தொடர்ந்து 3ஆவது முறை கழக உலகக் கிண்ணம் ரியல் மெட்ரிட் வசம்

450
Image Courtesy - AFP

அபூதாபியின் அல் அயின் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழகம், கழகங்களுக்கு இடையிலான கால்பந்து உலகக் கிண்ணத்தை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கைப்பற்றியது.

அபூதாபியில் கடந்த சனிக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் லூகா மொட்ரிச் மற்றும் செர்ஜியோ ரமோஸ் கோல்கள் புகுத்த ரியல் மெட்ரிட் அணியால் 4-1 என இலகு வெற்றி ஒன்றை பெற முடிந்தது. தனது சொந்த மைதானத்தில் ஆடிய அல் அயின், அரையிறுதியில் ஆர்ஜன்டீன கழகமான ரிவர் பிளேட் கழகத்தை பெனால்டி ஷுட்அவுட் முறையில் வீழ்த்தியே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ரியல் மெட்ரிட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளரானார் சென்டியாகோ

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜுலேன் லொபெடகுய் இடைநிறுத்தப்பட்டதை……

எனினும் ரியல் மெட்ரிட் இந்தப் பருவத்தில் தடுமாற்றம் கண்டபோதும் கழக உலகக் கிண்ணத்தில் அந்த அணி அரையிறுதியில் ஜப்பானின் அன்ட்லர்ஸை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி ரியல் மெட்ரிட் தனது போட்டி அணியான பார்சிலோனாவை பின்தள்ளி சாதனை எண்ணிக்கையாக கழக உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளது.   

எனினும், போட்டி ஆரம்பித்த விரைவில் அல் அயின் அணி முன்னிலை பெற பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. சுவீடன் வீரர் மார்கஸ் பேர்க் பந்தை வலையை நோக்கி உதைத்தபோதும் ரியல் மெட்ரிட் கோல்காப்பாளர் திபோட் கோர்டொயிஸ் அதனை தடுத்தார்.

எனினும், ஸ்பெயின் கழகம் நீண்ட நேரம் காத்திருக்கவில்லை. கரிம் பென்சமா பரிமாற்றிய பந்தை பெற்ற லூகா மொட்ரிச் பெனால்டி பெட்டிக்கு வெளியே இடது முலையில் இருந்து உதைத்து கோலாக்கினார்.

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 0 அல் அயின்

இந்நிலையில் இரண்டாவது பாதியில் ரியல் மெட்ரிட் இரண்டாவது கோலையும் புகுத்தி நெருக்கடி இன்றி முன்னிலை பெற்றது. கோணர் கிக்கை அடுத்து பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து மார்கோஸ் லொரன்ட் அபாரமான கோல் ஒன்றை புகுத்தினார்.  

அட்லடிகோ – பார்சிலோனா மோதல் சமநிலையில்; ரியல் மெட்ரிடுக்கு அதிர்ச்சித் தோல்வி

சர்வதேச போட்டிகளுக்காக வழங்கப்பட்ட விடுமுறையைத் தொடர்ந்து ஆரம்பமாகியுள்ள லாலிகா போட்டிகளில் ஏய்பர் அணிக்கு…….

78 ஆவது நிமிடத்தில் மொட்ரிக் உதைத்த கோணர் கிக்கை அடுத்து ரமோஸ், அல் அயின் பின்கள வீரர்களை தாண்டி தலையால் முட்டி கோல் ஒன்றை பெற்றபோது ரியல் மெட்ரிட் அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

ஜப்பான் மத்தியகள வீரர் சுகாசா ஷியோடானி தலையால் முட்டி அல் அயின் அணிக்கு கொல் ஒன்றை பெற்றுக்கொடுத்ததோடு போட்டியின் மேலதிக நேரத்தில் ரியல் மெட்ரிட் அணிக்காக அல் அயின் வீரர் நாதர் முஸ்தபா ஓன் கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.  

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 4 – 1 அல் அயின்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட்லூகா மொட்ரிக் 14′, மார்கோஸ் லொரன்ட் 60′, செர்ஜியோ ரமோஸ் 78′, நாதர் முஸ்தபா 90+1 (ஓன் கோல்)

அல் அயின்  சுகாசா ஷியோடானி 86′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<