பிக்பேஷ் லீக் தொடரில் நேற்று (17) நடைபெற்ற சிட்னி தண்டர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்வையிட வந்திருந்த ரசிகர்கள், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெற முடியும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
முக்கிய வீரரை இழக்கும் அபாயத்தில் இலங்கை
இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர் ……
குயின்ஸ்லாந்தின் த கெப்பா மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற சிட்னி தண்டர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக்பேஷ் லீக் போட்டியின் போது மைதான விளக்குகள் (Floodlights) மின் பற்றாக்குறையினால் செயலிழந்திருந்தன. குறித்த விளக்குகளை சரிசெய்வதற்கு நேர தாமதமாகிய நிலையில் போட்டி இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், போட்டியை முழுமையாக நடத்த முடியாததன் காரணமாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா, போட்டியை பார்வையிட வருகை தந்திருந்த ரசிகர்களுக்கு, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அதே மைதானத்தில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான அனுமதியை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் ரசிகர்கள் ஒன்றுபடுத்தல் பிரிவின் தலைவர் அந்தோனி எவரர்ட் குறிப்பிடுகையில்,
“நேற்றைய போட்டியை (பிக்பேஷ்) கிரிக்கெட் சபை மற்றும் பிரிஸ்பேன் ஹீட்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாடு அற்ற வெளிப்புற சக்தி பிரச்சினையால் முழுமையாக நடத்த முடியாமல் போய்விட்டது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது நாம், குறித்த பிரச்சினை மீண்டும் வருவதனை தடுக்கும் வகையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
துடுப்பாட்ட வீரர்களின் உதவியை எதிர்பார்க்கும் தினேஷ் சந்திமால்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால், …
கிரிக்கெட் சபையின் சட்ட விதிமுறையின் படி, நேற்றைய போட்டி 23 ஓவர்கள் நடைபெற்றதால், வருகைத்தந்த அனைத்து ரசிகர்களுக்கும், மீண்டும் பணத்தை வழங்குவது கடினம். இதனால், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இதே மைதானத்தில் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம். இதன் அடிப்படையில், நேற்றைய போட்டிக்கு வருகைதந்த ரசிகர்கள் இலவசமாக குறித்த டெஸ்ட் போட்டியை நேரடியாக சென்று பார்வையிட முடியும்” என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள த கெப்பா மைதானத்தில் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<