“ஸ்டீவ் ஸ்மித் விளையாட முடியாது” ; பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி

834

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) கிரிக்கெட் தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவுஸ்திரேலிய  அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், 2019ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான போட்டிகளில் விளையாட முடியாது என்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.

ஷகிபின் சகலதுறையால் தொடரை சமன் செய்தது பங்களாதேஷ்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் ….

பங்களாதேஷ் பிரீமியிர் லீக்கின் கொமிலா விக்டோரியன்ஸ் அணி, இலங்கை வீரர் அசேல குணரத்னவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித்தை தனிப்பட்ட ரீதியில் ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும், இவரது ஒப்பந்தமானது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் சட்டத்திட்டத்துக்கு முரணானது என்ற காரணத்தால், அவர் இம்முறை விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்ளாதேஷ் பிரீமியர் லீக்கில் (பி.பி.எல்)  வீரர்களை தனிப்பட்ட ரீதியில் ஒப்பந்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த லீக்கின் வீரர்கள் வரைவுக்குள் உள்ளடக்கப்படாத ஸ்டீவ் ஸ்மித்தை கொமிலா விக்டோரியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தமை சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித்தின் ஒப்பந்தம் முரணானது என பி.பி.எல். அணி உரிமையாளர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பி.பி.எல். நிர்வாகக்குழுவிடம் அறிவித்திருந்தனர். இதுதொடர்பில் ஆராய்ந்த நிர்வாகக்குழு, இறுதி முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தது. இதன்படி, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்க முடியாது என்பதை உறுதிசெய்துள்ளது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ……

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உத்தரவின் படி, பங்களாதேஷ் பிரீமியர் லீக் நிர்வாகக்குழு கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தில்,

பி.பி.எல். வீரர்கள் ஒப்பந்த சட்டத்தின் படி, வீரர்கள் வரைவில் உள்ளடக்கப்படாத வீரர்களை, அணிகள் நேரடியாக ஒப்பந்தம் செய்ய முடியாது. இதன்படி ஸ்டீவ் ஸ்மித்தின் ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது. ஸ்மித் பி.பி.எல். தொடரின் வீரர்கள் வரைவில் அவரது பெயரை உள்ளடக்கியிருக்கவில்லை. இதனால் ஸ்டீவ் ஸ்மித்தை அணிகளில் இணைக்க முடியாதுஎன குறிப்பிடப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<