பாடசாலை கால்பந்தில் புனித ஜோசப் ஹட்ரிக் சம்பியன்

314

காவிந்த ரூபசிங்க கடைசி நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் றோயல் கல்லூரியின் நெருக்கடியை சமாளித்து 18 வயதுக்கு உட்டோருக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான பிரிவு 1 கால்பந்து தொடரில் புனித ஜோசப் கல்லூரி தொடர்ச்சியாக மூன்றாவது முறை சம்பியன் கிண்ணத்தை வென்றது.

மூலோபாயத்துடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய றோயல் கல்லூரி அணி, முதல் பாதியில் நடப்புச் சம்பியனுக்கு நெருக்கடி கொடுத்து தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தியதோடு இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்த நிலையில் ஆட்டம் 90 நிமிடங்கள் முடியும்போது 1 – 1 என சமநிலையில் இருந்தபோதும் மேலதிக நேரத்தில் புனித ஜோசப் கோலொன்றை போட்டு 2-1 என வெற்றி பெற்றது.

ஸாஹிராவை வீழ்த்தி ஜோசப்புடனான இறுதி மோதலில் றோயல்

அகில இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 18 வயதுக்கு…

றோயல் கல்லூரி அரையிறுதிப் போட்டியில் பலம்மிக்க கொழும்  ஸாஹிரா கல்லூரியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீத்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு புனித ஜோசப் கல்லூரி கிண்ணியா மத்திய கல்லூரியை 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றி ஒன்றை பெற்றே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் றோயல் கல்லூரி ஸாஹிராவை வீழ்த்தியது 41 ஆண்டுகளில் முதல் முறை என்பதோடு அந்த அணி பாடசாலை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு தெரிவானது முதல் தடவையாக இருந்தது.

ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் பயிற்சியாளர் மொஹமட் ரூமியின் கீழ் றோயல் கல்லூரி முற்றிலும் மாறுபட்ட அணியாகவே இந்த தொடரில் களமிறங்கியது.

எனினும் போட்டியின் 2ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் கல்லூரியின் கோல் இயந்திரங்களான காவிந்த ரூபசிங்க பந்தை கடத்திச் சென்று செனால் சந்தேசிடம் கொடுக்க கோனர் திசையில் இருந்த அவர் உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது. போட்டியின் ஆரம்பத்தில் இருவரும் றோயல் கல்லூரிக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் ஆரம்பத்தில் புனித ஜோசப் கல்லூரி அடுத்தடுத்து பொனால்டி வாய்ப்புகளை பெறுவதை காணமுடிந்தபோதும் அந்த வாய்ப்புகள் கொண்டு கோல் பெற அந்த அணியால் முடியாமல் போனது.
இதன்போது றோயல் கோல்காப்பாளர் மொஹமட் அஸாத் எதிரணியினரிடம் இருந்து வந்த பந்துகளை சிறப்பாக தடுத்தார்.

ஆரம்பத்தில் ஜோசப் கல்லூரி வீரருடன் மோதிக் கொண்டதால் அஸாத் காயத்துக்கு உள்ளாக சிறிது நேரம் ஆட்டம் தாமதித்தது. எனினும் அவரால் தொடர்ந்து ஆட முடியுமானது.

இந்நிலையில் 27 ஆவது நிமிடத்தில் காவிந்த ரூபசிங்க எதிரணி பெனால்டி எல்லைக்கு அருகில் இருந்து உதைத்த ப்ரீ கிக் றோயல் கோல்காப்பளரின் கைகளுக்கே சென்றது.
முதல் பாதியில் பெரும்பாலும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய றோயல் கல்லூரி, மலித் விதானகேவுக்கு பதில் வீரராக மொஹமட் மனாப்டீனை மைதானத்திற்கு அனுப்பியது.

கோல் மழை பொழிந்த யாழ் மத்திய கல்லூரி பிரிவு IIIஇன் அரையிறுதியில்

18 வயதிற்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான பிரிவு II மற்றும்…

38 ஆவது நிமிடத்தில் புனித ஜொசப் கல்லூரி தனது எல்லையில் இருந்து எதிரணி கோல் கம்பம் வரை பந்தை அழகாக கடத்திச் சென்றபோதும் சந்தேஷ் கடைசி நேரத்தில் பந்தை தவறவிட்டதால் அந்த அணி கோல்பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்று தவறிப்போனது.

இதில் இரு அணிகளும் உத்வேகத்துடன் ஆடியதால் அடிக்கடி தவறுகள் மற்றும் ஆக்ரோசமான ஆட்டத்தைக் காண முடிந்தது. போட்டியில முதல்பாதி முடியும் நேரத்தில் புனித ஜோசப் கல்லூரி அணித்தலைவர் சச்சின்தக பெரேரா இழைத்த தவறால் மஞ்சள் அட்டை பெற்றார்.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 0 – 0 றோயல் கல்லூரி

முதல் பாதியில் கோனர் ஒன்றைக் கூடப் பெறாத றோயல் கல்லூரி இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த விரைவிலேயே கோனர் வாய்ப்பை பெற்றபோதும் அந்த அணியால் அதனை கோலாக திருப்ப முடியவில்லை.

இந்நிலையில் 46 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள் பந்தை கடத்தி வந்த செனால் சன்தேஷை செஹான் பிரபுத்த கீழே வீழ்த்த புனித ஜோசப் கல்லூரிக்கு பெனால்டி கிடைத்தது. சந்தேஷ் அந்த பெனால்டியை இலகுவாக வலைக்குள் செலுத்தி தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

இந்த கோலை அடுத்து றோயல் கல்லூரி தாக்குதல் ஆட்டம் ஒன்றுக்கு திரும்பியதோடு அடிக்கடி எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமிப்பதை காண முடிந்தது. இதற்கு விரைவிலேயே பலன் கிடைத்தது.

போட்டியின் 58 ஆவது நிமிடத்தில் வைத்து மொஹமட் அமீன் அபாரமான முறையில் பதில் கோல் திருப்பினார். பெனால்டி பெட்டிக்கு வெளியில் வலதுபுற மூலையில் இருந்து லாவகமாக பந்தை தட்டிவிட்டபோது புனித ஜோசப் கோல்பாப்பாளர் சச்சிந்து ஜயசிங்கவுக்கு பிடிக்க முடியாமல் பந்து வலைக்குள் நுழைந்தது.

ஆசிய கால்பந்தாட்ட தலைமை அதிகாரியாக அநுர டி சில்வா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண …

கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டிய புனித ஜோசப் கல்லூரி, சசுன் ரஸ்மின்தவிற்கு பதில் அந்த கல்லூரியின் 16 வயதுக்கு உட்பட்ட அணித்தலைவர் அனஸ் ஹுஸைனை களமிறங்கியது.

தொடர்ந்து செனால் சந்தேஷுக்கு 74 ஆவது நிமிடத்தில் பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் அவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக றோயல் கல்லூரி தனது சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் 90ஆவது நிமிடத்தில் காவிந்த ரூபசிங்க றோயல் கல்லூரி பின்கள வீரர்களை முறியடித்து கோல்கம்பத்திற்கு மிக அருகில் பந்தை எடுத்துச் சென்று கோலை நோக்கி உதைக்க அது றோயல் கல்லூரி கோல்கப்பாளரின் உடலில் பட்டு வெளியேறியபோதும் புனித ஜோசப் பெரும் ஏமாற்றம் கண்ணடது.

எனினும், உபாதையீடு நேரம் ஆரம்பித்த மிக விரைவிலேயே பதும் கிம்ஹான கோனர் திசையில் இருந்து உயர பரிமாற்றிய பந்தை காவிந்த ரூபசிங்க நெருக்கடி இன்றி வலைக்குள் செலுத்தி புனித ஜோசப் கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார்.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 2 – 1 றோயல் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித ஜோசப் கல்லூரி – செனால் சந்தேஷ் 46’ (பெனால்டி), காவிந்த ரூபசிங்க 90’+1

றோயல் கல்லூரி – மொஹமட் அமீன் 58’