தென்னாபிரிக்க முன்னாள் தலைவர் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து திடீர் ஓய்வு

463
Image - SACricketmag.com

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சகலதுறை வீரர் ஜொஹான் போதா சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக புதன்கிழமை (23) திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார்.

1982 மே 2 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் ஜொஹனர்ஸ்பேர்க் நகரில் பிறந்த ஜொஹான் போதா 2001 ஆம் ஆண்டு ஒரு பந்துவீச்சாளராக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் பெற்றிருந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணியுடன் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணியின் 80 ஆவது ஒருநாள் வீரராக சர்வதேச கிரிக்கெட்டிற்குள் தடம் பதித்திருந்தார்.

டிக்வெல்லவின் துடுப்பாட்ட பாணியை நாம் பின்பற்ற வேண்டும் – திமுத்

தென்னாபிரிக்க அணியில் இணைந்ததன் பின்னர் துடுப்பாட்டத்திலும் அவதானம் செலுத்திய ஜொஹான் போதா பின்னர் ஒரு சகலதுறை வீரராக மாறியிருந்தார். அதனை தொடர்ந்து 2006 இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற்றார். 5 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் தலைவராக செயற்பட்டு வந்த கிரேம் ஸ்மித் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, உபதலைவராக செயற்பட்டுவந்த ஜொஹான் போதா 2010 ஆகஸ்ட் 20 ஆம் திகதி தென்னாபிரிக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு ஆஸி. அணியுடன் நடைபெற்ற போட்டியில் டி20 அறிமுகம் பெற்ற இவர் 2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் சுற்றுடன் வெளியேறியதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதன் பின்னர் தொடர்ந்தும் முதல்தர போட்டிகளிலும், டி20 லீக் தொடர்களிலும் விளையாடி வந்தார். தற்போது ஆஸியில் நடைபெற்றுவரும் கே.எப்.சி பிக் பேஷ் லீக் (Big bash) தொடரில் ஹோர்பட் அணிக்காக விளையாடி வந்த நிலையில் நேற்றைய தினம் ஹோர்பட் அணி அடைந்த தோல்வியை தொடர்ந்து தான் சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக நேற்று (23) திடீர் அறிப்பை விடுத்துள்ளார்.

5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 83 ஓட்டங்களையும், 17 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். 78 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 609 ஓட்டங்களையும், 72 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். 40 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 201 ஓட்டங்களையும், 37 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

90 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4015 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 27 அரைச்சதங்கள் உள்ளடங்கும். அத்துடன் 220 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

215 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1966 ஓட்டங்களையும், 163 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

எதிரணி வீரரின் நிறம் பற்றி கருத்து வெளியிட்ட சர்ச்சையில் சர்ப்ராஸ்

2001 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் பெற்ற ஜொஹான் போதா 2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து மறைந்து 2019 ஆம் ஆண்டு முழு உலக கிரிக்கெட் வாழ்க்கையையும் விட்டு 18 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து மறைந்து செல்கின்றார்.

தனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் தென்னாபிரிக்கா, அடிலெய்ட் ஸ்ரைக்கேர்ஸ், டெல்லி டெயார்டெவில்ஸ், ஹோர்பாட் ஹூரிக்கன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நோர்த்தம்டன்சியர், ராஜஸ்தான் ரோயல்ஸ், சௌத் அவுஸ்திரேலியா, சிட்னி சிக்ஸர்ஸ், டிரினாட் அன்ட் டுபாகோ போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<