கோல் மழையுடன் கிண்ணியா மத்தியை வீழ்த்திய ஸாஹிராவுக்கு மூன்றாமிடம்

291

இந்தப் பருவகாலத்தின் 18 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில், மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எதிராக 5-0 என கோல் மழை பொழிந்து வெற்றியை சுவைத்துள்ளது.  

பாடசாலை கால்பந்தில் புனித ஜோசப் ஹட்ரிக் சம்பியன்

காவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல்….

இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரியிடம் 4-0 என தோல்வியினை தழுவியிருந்த கிண்ணியா மத்திய கல்லூரி அணி, அடுத்த அரையிறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியினால் பெனால்டி முறையில் தோற்கடிக்கப்பட்டிருந்த ஸாஹிரா கல்லூரியுடன் மூன்றாம் இடத்திற்கான கனவுகளுடன் மோதியிருந்தது. இந்த ஆட்டம் சுகததாஸ மைதானத்தில் நேற்று (13) இடம்பெற்றது.

போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே கிண்ணியா மத்திய கல்லூரி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் கோல்காப்பாளர் மொஹமட் முர்சித் ஸாஹிரா அணியின் முன்கள வீரர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் (Collision) ஒன்றினால் தலையில் உபாதையினை எதிர் கொண்டார்.  பின்னர் அவரின் கோல்காப்பாளர் இடத்தினை பதில் கோல் காப்பாளர் மொஹமட் அஹ்ஸான் வரும் வரை சிறிது நேரத்திற்கு மொஹமட் சிபாஸ் எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் சுமூகமாக முன்னேறிய போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரியின் இளம் வீரர்கள் ஸாஹிரா அணியின் பின்களத்திற்கு சவால் விடுத்தனர். எனினும், இதற்கு கவுண்டர் தாக்குதல் செய்த ஸாஹிரா அணி சிறிது நேரத்தில் போட்டியினை தம்வசமாக்கியது.

ஸாஹிராவை வீழ்த்தி ஜோசப்புடனான இறுதி மோதலில் றோயல்

அகில இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் …

அந்தவகையில் முதல் பாதியின் 35ஆவது நிமிடத்தில் மொஹமட் சாஜித்தின் அதிரடியான கோல் மூலம் போட்டியின் கோல்கள் நுழைவாயிலினை ஸாஹிரா அணியினர் திறந்து வைத்தனர். மொஹமட் சாஜித் கோல் பெட்டியின் அருகில் இருந்து கிடைத்த பந்தினை கிண்ணியா மத்திய கல்லூரியின் பின்கள வீரர்களையும் தாண்டி லாவகமான முறையில் கோல் வலைக்குள் அனுப்பி வைத்தே முதல் கோலினைப் பதிவு செய்தார்.

பின்னர், மத்திய கல்லூரி அணியும் தமது முதல் கோலுக்கான முயற்சியினை மேற்கொண்டிருந்த போதிலும் அது வீணாகியிருந்தது. தொடர்ந்து போட்டியின் முதல் பாதி நிறைவுக்கு வரும் தருணத்திலும் ஆசிப் அஹமட் மூலம் இரண்டு இலகு வாய்ப்புக்களை கிண்ணிய மத்திய கல்லூரி அணி பெற்ற போதிலும், அவர்களால் தங்களது முதல் கோலினை பெற முடியவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதி ஸாஹிரா கல்லூரியின் ஆதிக்கத்தோடு நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 1 – 0 கிண்ணியா மத்திய கல்லூரி

இரண்டாம் பாதியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட தவறியிருந்தன. இதன் பின்னர், ஸாஹிரா கல்லூரிக்காக மொஹமட் சாஜித் கோல் ஒன்றினை  பெறுவதனை அபாரமான முறையில் கிண்ணிய மத்திய கல்லூரியின் கோல் காப்பாளர் அஹ்ஸான் தடுத்தார்.

மெஸ்ஸியை முந்திய இந்திய வீரர் சுனில் செத்ரி

தற்போது கால்பந்து ஆடிவரும் வீரர்களில் அதிக சர்வதேச கோல்கள் …

எனினும், அஹ்ஸானால் ஸாஹிரா அணியின் அடுத்த முயற்சியினை தடுக்க முடியவில்லை. இதன்படி, மொஹமட் அக்தார் தனது தலையினால் முட்டி பெற்ற கோல் மூலம் ஸாஹிரா அணிக்கு இரண்டாவது கோலினை சேர்த்தார்.

கிண்ணியா மத்திய கல்லூரி போட்டியின் இரண்டாம் பாதியில் இன்னும் சில முயற்சிகளை மேற்கொண்டு அவை வெற்றியளிக்காத நிலையில், ஸாஹிரா கல்லூரி அணி ரசாக், ராசா மற்றும் முஸ்பிர் ஆகியோர் மூலம் 6 நிமிடங்களுக்குள் தொடர்ந் 3 கோல்களைப் பெற்றுக்கொண்டது.

எஞ்சிய நிமிடங்களிலும் கிண்ணியா தரப்பினருக்கு கோலுக்கான வாய்ப்புக்களை வழங்காத ஸாஹிரா வீரர்கள், போட்டி நிறைவில் 5 கோல்களினால் வெற்றியை சுவைத்து இம்முறை தொடரில் 3ஆது இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

முழு நேரம்ஸாஹிரா கல்லூரி 5 – 0 கிண்ணியா மத்திய கல்லூரி

ThePapare.com இன் போட்டி நாயகன்ஹசன் ராசா (ஸாஹிரா கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரிமொஹமட் சாஜித் 36’, மொஹமட் அக்தார் 54’, அப்துல் ரசாக் 77’, மொஹமட் முஸ்பிர் 81’, ஹசன் ராசா 83’

மஞ்சள் அட்டைகள்

ஸாஹிரா கல்லூரிநிசாம் நபீல் 70’

கிண்ணியா மத்திய கல்லூரிமொஹமட் இஹ்ஸான் 58’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<