தென்னாபிரிக்க டி20 லீக் தொடரின் சம்பியனாகிய ஜோசி ஸ்டார்ஸ்

523

தென்னாபிரிக்காவில் முதல் முறை நடைபெற்ற டி-20 தொடரான ம்சான்சி சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கேப்டவுன் பிலிட்ஸ் அணியை ஜோசி ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்தி முதலாவது பருவகாலத்திற்கான சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

தென்னாபிரிக்க உள்ளூர் டி-20 தொடரில் பிரகாசிக்கும் ஜீவன் மெண்டிஸ்

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒழுங்கு….

சர்வதேச வீரர்களின் பங்கேற்புடன் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கேப்டவுனில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது. இதில் பர்ஹான் பஹர்தீன் தலைமையிலான கேப்டவுன் அணி துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய நிலையில் ஜோசி ஸ்டார்ஸ் அணி அனைத்து துறைகளிலும் திறமையை வெளிக்காட்டியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கேப்டவுன் பிலிட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் குவின்டன் டி கொக் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் மத்திய வரிசையில் கைல் வர்ரைன் மற்றும் பஹர்தீன் பெற்ற தலா 23 ஓட்டங்களுமே அதிகபட்சமாகும்.

எனவே, கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களையே பெற்றது. ஜோசி ஸ்டார்ஸ் அணிக்காக அனைத்து பந்துவீச்சாளர்களும் சோபித்தனர்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் …

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஜோசி ஸ்டார்ஸ் அணி 13 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தபோதும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் (33) மற்றும் வென்டர் டுசன் (ஆட்டமிழக்காது 59) ஜோடி 86 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு ஜோசி ஸ்டார்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

இதன்மூலம் அந்த அணி 17.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த தொடரில் பங்கேற்ற இலங்கையின் ஜீவன் மெண்டிஸ் ட்ஷ்வான் ஸ்பாடன்ஸ் அணிக்காக மொத்தம் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

போட்டியின் சுருக்கம்

கேப்டவுன் பிலிட்ஸ் – 113/7 (20) – கைல் வர்ரைன் 23, பர்ஹான் பஹர்தீன் 23, பியுரன் ஹென்ட்ரிக்ஸ் 2/21, டுவன் ஒலிவியர் 2/32

ஜோசி ஸ்டார்ஸ் 115/2 (17.3) –  வென்டர் டுசன் 59*, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 33, மலுசி சிபோடா 1/18

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<