யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் பண்டாரவளை புனித தோமியர் கல்லூரி அணிகளுக்கிடையிலான பாரம்பரியமான கிரிக்கெட் போட்டித்தொடர் நேற்றும், இன்றும் (11,12) சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
சுழற்பந்துவீச்சாளர்களின் துணையுடன் முதலாவது இன்னிங்ஸில் பலத்த சவாலிற்கு மத்தியில் முன்னிலை பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியினர், இரண்டாவது இன்னிங்ஸில் டினோசன் பருவகாலத்தில் தனது இரண்டாவது சதத்தினை பெற 300 ஓட்டங்களை குவித்தனர். ஆட்ட நேர நிறைவில் தோமியர்கள் 3 விக்கெட்டுக்களை காத்திருக்க போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.
நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்
இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ரொஹான்…
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய சென். ஜோன்ஸிற்கு ஆரம்ப துடுப்பாட்டவீரர் சுகேதன் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும் பண்டாரவளை தரப்பின் வேகப்பந்து வீச்சு இணை சுபுன், தெவின் விக்கெட்டுக்களை சாய்க்க 59 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர் யாழ் வீரர்கள்.
அணித்தலைவர் அபினாஷ் 27 பந்துகளில் 60 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார், மறுபக்கம் ஆறாவது இலக்கத்தில் களம் நுழைந்திருந்ந அன்ரன் அபிஷேக் ஆட்டமிழக்காத 35 ஓட்டங்களின் உதவியுடன் 167 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.
தெவின் 4 விக்கெட்டுக்களையும், சுபுன் மற்றும் சசித் தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அன்ரன் அபிஷேக்கின் பந்திற்கு ஓட்டமேதுமின்றி பண்டாரவளை வீரர்கள் முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தபோதும், வெறுமனே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து 86 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்தனர் தோமியர்கள்.
சுழற் பந்துவீச்சாளர் சரண் நான்காவது விக்கெட்டினை வீழ்த்த, 133 ஓட்டங்களிற்கு தோமியர்களின் சகல விக்கெட்டுக்களினையும் வீழ்த்தினர் யாழ் வீரர்கள்.
சரண் 4, அபினாஷ் 3 மற்றும் எல்சான் 2 என 9 விக்கெட்டுக்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியிருந்தனர்.
பின்னர் 34 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பித்திருந்த சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு சுகேதன் 23, மற்றும் ஹேமதுதன் 21 ஓட்டங்களினையே பெற்றுக்கொடுத்தனர். முன்வரிசை மீண்டுமொருமுறை சோபிக்கத்தவற 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தனர் யாழ் வீரர்கள். ஐந்தாவது விக்கெட்டிற்காக இளைய துடுப்பாட்ட வீரர்களான டினோசன் அபிஷேக் இணை 173 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தது. அபிஷேக் 69 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். அபினாஷ் 34 பந்துகளில் அரைச்சதம் கடக்க மறுமுனையில் டினோசன் 16 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக வீழ்த்தப்படாத 118 ஓட்டங்களினை பெற்றிருக்கையில், 317 ஓட்டங்களுடன் ஆட்டத்தினை இடைநிறுத்தினர் சென். ஜோன்ஸ் கல்லூரியினர்.
தோமியர்களுக்கெதிரான சதத்துடன் 17 வயதுடைய டினோசன் பருவகாலத்தில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்திருக்கின்றார்.
ஸ்ரீ றாஹுலவுடன் அக்குறனை அஸ்ஹர் கல்லூரிக்கு இன்னிங்ஸ் தோல்வி
சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு டிவிஷன் – III பாடசாலைகளுக்கு…
முன்வரிசையில் தெவின் அமரசிங்கவின் 48 ஓட்டங்களின் உதவியுடன் 49 ஓவர்களில் 116 ஓட்டங்களை பண்டாரவளை தோமியர்களின் 7ஆவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. பின்வரிசையில் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடிய சனித் டி சில்வா ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
உனேஷ் பெரேரா, சனித் டி சில்வா இணை 12 ஓவர்களிற்கு விக்கெட்டினை பறிகொடுக்காது துடுப்பெடுத்தாட போட்டி சமநிறையில் நிறைவிற்குவந்தது.
எல்சான் டெனுசன் 3 விக்கெட்டுக்களையும், அபீஷேக் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.
சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் – 167 (28.2) மேர்ஃபின் அபினாஷ் 60, அன்ரன் அபிஷேக் 35*, அன்ரனி சுகேதன் 25, சுபுன் செனவிரத்ன 3/41, தெவின் அமரசிங்க 4/42, சவித் பஸநாயக்க 2/30 & 317/5d (59.3) தெய்வேந்திரம் டினோசன் 118*, அன்ரன் அபிஷேக் 69, மேர்ஃபின் அபினாஷ் 58*, அன்ரனி சுகேதன் 23, சவித் பஸநாயக்க 3/138, தேவின் அமரசிங்க 2/33
புனித தோமியர் கல்லூரி, பண்டாரவளை – 133 (36.1) தெவின் அமரசிங்க 41, லவன் விஜேரத்ன 23, மொஹமட் மபாஸ் 22, சரண் 4/27, மேர்ஃபின் அபினாஷ் 3/41, எல்சான் டெனுசன் 2/7 & 156/7 (61) தெவின் அமரசிங்க 48, சனித் டி சில்வா 26* , எல்சான் டெனுசன் 3/31, அன்ரன் அபிஷேக் 2/18
போட்டி முடிவு – சமநிலை (முதலாவது இன்னிங்ஸ் புள்ளிகளடிப்படையில் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<