பிரீமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை சுவைத்த SSC

301

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மூன்று நாட்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) நிறைவடைந்தன. இந்த போட்டிகளின் விபரம் வருமாறு.

SSC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

தரிந்து ரத்னாயக்க இரண்டு இன்னிங்சுகளிலும் சிறப்பாக பந்துவீசி தலா 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான போட்டியில் SSC அணி 112 ஓட்டங்களால் இலகு வெற்றி ஒன்றை பெற்றது.

தேசிய அணி வாய்ப்பை அரைச்சதம் பெற்று நிரூபித்த சதீர, திரிமான்ன

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் SSC அணி இரண்டு இன்னிங்சுகளிலும் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றதன் மூலம் கொழும்பு அணிக்கு 250 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எனினும் தரிந்து ரத்னாயக்கவின் சுழலுக்கு முகம் கொடுக்க முடியாமல் அந்த அணி 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 229 (63) – கௌஷால் சில்வா 41, சதுன் வீரக்கொடி 35, சச்சித்ர சேனநாயக்க 32, தனுஷ்க குணதிலக்க 23, சம்மு அஷான் 22, தரிந்து ரத்னாயக்க 20, லக்ஷான் சந்தகன் 4/50, லஹிரு கமகே 2/27

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 225 (83) – லசித் அபேரத்ன 92, லஹிரு மதுஷங்க 32*, வனிந்து ஹசரங்க 28, தரிந்து ரத்னாயக்க 7/75, நுவன் பிரதீப் 2/30

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 245 (53.1) – சம்மு அஷான் 65, சந்துன் வீரக்கொடி 47, கௌஷால் சில்வா 35, தரிந்து ரத்னாயக்க 35, அஷான் பிரியன்ஜன் 4/67, லக்ஷான் சதகன் 4/76, சொனால் தினுஷ 2/34  

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137 (40.5) – சொனால் தினுஷ 59, லசித் அபேரத்ன 47, தரிந்து ரத்னாயக்க 7/50, தனுஷ்க குணதிலக்க 2/20

முடிவு – SSC அணி 112 ஓட்டங்களால் வெற்றி


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகத்திடம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்ட துறைமுக அதிகார சபை அணி போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்தது.

சோனகர் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் 320 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டியின் கடைசி நாளில் துறைமுக அதிகாரசபை அணி தனது முதல் இன்னிங்ஸில் 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் பலோ ஓன் (follow on) செய்த அந்த அணி ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320 (91.5) – சாமர சில்வா 87, இரோஷ் சமரசூரிய 51, பபசர வாதுகே 42, சமிந்த பண்டார 4/82, சானக கோமசாரு 3/105, சலனக்க வீரசிங்க 2/62

இலங்கை துறைமுக அதிகாரசபை CC (முதல் இன்னிங்ஸ்) – 156 (67.3) – அதீஷ நாணக்கார 30, ரனேஷ் பெரேரா 29, ரமேஷ் நிமன்த 25, மலித் டி சில்வா 2/45, தரிந்து கௌஷால் 4/40

இலங்கை துறைமுக அதிகாரசபை CC (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 165/4 (68) – யொஹான் டி சில்வா 59, அதீஷ நாணயக்கார 58*, கயான் மனீஷன் 29*, டனோஷ் ரனோதித் 2/52

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

பாடசாலை கிரிக்கெட் விருத்திக்காக கரம் கொடுக்கும் யாழ். மத்தி பழைய மாணவர்கள்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கட்டுநாயக்க, MCG மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ் யூனியன் அணியின் வலுவான துடுப்பாட்டத்திற்கு மத்தியில் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற தமிழ் யூனியன் கழகம் அதற்கான புள்ளிகளை பெற்றுக் கொண்டது.

தமிழ் யூனியன் அணி சார்பில் சச்சித்ர சேரசிங்க மற்றும் கித்ருவன் விதானகே சதம் பெற்றதன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இந்நிலையில் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் கழகம் ஆட்ட நேர முடிவில் 251 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 210 (56.5) – ஹர்ஷ குரே 68, யஷோத லங்கா 48, திக்ஷில டி சில்வா 28, இமேஷ் விமுக்தி 28, ரமித் ரம்புக்வெல்ல 5/54

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 390 (106.4) – சச்சித்ர சேரசிங்க 112, கித்ருவன் விதானகே 105, லஹிரு மிலன்த 53, கமிந்து மெண்டிஸ் 45, நிமேஷ் விமுக்தி 4/61, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/114, திக்ஷில டி சில்வா 2/73

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 251/8 (74) – ஹர்ஷ குரே 39, நிமேஷ் விமுக்தி 38*, ஓஷத பெர்னாண்டோ 38, யஷோத லங்கா 29, ஆர்.பீ. கோமஸ் 28, கமிந்து மெண்டிஸ் 2/47, ரமித் ரம்புக்வெல்ல 3/58

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழத்தின் நெருக்கடியை சமாளித்த கொழும்பு கோல்ட்ஸ் கழகம் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. எனினும் அஷேன் பண்டாரவின் சதத்தின் மூலம் செரசன்ஸ் கழகம் முதல் இன்னிங்சுக்கான புள்ளிகளை பெற்றது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு கோல்ட்ஸ் கழகத்திற்கு கடைசி நாளில் 238 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ஆட்ட நேர முடிவில் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 316 (108.2) – அஷேன் பண்டார 106, சாலிய சமன் 79, மிலிந்த சிறிவர்தன 70, சச்சித்ர பெரேரா 30, கவிஷ்க அஞ்சுல 3/68, நிசல தாரக்க 2/74, ஜெஹான் டானியல் 2/39

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 224 (72) – சதீர சமரவிக்ரம 64, விஷாட் ரந்திக்க 31*, ஜெஹான் டானியல் 29, சாமிக்கர எதிரிசிங்க 3/44, கசுன் ராஜித்த 2/66, மொஹமட் டில்ஷாட் 2/22

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 145/7d (48) – நிபுன் கருணாநாயக்க 57, லியோன் பிரான்சிஸ்கோ 40, அஷேன் பண்டார 27*, நிசல தாரக்க 3/25, அகில தனஞ்சய 3/58

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 56/3 (11) – நிசல தாரக்க 25*, மொஹமட் டில்ஷாட் 2/06

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் BRC

மக்கொன சர்ரே விலேஜ் அரங்கில் நடைபெற்ற போட்டியில் BRC அணி இமாலய ஓட்டங்களை பெற்றபோதும் பதுரெலிய விளையாட்டுக் கழகம் நூலிழையில் தோல்வியை தவிர்த்து போட்டியை சமநிலை செய்தது.

இலங்கை வளர்ந்து வரும் அணியை தலைமை தாங்கும் சரித் அசலங்க

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 191 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய பதுரெலிய அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 164 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 258 (84) – சுப்ரமனியம் ஆனந்த 65, நதீர நாவல 57, சச்சித் பத்திரண 38, கோசல குலசேகர 34, மொஹமட் ஷிராஸ் 5/44, எச். ராமனாயக்க 2/26, டி.எஸ். திலகரத்ன 2/61

BRC (முதல் இன்னிங்ஸ்) – 449/6 (109.3) – பிரவின்த் விஜேசூரிய 123, ஹஷான் ராமநாயக்க 110, ருமேஷ் புத்திக்க 95, டெஷான் டயஸ் 48, பானுக்க ரஜபக்ஷ 33, சச்சித் பத்திரண 3/143, ரிஸ்வான் ஹைதர் 2/55  

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 164/9 (73) – நதீர நாவல 76, டீ.என். சம்பத் 3/39, துவிந்து திலகரத்ன 3/44

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


NCC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

NCC மற்றும் ராகம ஆகிய இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் NCC அணி அஞ்செலோ பெரேராவின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்களை பெற்றது. எனினும் சிறப்பாக துடுப்பாடிய ராகம அணிக்காக இஷான் ஜயரத்ன சதத்தை ஒரு ஓட்டத்தால் பரிதாபமாக தவறவிட்டார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 368 ஓட்டங்களை எடுத்தது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த NCC அணி கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 137 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 272 (73.3) – அஞ்செலோ பெரேரா 123, சாமிக்க கருணாரத்ன 38, சச்சின்த பீரிஸ் 25, மஹேல உடவத்த 24, இஷான் ஜயசூரிய 4/73, அமில அபொன்சோ 4/48, நிஷான் பீரிஸ் 2/32

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 368/9 (109.4) – இஷான் ஜயரத்ன 99, லஹிரு திரிமான்ன 53, சமின்த பெர்னாண்டோ 43, செஹான் பெர்னாண்டோ 33, சமீர டி சொய்சா 70, சச்சின்த பீரிஸ் 4/94, சதுரங்க டி சில்வா 2/11  

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137/6 (37) – ஹசித்த போயகொட 51, மஹேல உடவத்த 39, அமில அபொன்சோ 3/93, நிஷான் பீரிஸ் 1/35

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<