மாகாண அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய காலி மகளிர் அணி

216

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் தம்புள்ளை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த காலி மகளிர் அணி, 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவாகியது.

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் இன்று (10) நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஹசினி பெரேரா தலைமையிலான காலி மற்றும் சமரி அட்டபத்து தலைமையிலான தம்புள்ளை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணித் தலைவி சமரி அட்டபத்து, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை காலி மகளிர் அணிக்கு வழங்கினார்.

நியுசிலாந்து மண்ணில் பிரகாசித்த குசல் மெண்டில்

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய காலி அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பிரசாதினி வீரக்கொடி 41 ஓட்டங்களையும், மல்ஷா ஷெஹானி 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதனி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, கவீஷா தில்ஹாரி மற்றும் ஹன்சிமா கருணாரத்ன தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர், வெற்றி இலக்காக 193 ஓட்டங்களை கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய காலி மகளிர் அணி சார்பில், சமரி அட்டபத்து மாத்திரம் நிதானமாகத் துடுப்பாடி அரைச்சதமொன்றைப் பெற்றுக்கொடுக்க, அந்த அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 29 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

Photos : Galle vs Dambulla | Women’s Super Provincial Tournament 2018 | Final

அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அணித் தலைவி சமரி அட்டபத்து 53 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார்.

காலி மகளிர் அணியின் சத்யா சந்தீபனி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சுகந்திகா குமாரி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

காலி மகளிர் அணி – 192/9 (50) – பிரசாதினி வீரக்கொடி 41, மல்ஷா ஷெஹானி 40, சசிகலா சிறிவர்தன 26, நிலக்‌ஷி டி சில்வா 25, உதேஷிகா பிரபோதனி 3/29, கவீஷா தில்ஹாரி 2/44, ஹன்சிமா கருணாரத்ன 2/42

தம்புள்ளை மகளிர் அணி – 163 (48.1) – சமரி அட்டபத்து 53, திலினி அமோதரா 27, ஜிமஞ்சலி விஜேமன்னா 20, சத்யா சந்தீபனி 3/28, சுகந்திகா குமாரி 2/22

முடிவு – காலி மகளிர் அணி 29 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க