தரங்கவின் சதத்தோடு இலங்கை A அணிக்கு அபார வெற்றி

1933

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை A அணி அயர்லாந்து A அணியினை 175 ஓட்டங்களால் அபாரமாக வீழ்த்தியுள்ளது.  

இந்த வெற்றியுடன் இலங்கை A அணி ஐந்து போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரிலும் 2-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.  

ஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி

இன்று (21) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை A அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.  

அயர்லாந்து A அணி உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியினை தழுவியிருந்த போதிலும் குறித்த போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த காரணத்தினால் போட்டித்தன்மை மிக்க ஆட்டம் ஒன்று இன்றைய நாளுக்கான போட்டியிலும் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இலங்கை A தரப்பின் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க அவிஷ்க பெர்னாந்து மற்றும் அணித்தலைவர்  உபுல் தரங்க ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்தனர்.  

அனுபவ வீரர்களில் ஒருவரான உபுல் தரங்க இலங்கை A அணிக்காக சதம் பெற்று உதவ, அவிஷ்க பெர்னாந்து அரைச்சதம் பெற்று தனது தரப்பினை வலுப்படுத்தினார்.

இதில் சதம் பெற்ற உபுல் தரங்க 112 பந்துகளில் 13 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 103 ஓட்டங்கள் குவித்ததோடு, அரைச்சதம் பெற்ற அவிஷ்க பெர்னாந்து 45 பந்துகளில் 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 55 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

பின்னர், மத்திய வரிசை வீரர்களாக களம் வந்த அஞ்செலோ பெரேரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அதிரடி அரைச்சதங்களோடு இலங்கை A அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற கமிந்து மெண்டிஸ் 50 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 76 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, அஞ்செலோ பெரேரா 62 பந்துகளில் 6 பெளண்டரிகளுடன் 72 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அயர்லாந்து A தரப்பு பந்துவீச்சில் பீட்டர் சேஸ், அணித்தலைவர் ஹர்ரி டெக்டர், கரேத் டெலானி மற்றும் ஷேன் கேட்கேட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 338 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து A அணி, இந்த உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டி போன்று இம்முறையும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 162 ஓட்டங்களுடன் படுதோல்வியடைந்தது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

அயர்லாந்து A அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை அரைச்சதம் பெற்ற ஷேன் கேட்கேட் (56) பதிவு செய்திருந்தார். இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பாக மிலிந்த சிறிவர்தன 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்ததோடு, இசுரு உதான மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இப்போட்டியின் வெற்றியோடு உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை A அணி, அயர்லாந்து A அணியினை அடுத்ததாக வரும் வியாழன் (24) கொழும்பில் வைத்து  எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்









Title





Full Scorecard

Sri Lanka A

337/5 & 0/0

(0 overs)

Result

Ireland A

162/10 & 0/0

(0 overs)

SL A won by 175 runs

Sri Lanka A’s 1st Innings

Batting R B
Avishka Fernando c Tucker b Cameron-Dow 55 45
Upul Tharanga c Cameron-Dow b Delany 103 112
Shehan Jayasuriya c Rock b Tector 13 29
Angelo Perera not out 72 62
Milinda Siriwardane b Chase 1 3
Kamindu Mendis c Thompson b Getkate 76 50
Isuru Udana not out 6 2
Extras
11 (lb 1, nb 3, w 7)
Total
337/5 (50 overs)
Fall of Wickets:
1-86 (WIA Fernando, 12.4 ov), 2-136 (GSNFG Jayasuriya, 23.4 ov), 3-197 (WU Tharanga, 34.4 ov), 4-198 (TAM Siriwardana, 35.1 ov), 5-326 (PHKD Mendis, 49.2 ov)
Bowling O M R W E
KD Chase 9 0 85 1 9.44
Mark Adair 5 0 42 0 8.40
James Cameron-Dow 10 0 32 1 3.20
SR Thompson 3 0 21 0 7.00
Harry Tector 10 0 50 1 5.00
G Delany 8 0 65 1 8.13
SC Getkate 5 0 41 1 8.20

Ireland A’s 1st Innings

Batting R B
JNK Shannon c M Bhanuka b I Udana 0 1
JA McCollum c M Siriwardane b K Mendis 18 23
SR Thompson lbw by I Udana 0 4
L Tucker c S Jayasuriya b I Jayarathne 6 31
H Tector c A Fernando b K Mendis 9 16
N Rock c I Udana b S Jayasuriya 7 16
MR Adair st M Bhanuka b M Siriwardane 43 40
SC Getkate c K Mendis b M Siriwardane 56 55
G Delany lbw by M Siriwardane 15 26
J Cameron-Dow not out 0 0
KD Chase c & b M Siriwardane 0 3
Extras
8 (lb 5, w 3)
Total
162/10 (35.5 overs)
Fall of Wickets:
1-0 (JNK Shannon, 0.1 ov), 2-0 (SR Thompson, 0.5 ov), 3-25 (JA McCollum, 7.6 ov), 4-29 (L Tucker, 10.5 ov), 5-36 (H Tector, 13.3 ov), 6-53 (N Rock, 17.3 ov), 7-120 (MR Adair, 27.3 ov), 8-162 (SC Getkate, 35.1 ov), 9-162 (G Delany, 35.2 ov), 10-162 (PKD Chase, 35.5 ov)
Bowling O M R W E
Isuru Udana 5 2 6 2 1.20
Asitha Fernando 3 0 14 0 4.67
Kamindu Mendis 8 0 33 2 4.13
Ishan Jayarathne 4 0 14 1 3.50
Shehan Jayasuriya 2 0 23 1 11.50
Jeewan Mendis 7 0 30 0 4.29
Milinda Siriwardane 4.5 0 26 4 5.78
Angelo Perera 2 0 11 0 5.50







மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க