நாவலப்பிடி, ஜயதிலக்க விளையாட்டரங்கில் நேற்று (09) நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) தொடரின் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகத்திற்கு எதிரான போட்டியில் 1-0 என வெற்றி பெற்ற புளூ ஸ்டார் அணி வீரர்கள், ரசிகர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மோதலில் முடிந்த கொழும்பு – புளூ ஸ்டார் போட்டி
களுத்துறை புளூ ஸ்டார் மற்றும் கொழும்பு கால்பந்து கழக..
DCL தொடரில் இதுவரை வீழ்த்தப்படாத அணியாகத் திழ்கின்ற புளூ ஸ்டார் வீரர்களும் ரசிகர்களும் போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாடிவிட்டு உடைமாற்றும் அறைக்கு செல்லும்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஒரு தொகை பார்வையாளர்கள் கம்புகள் மற்றும் வாலிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ThePapare.com க்கு பிரத்தியேகமாக பேட்டியளித்த புளூ ஸ்டார் வீரர் லஹிரு தாரக்க “வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்னர் நாம் எமது உடைமாற்றும் அறைக்கு சென்றபோது பத்து அல்லது பன்னிரண்டு பேர் பொல்லுகள், கற்கள் மற்றும் வாலிகளால் எம்மைத் தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களிடம் இருந்து தப்பி வெளியேற நாம் முயற்சித்தோம், அவர்கள் தொடர்ந்து எம்மை தாக்கினார்கள். இதன்போது, எமது கோல்காப்பாளர் இருவரும் மோசமாக காயமடைந்தனர்” என்று குறிப்பிட்டார்.
புளூ ஸ்டார் கோல் காப்பாளர்களான மொஹமட் ரிஸ்வி மற்றும் மஞ்சுல பெர்னாண்டோ இருவருக்கும் தலை மற்றும் கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாக தாரக்க குறிப்பிட்டார்.
அஜ்மிரின் கோல் மூலம் புளூ ஸ்டார் அணிக்கு வெற்றி
வெலிசரை, கடற்படை மைதானத்தில் நடைபெற்ற 9…
“எம்மால் திருப்பித் தாக்க முடியும். ஆனால் நாம் எமது சொந்த மைதானத்தில் இருந்து வெளியே ஆடுகிறோம். மைதானத்தில் எந்த பொலிஸ் பாதுகாப்பும் இருக்கவில்லை. கிறிஸ்டல் பெலஸ் அதிகாரிகள் அல்லது வீரர்கள் எமக்கு உதவிக்கு வரவில்லை. திரைப்படம் ஒன்றை பார்ப்பது போல், உடைமாற்றும் அறையில் இருந்து நாம் தாக்கப்படுவதை அவர்கள் பார்த்திருந்தார்கள். அதுவே கவலையானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) போட்டித் தொடரின் விதிகளுக்கு அமைய, போட்டியை நடத்தும் அணியே மைதானம், வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு உட்பட அனைத்துவகைப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன் இதேபோன்ற ஒரு சம்பவமாக, கொழும்பு கால்பந்து கழகத்திற்கு எதிராக புளூ ஸ்டார் அணி சமநிலை செய்த போட்டியின் நடுவே நடுவர் ரசிகர்களால் தாக்கப்பட்டார். இந்த பதற்றத்தின்போது புளூ ஸ்டார் வீரர்கள் கொழும்பு அணி வீரர்களுக்கு பாதுகாப்பு அளித்து, பாதுகாப்புடன் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<