மிலிந்தவின் சதத்துக்கு சவால் கொடுத்த இந்திய, ஜிம்பாப்வே வீரர்கள்

912

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் மூன்றாவது வாரத்துக்கான மற்றுமொரு போட்டி இன்று (18) சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இதில் செரசன்ஸ் கழகத்தின் அணித் தலைவர் மிலிந்த சிறிவர்தன அவ்வணிக்காக சதம் கடந்து கைகொடுக்க, சாமிகர எதிரசிங்க மற்றும் பிரமோத் மதுவன்த ஆகியோர் அரைச்சதங்களை குவித்து துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தனர்.

மிலிந்த சிறிவர்தனவின் சதத்துடன் முன்னிலை பெற்ற செரசன்ஸ் கழகம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர்…….

அதேபோல, பதுரெலிய கழகம் சார்பாக விளையாடி வருகின்ற சென்னையைச் சேர்ந்த 32 வயதான சுப்ரமணியம் ஆனந்த் முதல் இன்னிங்ஸில் அரைச்சதப் பெற்றுக்கொள்ள, ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரான டடெண்டா தைபு, சச்சித் பத்திரன மற்றும் சிரான் ரத்னாயக்க ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று அவ்வணியை தோல்வியிலிருந்து மீட்டனர்.

சர்ரே மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் கழகம் தமது முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

செரசன்ஸ் கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அணித் தலைவர் மிலிந்த சிறிவர்தன 175 ஓட்டங்களையும், சாமிகர எதிரசிங்க 53 ஓட்டங்களையும், பிரமோத் மதுவன்த 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் புத்திக சன்ஜீவ மற்றும் சச்சித் பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய கழகம், சுப்ரமணியன் ஆனந்தின் அரைச்சதத்தின் (58 ஓட்டங்கள்) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.

அசத்தல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் மெதிவ்ஸ், மெண்டிஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை நோக்கியிருந்த இலங்கை அணியை, அற்புத……

பதுரெலிய கழகத்தை பந்துவீச்சில் மிரட்டிய கமிந்த கனிஷ்க 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சச்சித்ர பெரேரா மற்றும் மதுர லக்மால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து பலோ ஒன் முறையில் மீண்டும் துடுப்பாட பணிக்கப்பட்ட பதுரெலிய கழகம், சச்சித் பத்திரன, சிரான் ரத்னாயக்க மற்றும் டடெண்டா தைபுவின் அரைச்சதங்களின் உதவியுடன் 215 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

பதுரெலிய கழகத்தின் துடுப்பாட்டம் சார்பாக சச்சித் பத்திரன 77 ஓட்டங்களையும், சிரான் ரத்னாயக்க 67 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொள்ள, டடெண்டா தைபு 57 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் செரசன்ஸ் கழகத்தின் சாமிகர எதிரிசிங்க 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்)  428/9d  (147.1) – மிலிந்த சிறிவர்த்தன 175, சாமிகர எதிரிசிங்க 53*, பிரமோத் மதுவன்த 52*, அண்டி சோலமன்ஸ் 36, அஷேன் பண்டார 33, கமிந்து கனிஷ்க 29, சாலிய சமன் 27, புத்திக சன்ஜீவ 3/92, சச்சித் பத்திரன 3/120, அலங்கார அசங்க 2/78

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 186/10 (79.2) – சுப்ரமணியன் ஆனந்த் 58, சாலிந்த உஷான் 37, சச்சித் பத்திரன 24, சிரான் ரத்னாயக்க 24, கமிந்து கனிஷ்க 4/16, சச்சித்ர பெரேரா 2/31, மதுர லக்மால் 2/44

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) 215/5 (48) – சச்சித் பத்திரன 77*, சிரான் ரத்னாயக்க 62*, டடெண்டா தைபு 57, சாமிகர எதிரிசிங்க 4/34

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<