இலங்கையில் ஐ.சி.சி ஊழல் மோசடி அலுவலகம் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ஜூன

265

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென 96 உலகக் கிண்ண வெற்றி அணியின் தலைவரும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சருமான அர்ஜூன ரனதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று (14) நடைபெற்ற மரக் கன்றுகள் பகிர்ந்தளித்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் விபரங்கள் வெளியீடு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட…

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”விளையாட்டுத்துறை அமைச்சர் மாறியவுடன் ஓரிரவில் அனைத்தையும் சீர்செய்ய முடியாது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாம் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் துரதிஷ்டவசமான விளையாட்டு அமைச்சர்களும், அந்த அமைச்சர்களை பாதுகாக்கின்ற கவசமான சூதாட்டகாரர்களும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிரிக்கெட் விளையாட்டை அழித்துவிட்டார்கள்.

இவ்விடயம் தொடர்பில் நாம் பல முறை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். பிரதம அமைச்சரிடமும் பல முறை எடுத்துரைத்தோம். கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அழிவின் பலாபலன்களை தற்பொழுது நாம் அனுபவிக்கின்றோம். எமது வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகமொன்றை இலங்கையில் நிறுவ முயற்சிக்கின்றது.

இது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாகும். இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களே கிரிக்கெட்டையும் ஆட்சி செய்தார்கள். அவர்களே இந்நிலைமைக்கு பொறுப்பு கூறவேண்டும். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிடுகையில் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தயாராகுவது இலகுவான காரியமல்ல.

ஊழல் மோசடி பற்றிய தகவல்களை வழங்குவதற்கு ஐ.சி.சி இனால் 2 வாரகால அவகாசம்

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான விபரங்களை …

எமது வீரர்கள் திறமையானவர்கள். எமது நிர்வாகத்தில் தான் பல பிரச்சினைகள் இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல்களின் பொழுது இவ்விடயம் தொடர்பில் முழுமையான அவதானத்தை செலுத்த எதிர்பார்த்துள்ளேன் என அமைச்சர் அர்ஜூன ரனதுங்க மேலும் தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<