முதல் தர கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் இலங்கை வீரர்கள்

394

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், சுப்பர் 8 சுற்றில் விளையாடத் தகுதிபெற்ற அணிகளின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்றுமுன்தினம் (16) வெளியிட்டிருந்தது.

இதன்படி, பிரிவில் இருந்து என்.சி.சி, சிலாபம் மேரியன்ஸ், தமிழ் யூனியன் கழகம் மற்றும் இலங்கை இராணுவ அணிகளும், பி பிரிவில் இருந்து கொழும்பு கிரிக்கெட் கழகம், எஸ்.எஸ்.சி, செரசென்ஸ் விளையாட்டுக் கழகம், கோல்ட்ஸ் மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

14 அணிகள் பங்குபற்றிய இம்முறை போட்டித் தொடரின் முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில் 6 போட்டிகளில் விளையாடி 2இல் மாத்திரம் பூரண வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட என்.சி.சி அணி பிரிவில் முதலிடத்தையும், 6 போட்டிகளில் விளையாடி 3இல் மாத்திரம் வெற்றிகளைப் பதிவுசெய்த கொழும்பு கிரிக்கெட் கழகம், பி பிரிவில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டன.

பெதும் நிஸங்கவின் இரட்டைச்சதத்தினால் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் இலங்கை A வசம்

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவை இடையே நடைபெற்ற…

இதன்படி, மேஜர் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் 2ஆவது சுற்று ஆட்டங்கள் சுப்பர் 8 மற்றும் கேடயத்திற்கான போட்டிகளாக இரண்டு பிரிவுகளில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதில் கேடயத்திற்கான போட்டிகளில் ஆறு அணிகள் பங்குபற்றவுள்ளன. இதன் பிரிவில் ராகம, துறைமுக அதிகார சபை மற்றும் சோனகர் கழக அணிகளும், பி பிரிவில் பதுரெலிய, பி.ஆர்.சி மற்றும் நீர்கொழும்பு ஆகிய அணிகளும் போட்டியிடவுள்ளன.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நான்கு நாட்கள் கொண்டதாகவும், கேடயத்திற்கான போட்டிகள் மூன்று நாட்களைக் கொண்டதாகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரான சிலாபம் மேரியன்ஸ் அணியைச் சேர்ந்த ஓசத பெர்னாண்டோவும், அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக கொழும்பு கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த மாலிந்த புஷ்பகுமாரவும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ள வலதுகை துடுப்பாட்ட வீரரான ஓசத பெர்னாண்டோ, 6 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் ஒரு அரைச்சதத்துடன் 608 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதில் முவர்ஸ் கழகத்துக்கு எதிராக அவர் 147 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 61

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியிலும் தோல்வியைத் தழுவி வெறுங்கையோடு …

இதில் இரண்டாவது இடத்தை பி.ஆர்.சி கழகத்தைச் சேர்ந்த ருமேஷ் புத்திகவும் (594 ஓட்டங்கள்), மூன்றாவது இடத்தை கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த ப்ரியமால் பெரேராவும் (560 ஓட்டங்கள்) பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும், முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவில் சிறந்த இன்னிங்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக எஸ்.எஸ்.சி கழகத்தைச் சேர்ந்த கௌஷால் சில்வா இடம்பிடித்தார். அவர் நீர்கொழும்பு விளையாட்டு கழகத்துக்கு எதிராக 210 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் நான்கு இரட்டைச் சதங்களும் அடங்கும். என்.சி.சி கழகத்தின் பெதும் நிஸ்ஸங்க (206 *), கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் ப்ரியமால் பெரேரா (206*, 200*), ஆகிய வீரர்கள் இரட்டைச் சதங்களை குவித்திருந்தனர்.

அத்துடன், 14 வீரர்கள் குறைந்தபட்சமாக ஒரு சதத்தையும், ஏழு வாரங்கள் நிறைவுக்குவரும் போது இரட்டைச் சதம், சதங்கள் மற்றும் அரைச் சதங்கள் என மொத்தமாக 58 அரைச்சதம் மற்றும் சதங்கள் குவிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பாகிஸ்தானைப் போல இலங்கை அணியையும் வீழ்த்துவோம் – டீன் எல்கர்

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது போல, பெப்ரவரி மாதம் …

இதேவேளை, அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த மாலிந்த புஷ்பகுமார முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 41 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதில் செரசென்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 37 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி புதிய உலக சாதனையும் படைத்திருந்ததுடன், அதே போட்டியில் 110 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுக்களை மொத்தமாக வீழ்த்தினார்.

எனினும், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை எஸ்.எஸ்.சி கழகத்தைச் சேர்ந்த தரிந்து ரத்னாயக்கவும் (38 விக்கெட்டுக்கள்), மூன்றாவது இடத்தை ராகம கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த அமில அபோன்சோவும் (34 விக்கெட்டுக்கள்) பெற்றுக்கொண்டுள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<