாள் மற்றும் 15 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஜீல் கான், ஒட்டுமொத்தமாக 1,200 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<