SSC அணிக்காக இரட்டை சதம் குவித்த கெளஷால் சில்வா

406

இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் ஆறு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

இன்றைய நாளுக்கான போட்டிகளில் கெளஷால் சில்வா மற்றும் பியமால் பெரேரா ஆகிய வீரர்கள் இரட்டை சதங்கள் பெற்றிருந்ததோடு மினோத் பானுக்க, ஜீவன் மெண்டிஸ் மற்றும் சஞ்சிக்க ரித்ம ஆகிய வீரர்களும் சதங்களோடு ஜொலித்திருந்தனர்.

ஒரு இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுக்களை சாய்த்த ஜீவன் மென்டிஸ்

இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு A கிரிக்கெட் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தி வரும் மேஜர் பிரீமியர் லீக்…

BRC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்கவில் நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியின் முதல் நாளில், BRC அணியின் முதல் இன்னிங்ஸ் (105) துடுப்பாட்டத்தை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் மினோத் பெற்றுக் கொண்ட அபார சதத்தின் (180) உதவியோடு 498 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தவாறு தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

Photos: SLPA SC v Tamil Union C & AC – Major League Tier A Tournament 2018/19

இதன் பின்னர், 393 ஓட்டங்கள் என்கிற பாரிய பின்னடைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய BRC அணியினர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றனர்.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 105 (43.4) – ஹஷேன் ராமநாயக்க 24, விஷ்வ பெர்னாந்து 4/52, லஹிரு கமகே 3/19

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 498/7d (119) – மினோத் பானுக்க 180, மாதவ வர்ணபுர 61, அஷான் பிரியன்ஞன்  69, லசித் அபேரத்ன 66

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 16/1 (10)

NCC எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம்

சோனகர் கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய NCC அணி 330 ஓட்டங்களைப் பெற்றது. இதன் பின்னர், தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய சோனகர் கிரிக்கெட் கழக அணியினர் NCC வீரரான சத்துரங்க டி சில்வாவின் அபார பந்துவீச்சு காரணமாக 81 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். NCC அணியின் பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா வெறும் 32 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

இதனை அடுத்து 249 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த NCC அணிக்கு ஹசித பொயகொட சதம் (101) ஒன்றினைப் பெற்றுத்தந்தரர்.

இந்த சதத்தின் உதவியோடு NCC அணியினர் தமது இரண்டாம் இன்னிங்ஸில் 367 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தி போட்டியின் வெற்றி இலக்காக 617 ஓட்டங்களை சோனகர் கழகத்திற்கு நிர்ணயம் செய்தனர்.

மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்

நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடிய, இலங்கை அணியின் முன்னாள் தலைவர்…

மிகவும் கடினமான இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் சோனகர் கிரிக்கெட் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 330 (65.5) – பெதும் நிஸ்ஸங்க 163, அஞ்செலோ பெரேரா 61, தரிந்து கெளஷால் 4/72

சோனகர் கிரிக்கெட் கழகம் – 81 (24.3) – சத்துரங்க டி சில்வா 6/32

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 367/7 (59) – ஹசித பொயகொட 101, பெதும் நிஸ்ஸங்க 84, சாமிக்க கருணாரத்ன 82, ரமேஷ் மெண்டிஸ் 4/92

சோனகர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 43/5 (13.3) – இரோஷ் சமசூரிய 22*, சச்சிந்த பீரிஸ் 3/23

இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பனாகொடயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில் தொடர்ந்த இராணுவப்படை விளையாட்டுக் கழகம் சஞ்சிக்க ரித்ம பெற்றுக்கொண்ட சதத்தின் (119) உதவியோடு 357 ஓட்டங்களினை முதல் இன்னிங்ஸில் பெற்றது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக அணியினர், யஷோத லங்காவின் (76) அரைச்சத உதவியுடன் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 148 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ஸ்திர நிலையில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 357 (124.4) – சஞ்சிக்க ரித்ம 119, லக்ஷான் எதிரிசிங்க 76, சாகர் பரேஷ் 3/111

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 148/2 (34)

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

நேற்று கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் அணியின் ஜீவன் மெண்டிஸின் அசாத்திய பந்துவீச்சு காரணமாக தமது முதல் இன்னிங்ஸில் 245 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. அதன் போது ஜீவன் மெண்டிஸ் 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்திற்கு நேற்று பந்துவீச்சில் கைகொடுத்த ஜீவன் மெண்டிஸ் இம்முறை துடுப்பாட்டத்தில் அசத்தி சதம் (106*) பெற்றார். இந்த சதத்தின் உதவியோடு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 377 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 245 (82) – ருவிந்து குணசேகர 66, பிரசான் விக்கிரமசிங்க 59, ஜீவன் மெண்டிஸ் 9/53

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 377/8 (96) – ஜீவன் மெண்டிஸ் 106*, இமேஷ் உதயங்க 6/141

மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள மெதிவ்ஸ்

நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடிய…

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 212 ஓட்டங்களை குவித்தது.

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸினை ஆரம்பித்த SSC அணிக்கு இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெளஷால் சில்வா இரட்டைச் சதம் பெற்றுத்தந்தார். இந்த இரட்டை சதத்தின் உதவியோடு SSC அணி போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 438 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் உறுதியான நிலையில் உள்ளது. இரட்டைச் சதம் தாண்டிய கெளஷால் சில்வா 207 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கின்றார்.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 212 (62.3) – சனித டி மெல் 43, விமுக்தி பெரேரா 3/33

SSC (முதல் இன்னிங்ஸ்) – 438/8 (111) – கெளஷால் சில்வா 207*, சந்துன் வீரக்கொடி 63, சந்தகன் பத்திரன 4/120

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் அணியின் சொந்த மைதானத்தில் இடம்பெறுகின்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடி வருகின்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு நேற்றைய நாள் ஆட்டத்தில் சதம் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த பியமால் பெரேரா இன்றைய இரண்டாம் நாளில் இரட்டை சதம் (206*) கடந்தார். குறித்த இரட்டை சதத்தின் உதவியோடு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் 419 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தவாறு ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் பதுரெலிய கிரிக்கெட் கழகம் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் 95 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 419/9d (150) – பியமால் பெரேரா 206*, விஷாட் ரந்திக்க 85, புத்திக்க சஞ்சீவ 5/86

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 95/1 (30)

இன்றைய போட்டிகள் அனைத்தினதும் மூன்றாவதும் இறுதி நாளுக்குமான ஆட்டங்கள் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<