இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் கடந்த 11 வருடங்களாக தலைநகரான டெல்லியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ சின்னம் என்பன நேற்று (04) மாற்றப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கவுள்ள ஐ.பி.எல் ஏலம்
உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் தொடர்களில் …
முன்னதாக, கடந்த 11 வருடங்களும் டெல்லி டேர்டெவில்ஸ் என அழைக்கப்பட்டு வந்த அணியின் பெயர் தற்போது டெல்லி கெப்பிட்டல்ஸ் (Delhi Capitals) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தங்களுடைய புதிய சின்னத்தினையும் நேற்றைய தினம் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் அணியை (டெல்லி டேர்டெவில்ஸ்) பெங்களூரில் இயங்கிவரும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற உட்கட்டமைப்பு நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு 84 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த அணியானது, தொடர் ஆரம்பித்த முதல் இரண்டு பருவகாலங்களில் பிளே-ஆஃப் சுற்றுவரை முன்னேறியிருந்த போதும், அடுத்த ஒன்பது வருடங்களில் ஒரு தடவை (2012ம் ஆண்டு) மாத்திரமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.
இந்நிலையில், கடந்த 10 வருடங்களாக ஜி.எம்.ஆர். குழுமத்தின் முழு பங்குடன் போட்டியிட்டு வந்த டெல்லி, 2018 ஆம் ஆண்டு போட்டியிட்ட போது, அந்த அணியின் 50 சதவீத பங்கினை மும்பையில் இயங்கிவரும் இரும்பு உற்பத்தி நிறுவனமான ஜிந்தால் சௌத் வெஸ்ட் என்ற நிறுவனம் பகிர்ந்து கொண்டது.
டெல்லி அணி கடந்த வருடமும் தொடரின் 8 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது தங்களுடைய 10 முன்னணி வீரர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது. அத்துடன் தங்களுடைய மூன்று வீரர்களை ஐ.பி.எல். வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம் ஹைதராபாத் அணிக்கு மாற்றிவிட்டு, இந்திய அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானை தங்களது அணியில் இணைத்துக்கொண்டுள்ளது.
அகில தனன்ஜயவை விடுவித்த மும்பை இந்தியன்ஸ் அணி
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கடந்த பருவகால தொடரில் மும்பை ….
இதேவேளை, டெல்லி அணியானது 14 வீரர்களை தக்கவைத்துள்ளதுடன், 7 இந்திய வீரர்கள் மற்றும் 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 10 வீரர்களை ஐ.பி.எல். ஏலத்தில் வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதேநேரம், குறித்த வீரர்களை வாங்குவதற்கு 25.50 கோடி ரூபாவினை (இந்திய ரூபாய்) டெல்லி அணி செலவிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<