விராட் கோஹ்லிக்கு நியூசிலாந்து தொடரில் திடீர் ஓய்வு

384

இந்திய  கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லியின் சுமையை கருத்திற்கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து தொடரில் அவருக்கு திடீர் ஓய்வு வழங்கியுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் வைத்து அந்த அணியுடன் 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

அவுஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு ….

சுற்றுப் பயணத்தின் முதல் தொடரான ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. நேற்று (23) நடைபெற்ற முதல் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டக்வத் லூவிஸ் முறையில் 8 விக்கெட்டுகளினால் இலகு வெற்றி பெற்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியின் தலைவராக செயற்பட்டுவரும் விராட் கோஹ்லி ஒவ்வொரு போட்டிகளிலும் அணித் தலைவராகவும் சரி, ஒரு துடுப்பாட்ட வீரராகவும் சரி மிகச்சிறப்பான முறையில் அவருடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எந்தவொரு இந்திய அணித்தலைவர்களாலும் செய்ய முடியாத டெஸ்ட் வெற்றியை நுணுக்கமான முறையில் அணியை வழிநடத்தி மிக இலகுவாக காரியத்தை செய்து முடித்திருந்தார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது திடீர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

நியூஸிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் ….

விராட் கோஹ்லி தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்தி வருகின்றமையினாலும், தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்றமையினாலும் அவரின் பணிச்சுமையை குறைத்து உடல் கட்டமைப்பை சோர்வடையவிடாமல் பாதுகாப்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அணி தேர்வுக் குழுவானது விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்று போட்டிகளுக்கும் அவருக்கு முழுமையான ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அணித் தலைவராக செயற்பட்டுவரும் விராத் கோஹ்லி கடந்த சில மாதங்களாக அதிகமாக போட்டிகளில் விளையாடி வருகின்றார். அவரின் பணிச்சுமையை கருத்திற்கொண்டு, அடுத்து இந்தியாவில் நடைபெற இருக்கும் அவுஸ்திரேலிய அணியுடனான தொடருக்கு முன் அவருக்கு ஓய்வு வழங்குவது சிறந்ததாக இருக்கும் என அணியின் நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் கருகின்றனர்.

இதனாலேயே இவ்வாறு இந்த தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த போட்டிகளுக்கான அணியின் தலைவராக தற்போதைய உபதலைவரான ரோஹிட் சர்மா செயற்படவுள்ளார்.’

Photo Album :  Sri Lanka vs Australia 1st Test – Day 1

அத்துடன் விராட் கோஹ்லியின் ஓய்வினால் ஏற்படப்போகின்ற வெற்றிடத்துக்கு எந்த மாற்று வீரரும் அணியில் இணைக்கப்பட மாட்டர் என்பதையும் இந்திய கிரிக்கெட் சபை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து தொடருக்கு பின்னர் அவுஸ்திரேலிய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு வகையான தொடர்களிலும் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. அதன் பின்னர் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

அதனை தொடர்ந்து .சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன் காரணமாக, உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு இந்திய அணியானது முக்கிய வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கி வருகின்றது.  

அதன்படி, வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராக்கு நியூசிலாந்து தொடரில் முழுமையான ஓய்வு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த வீரராக விராட் கோஹ்லி ஓய்வாகியிருக்கின்றார். அடுத்து எந்த வீரருக்கு ஓய்வு வழங்கப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் அவதானிக்க வேண்டும்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<