இலங்கையை வீழ்த்திய அதே இங்கிலாந்து டெஸ்ட் குழாம் மேற்கிந்திய தீவுகள் பயணம்

189

அடுத்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் குழாம்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  

இலங்கை அணியை 3-0 என வைட்வொஷ் செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறை வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை வென்ற அதே இங்கிலாந்து டெஸ்ட் குழாம் எந்த மாற்றமும் இன்றி மேற்கிந்திய தீவுகளுக்கான டெஸ்ட் தொடருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை

இலங்கை அணியின் இளம் சுழல் வீரரான அகில தனஞ்சயவின் ….

இதில் இலங்கை சுற்றுப்பயணத்தில் சோபிக்கத் தவறிய ஜோ டென்லி மற்றும் ஒலி ஸ்டோன் இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் தமது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.  

இங்கிலாந்து கௌண்டி சம்பியன்ஷிப் பருவம் முடிவுற்ற நிலையில் அதில் சோபித்தபோதும் ஜேசன் ரோயால் இங்கிலாந்து டெஸ்ட் குழாமில் இடம்பெற முடியாமல் போயுள்ளது. அதேபோன்று, கடந்த மாதம் பாகிஸ்தான் A அணியுடனான முதல்தர போட்டியிலும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு ரோய் தனது திறமையை வெளிக்காட்டினார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-1 என வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியில் இருந்த சேம் கரன், லியாம் டோசன் மற்றும் ஸடொன் மேற்கிந்திய தீவுகளுடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதோடு டொம் கரன் மற்றும் டேவிட் வில்லி அணிக்கு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது டோசன் உபாதைக்கு உள்ளானதை அடுத்து தொடரின் நடுவில் அணிக்கு அழைக்கப்பட்ட டென்லியும் ஒருநாள் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.     

2019 உலகக் கிண்ணத்திற்கான தனது குழாத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் இங்கிலாந்து அணி பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடராக இது உள்ளது. எனினும், .சி.சி. ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து அணி தற்போது முதலிடத்தைப் பிடித்து வலுவான நிலையில் உள்ளது.  

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் அரையிறுதியில் சாதிக்கப் போவது யார்?

விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் இடம்பெற்று…

இதில், பார்படோசில் ஜனவரி 23 ஆம் திகதி டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவிருப்பதோடு இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பமாகும். இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெறவிருப்பதோடு இதற்கான இங்கிலாந்து குழாம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

டெஸ்ட் குழாம்

ஜோ ரூட் (தலைவர்), மொயீன் அலி, ஜேம்ஸ் அண்டர்ஸன், ஜொன்னி போஸ்டோ, ஸ்டுவட் ப்ரோட், ரோரி பேர்ன்ஸ், ஜோஷ் பட்லர், சாம் கரன், ஜோ டென்லி, பென் போக்ஸ், கீட்டன் ஜெனிங்ஸ், ஜன் லீச், ஆதில் ரஷீத், பென் ஸ்டொக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

ஒருநாள் குழாம்

ஒயின் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, ஜொன்னி பேர்ஸ்டோ, ஜோஷ் பட்லர், டொம் கரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டொக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<