முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின் ஐந்தாவது வாரத்துக்கான போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (09) நிறைவுக்கு வந்தன.
டயலொக் கழக றக்பி லீக்கில் CH&FC அணிக்கு முதல் வெற்றி
முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின்…
ஐந்தாவது வார போட்டி முடிவுகளின் படி கண்டி விளையாட்டுக் கழகம் மற்றும் ஹெவ்லொக் விளையாட்டுக் கழகங்கள் ஐந்து வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் முறையே முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளதுடன், கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் CR&FC கழகங்கள் மூன்று வெற்றிகளுடன் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை தக்கவைத்துள்ளன.
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
ரத்மலானையில் கடந்த 7ம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் முதற்பாதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்படை அணி 29-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
அபாரமாக ஆடிய கடற்படை அணி, ரதீஷ செனவிரத்னவின் இரண்டு சிறந்த ட்ரைகள் மற்றும் சத்துர செனவிரத்னவின் மூன்று கன்வேர்சன்களுடன் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டது. முதற்பாதியில் 26-14 என்ற முன்னிலையைப் பெற்ற கடற்படை அணி, அடுத்த பாதியில் கிடைத்த பெனால்டி பயன்படுத்தி வெற்றி பெற்றது.
முடிவு: கடற்படை SC 29 – 14 இராணுவப்படை SC
Photos : Army SC v Navy SC | Dialog Rugby League 2018/19 | #Match 17
ThePapare.com | Hiran Weerakkody | 07/12/2018 Editing and re-using images …
ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் எதிர் CR&FC
லொங்டன் வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது பாதியில் அபாரம் காட்டிய CR&FC அணி, முதற்பாதியின் தவறுகளால் தோல்விக் கண்டது.
ஆரம்பத்தில் கவனயீனமாக ஆடிய CR&FC அணி, ஹெவ்லொக் அணிக்கு புள்ளிகளை விட்டுக்கொடுத்தது. இதன்படி முதற்பாதியில் 21-05 என்ற மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் ஹெவ்லொக் அணி முன்னேற்றம் கண்டது.
எனினும் இரண்டாவது பாதியில் போராடிய CR&FC அணி 22 புள்ளிகளை பெற்றப்போதும், 31-22 என்ற 09 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹெவ்லொக் அணி வெற்றிப்பெற்றது.
முடிவு – ஹெவ்லொக் SC 31 – 22 CR&FC
Photos: Havelock SC vs CR & FC – Dialog Rugby League 2018/19 | #Match 18
ThePapare.com | Viraj Kothalawala | 08/12/2018 Editing and re-using images …
கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் CH&FC
நிட்டவெல மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தங்களுடைய ஐந்தாவது போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கண்டி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட CH&FC அணி, 38-22 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது.
தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் விளையாடி ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருந்த CH&FC அணி, மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. போட்டியின் பாதி நேரத்தில் 19- 8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த கண்டி விளையாட்டு கழக அணி, போட்டியின் முடிவில் 38-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
முடிவு – கண்டி SC 38- 22 CH&FC
Photos : Kandy SC vs CH & FC – Dialog Rugby League 2018/19 | #Match 19
ThePapare.com | Omalka erandeera | 09/12/2018 Editing and re-using images…
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் விமானப்படை விளையாட்டு கழகம் ஆகிய அணிகளுக்கு இடையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 28-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டு ட்ரை மற்றும் ஒரு பெனால்டியுடன் பொலிஸ் விளையாட்டுக் கழகம் முதற்பாதியில் 13 புள்ளிகளை பெற, விமானப்படை அணி மூன்று பெனால்டிகளுடன் 9 புள்ளிகளை பெற்றிருந்தது.
Match Highlights – Police SC v Air Force SC DRL 2018/19 #16
Action from the Dialog Rugby League 16 played between Police SC and…
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், மேலும் இரண்டு ட்ரைகள், ஒரு பெனால்டி மற்றும் ஒரு கன்வேர்சனை வைத்த பொலிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியினை பெற்றுக்கொண்டது. இதேவேளை, விமானப்படை அணி இரண்டாவது பாதியில் ஒரு கன்வெர்சன், ஒரு பெனால்டி மற்றும் ஒரு ட்ரையை வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு – பொலிஸ் SC 28-19 விமானப்படை SC
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<