அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 13 வீரர்கள் கொண்ட இந்திய கிரிக்கெட் குழாமில் இருந்து உபாதை காரணமாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா ஆகியோர் விலகியுள்ளனர்.
இதில் அஷ்வினுக்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விறுவிறுப்பான முதல் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…….
இந்திய அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (14) பேர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலகின் அதிவேகமான ஆடுகளங்களில் ஒன்றான பேர்த் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக விளங்குகின்றது. எனவே, நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் நிச்சயமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் சபை, நாளைய போட்டிக்கான 13 வீரர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஷ்வின் கீழ் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அஷ்வின் அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகத் தான் பார்க்கப்படுகிறது.
அணியின் வெற்றிக்காக விமானத்தில் தியாகம் செய்த கோஹ்லி – அனுஷ்கா
அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் …. இந்திய அணித்தலைவரும், …
அதேபோன்று, ரோஹித் சர்மாவும் முதல் போட்டியில் ஏற்பட்ட முதுகுவலி காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக 25 வயதுடைய சகலதுறை ஆட்டக்காரரான ஹனுமா விஹாரி களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயிற்சிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத ப்ரித்வி ஷாவின் காலில் ஏற்பட்ட உபாதை இன்னும் குணமடையாத காரணத்தால் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பெறவில்லை.
இவ்வாறான ஒரு நிலையில், இரண்டாவது போட்டியில் ராகுல் மற்றும் விஜய் மீண்டும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விபரம்
விராட் கோஹ்லி (தலைவர்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், செடிஸ்வர் புஜாரா, அஜிங்கியே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பாண்ட், ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, மொஹமட் சமி, ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<