கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் ஆரம்பமான வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஹசித போயகொட மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியோடு இலங்கை 7 விக்கெட்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில் தலைவர் ஜயண்ட் யாதவ் மற்றும் ஷாம்ஸ் முலானி போன்றவர்கள் போராடியும் 267 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்ததால் 2018ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணம் மீண்டும் இலங்கை வசமானது.
කොරියාව හමුවේ යොවුන් ඇතුන් කබලෙන් ලිපට වැටේ
ආසියානු වයස අවුරුදු 19න් පහළ රග්බි ශූරතාවලියේ සිය …
ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களாக 1996 முதல் 2014 வரை வலம்வந்த இலங்கை அணிக்கு இந்த மண்ணின் ஒவ்வொரு பார்வையாளனும் ரசிகன். 1996, 2007, 2011 என மூன்று உலகக்கிண்ண இறுதிப்போட்டிகள், 2002 சம்பியன்ஸ் கிண்ணம் 2009, 2012, 2014 என மூன்று டி20 இறுதிப்போட்டிகள், 1986, 1997, 2004, 2008, 2014 என 5 ஆசிய கிண்ணங்கள் என்று உலக கிரிக்கெட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இலங்கை.
ஜயசூரிய, முரளி, சங்கக்கார, ஜெயவர்தன, வாஸ், மாலிங்க, டில்ஷான் என்று அந்த அணி பல நட்சத்திர வீரர்களை தன்னகத்தே கொண்டது மட்டுமின்றி அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற அந்நாளின் முன்னணி நாடுகளுக்கெல்லாம் இலங்கை சிம்ம சொப்பனம் தான். ஆனாலும், இந்த வீரர்களின் ஓய்வுக்கு பின்னராக இலங்கை அணி தன்னை நிரூபிக்க சற்று தடுமாறுவது உண்மையே.
தேசிய அணியின் நிலை இரசிகர்களுக்கு கவலை அளித்தாலும் இந்த வருடம் ஒரு உலகக் கிண்ணமும் ஒரு ஆசியக் கிண்ணமும் தேசிய அணி அல்லாத ஏனைய அணிகளால் கொண்டுவரப்பட்டு எங்கள் பழைய நினைவுகளை மீட்டிக் கொடுத்திருக்கின்றன. ஐ.சி.சி. அறிமுகப்படுத்திய முதலாவது செவிப்புலனற்றவர்களுக்கான டி20 உலகக் கிண்ணத்தினை இந்தியாவில் வைத்து இறுதிப் போட்டியில் இந்தியாவையே வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்திருந்தனர் இலங்கை வீரர்கள்.
இந்த உலகக் கிண்ண வெற்றியைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் நடாத்திய வளர்ந்துவரும் வீரர்களுக்கான மூன்றாவது ஆசியக் கிண்ணமும் இலங்கை வசமாகியிருக்கிறது.
கடந்த டிசம்பர் 6ம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமான வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணத்தை இம்முறை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்தின. இலங்கைக்கான முதல் குழுநிலை போட்டி கடந்த 7ம் திகதி ஓமானுக்கு எதிராக ஆரம்பமாகியது. ஆரம்ப போட்டியிலேயே ஹசித போயகொட, அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஷம்மு அஷான் ஆகியோர் அரைச்சதங்களின் மூலம் அசத்த, இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 324 எனும் இமாலய இலக்கை ஓமானுக்கு பரிசாக அளித்தது. அதை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமானால் 8 விக்கெட் இழப்புக்கு வெறும் 215 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இந்தப் போட்டியில் 109 ஒட்டங்களால் வெற்றியடைந்த இலங்கை அணி குழுநிலையில் தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டது.
மறுதினமே ஆப்கானிஸ்த்தானுக்கு எதிரான போட்டி. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணி விக்கெட்டுகளை இழந்த போதும் கரீம் ஜனாட்டின் நிதான ஆட்டத்தால் 210 ஓட்டங்களை பெற கூடியதாக இருந்தது. பதிலெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் தனது 2வது தொடர் அரைச் சதத்தை பூர்த்தி செய்ய இறுதி ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
முதலாவது போட்டியின் பின்னர் உபாதை காரணமாக அணித்தலைவர் சரித் அசலங்க விளையாட முடியாத நிலை ஏற்பட சுழற்பந்து வீச்சாளரான லசித் அம்புலதெனிய அணிக்குள் சேர்க்கப்பட்டார். அணியின் உபதலைவரான ஷம்மு அஷான் அணியின் தலைமை பொறுப்பேற்றார். ஷம்மு தலைமையில் ஆப்கானுக்கு எதிராக பெற்ற வெற்றியுடன் இலங்கை அணி தனக்கான அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.
කොරියාව හමුවේ යොවුන් ඇතුන් කබලෙන් ලිපට වැටේ
ආසියානු වයස අවුරුදු 19න් පහළ රග්බි ශූරතාවලියේ සිය ….
அடுத்த போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி. இரு அணிகளும் அறையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் குழுநிலை வெற்றியாளர் யாரென தீர்மானிக்கும் பலப்பரீட்சை. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் அவிஷ்க பெர்னாண்டோ பெற்ற 80 ஒட்டங்கள் மற்றும் அசேல குணரத்தினவின் 67 ஓட்டங்கள் ஆகியவற்றால் 260 என்ற கணிசமான ஓட்டங்களை எட்டியிருந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹமாட் சிங்கின் அபார சதத்துடன் 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து குழு நிலையில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.
குழு B இல் இரண்டாம் இடம் பெற்ற இலங்கை அணி குழு A இன் வெற்றியாளர்களான பங்களாதேஷ் அணியை அறையிறுதிப் போட்டியில் எதிர்கொண்டது. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி மிஸ்ஸானுர் ரஹ்மான், யாசிர் அலி ஆகியோரின் அரைச்சாதங்களால் ஒருபுறம் ஓட்டங்களை பெற்றாலும் சாமிக கருணாரட்னாவின் துல்லியமான பந்துவீச்சு மூலம் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்க்க அசித பெர்னாண்டோவும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அனைத்து விக்கெடுகளையும் இழந்த நிலையில் பங்களாதேஷ் 237 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய இலங்கை அணி கமிந்து மெண்டிஸ் விளாசிய 91 ஒட்டங்களின் உதவியுடன் 48.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து தொடர்ந்தும் 2வது தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
மறுமுனையில் வீழ்த்தப்படாத அணியாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது. இலங்கை ஏற்கனவே குழுநிலையில் இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்த போட்டி அணி வீரர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்திருக்கும்.
இறுதியாக நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ணம், 19 வயத்துக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் ஆகியவற்றை இந்தியா வெற்றி கொண்டிருந்த நிலையில் இந்த கிண்ணமும் அவர்கள் வசமாகி விடும் என்ற எண்ணம் அநேகர் மனதில் உதயமாகி இருந்தது. ஆசிய கிரிக்கெட்டின் பிதாமகர்கள் என்று இந்தியா தன்னைத் தானே மார்தட்டிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னும் ஒரு இறுதிப்போட்டி.
කොරියාව හමුවේ යොවුන් ඇතුන් කබලෙන් ලිපට වැටේ
ආසියානු වයස අවුරුදු 19න් පහළ රග්බි ශූරතාවලියේ සිය …
ஆனால், இலங்கை வளர்ந்து வருவோர் அணியை பொறுத்த வரையில் இந்த தொடர் இந்தியாவுக்கு எதிரான தோல்வியை தவிர்த்து ஒரு சாதகமான தொடராகவே கருதப்படுகிறது. இன்னமும் குறிப்பிட்டுச் சொன்னால் முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணி தேடிக்கொண்டிருக்கும் பல வீரர்கள் இந்த தொடரின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
இறுதிப் போட்டிக்கு முன்னராகவே கமிந்து மெண்டிஸ் 4 போட்டிகளில் 3 அரைச்சதங்கள் விளாசியதுடன் 8 விக்கெட்டுகளையும் தன்வசப்படுத்தி இருந்தார். அவிஷ்க பெர்னாண்டோ 2 அரைச்சதங்கள் பெற்ற நிலையில் லசித் அம்புலதெனிய, ஷம்மு அஷான், சாமிக கருணாரட்ன போன்ற வீரர்களும் சிறந்த முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்திய அணியும் IPL நட்சத்திரங்களான அங்கிட் ராஜ்பூட், நிதிஷ் ராணா, மயன்க் மார்கண்டே போன்ற வீரர்கள் அணியில் உள்வாங்கப்பட்டமை மற்றும் ஜயண்ட் யாதவின் தோல்வியை தழுவாத தொடர் வழிநடத்தலும் அவர்களின் பலத்தை பறைசாற்றின.
இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க உபாதை காரணமாக வெளியேறிய பின்னர் அந்த பொறுப்பை ஷம்மு அஷான் ஏற்றார். 2014 டி-20 உலகக் கிண்ண போட்டிகளின் போதும் தலைவர் மாற்றப்பட்டு அந்த தொடரையும் இலங்கை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவும் அதே போன்றதொரு சுவாரஷ்யமான சம்பவமாகவே கருதப்படும். இலங்கை தலைவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது. சில வேளைகளில் அது அனுகூலமகாவும் மாறலாம் என்பதை இந்த தொடர் சுட்டி காட்டுகிறது.
நடப்பு சாம்பியன்களாக களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியை இறுதிப் போட்டியில் வென்று தங்கள் பட்டத்தை நிலைநிறுத்தியது. இலங்கை கிரிக்கெட்டின் மீது சமீப காலமாக ஏற்பட்டு வரும் கடுமையான விமர்சனங்களுக்கு இது ஒரு தக்க பதிலடியாகும். இந்த தொடரில் சகல துறையிலும் தனது திறமையை காட்டிய கமிந்து மெண்டிஸ் இந்த தொடரின் நாயகனாக தெரிவானார். 5 போட்டிகளில் அரைச்சதங்களையும் 8 விக்கெட்டுகளையும் இவர் தன்வசப்படுத்தினார்.
ஏற்கனவே, இரு கைகளாலும் பந்துவீசும் இவரது அசாத்திய திறமையால் உலகளவில் புகழ் பெற்ற கமிந்து மெண்டிஸ் இப்போது தன்னை ஒரு சகலதுறை வீரராகவும் நிரூபித்துள்ளார். ஒரு சுழற்பந்து சகலதுறை வீரராக சனத் ஜெயசூர்யாவின் ஓய்வுக்கு பின்னர் ஒரு பெரிய வெற்றிடம் இருப்பது அணிக்கு பெரும் பாதிப்பகவே அமைந்திருந்தது. கமிந்து மெண்டிஸின் இந்த முறை தொடருமாக இருந்தால் 2019 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு இவர் ஒரு வரப்பிரசாதமாவார்.
அகில தனஞ்சய தடை செய்யப்பட்ட பின்னர் இலங்கையின் சுழற்பந்து வெற்றிடத்தை யார் நிரப்ப போகிறார்கள் என்ற கேள்விக்கு லசித் அம்புலதெனிய, கமிந்து மெண்டிஸ் என இரு பதில்களை கொடுத்திருக்கிறது இந்த தொடர். இலங்கை அணியில் இவர்களின் சாதனைகளுக்காக காத்திருப்போம்.
இது நிச்சயமாக இலங்கை கிரிக்கட்டின் மீட்சி!
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<