சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் மென்செஸ்டர் யுனைடட் அணியுடனான போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) அணியின் முன்னணி முன்கள வீரர் நெய்மர் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் டோச்சல் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார விடயத்தில் ரொனால்டோவுக்கு எதிராக புதிய சர்ச்சை
பிரென்ச் கோப் டி பிரென்ஸ் கால்பந்தாட்ட தொடரின் ஸ்ட்ரெஷ்பேக் அணிக்கு எதிரான நேற்றைய (23) போட்டியில், பி.எஸ்.ஜி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் 60வது நிமிடத்தில் முழங்கால் உபாதை காரணமாக நெய்மர் மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான விறுவிறுப்பான போட்டியில், ஸ்ட்ரெஷ்பேக் அணியின் மத்தியகள வீரர் மோட்டஷ் ஷெம்ஷெமி, தொடர்ச்சியாக மூன்று தடவைகள் நெய்மரை கட்டுப்படுத்த முற்பட்டார். இதன் போது நெய்மரின் வலது காலின் பாதத்தில் உபாதை ஏற்பட்டதுடன், போட்டி நடுவர் நெய்மர் தரப்புக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்றையும் வழங்கியிருந்தார்.
ப்ரீ கிக் வாய்ப்பு தவறவிடப்பட்ட நிலையில், உபாதைக்கான சிகிச்சையை வைத்திய உதவியாளரிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் மீண்டும் திரும்பிய நெய்மர் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், தொடர்ச்சியாக உபாதையால் அவதிப்பட்ட இவர், 60வது நிமிடத்தில் மைதானத்திலிருந்து வெளியேறினார்.
இவரது உபாதை குறித்து கருத்து தெரிவித்த அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் டோச்சல்,
“ஏற்கனவே முழங்கால் உபாதை ஏற்பட்டிருந்த வலது காலில் மீண்டும் உபாதை ஏற்பட்டுள்ளதால் நெய்மர் கவலையடைந்துள்ளார். நெய்மர் மூன்று தடவைகள் முறையற்ற விதத்தில் (fouled) வீழ்த்தப்பட்டார். இதில், இரண்டு தடவைகள் அவரது பாதம் தாக்கப்பட்டது. இப்போது அவர் வைத்தியசாலையில் உள்ளார். அவரின் உபாதை குறித்த முழுமையான தகவலினை இப்போது வெளியிட முடியாது. வைத்தியரின் தகவலுக்காக நாம் காத்திருக்கிறோம்” என்றார்.
மீண்டும் ஆபிரிக்காவின் சிறந்த வீரரானார் முஹமட் சலாஹ்
எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், இங்கிலாந்து …..
அத்துடன், நெய்மர் மீது எதிரணி வீரர்கள் உபாதை ஏற்படுத்துவதற்கான காரணம், அவரின் நடத்தைகள் என ஸ்ட்ரெஷ்பேக் அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் வெளியிட்டிருந்த கருத்தினை தோமஸ் டோச்சல் ஏற்க மறுத்துள்ளார்.
“நெய்மரின் பாணி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால், அவர் எதிரணி வீரர்களினால் உபாதையடைந்த பின்னர், அது தொடர்பில் முறையிடுவதற்கு வர வேண்டாம்” என ஸ்ட்ரெஷ்பேக் அணியின் பயிற்றுவிப்பாளர் அந்தோணி கோன்கேல்வ்ஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நெய்மரின் உபாதையானது பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கு இடையிலான முதல் கட்ட போட்டியில், மென்செஸ்டர் யுனைடட் அணியை ஓல்ட் ட்ரெபோர்டில் எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி பி.எஸ்.ஜி அணி எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், நெய்மரின் உபாதை அணியின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<