மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாடசாலைகள் மோதும் கால்பந்து தொடர்

272

சமபோஷவின் அனுசரணையோடு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் 14 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலைகள் அணிகளுக்கு இடையே ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கால்பந்து தொடர் டிசம்பர் மாதம் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியோடு நடைபெறவுள்ள இந்த கால்பந்து தொடரில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14 பாடசாலைகள் பங்கேற்கின்றன.

Sri Lanka demolish Singapore in Asian Championship final

Sri Lanka brushed aside hosts Singapore …..

கால்பந்து விளையாட்டு பின்தங்கிய நிலையில் காணப்படும் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் இடையே கால்பந்து விளையாட்டினை பிரபல்யப்படுத்துவது இத்தொடரின் பிரதான நோக்கமாகும்.

இந்த கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடரில், முதற்கட்டமாக குழு நிலைப் போட்டிகள் இடம்பெறுவதோடு அதனை தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் அணிகள் நொக்அவுட் சுற்றுக்கு தெரிவு செய்யப்படும்.

நொக்அவுட் சுற்றில் இருந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகள் தெரிவு செய்யப்படவுள்ளன. அதனை அடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தொடரின் சம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இந்த கால்பந்து தொடரின் மேலதிக விபரங்கள், புகைப்படத் தொகுப்புக்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

தொடரில் பங்கு கொள்ளும் அணிகள் குழு அடிப்படையில்

குழு A

அல்மதீனா வித்தியாலயம், நிந்தவூர்

முஸ்லிம் மகா வித்தியாலயம், சம்மாந்துறை

அஸ்சிறாஜ் மகா வித்தியாலயம், சலம்பகேனி

GMMS கல்லூரி, சவளக்கடை

குழு B

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி

அல்அஸ்ரப் மத்திய கல்லூரி, சம்மாந்துறை

அல்ஹம்ரா வித்தியாலயம், சம்மாந்துறை

குழு C

அல்மதீனா மகா வித்தியாலயம், மருதமுனை

மக்கான் மாக்கார் வித்தியாலயம், ஏறாவூர்

சம்மாந்துறை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்

அல்மிஸ்பா மகா வித்தியாலயம், கல்முனை

குழு D

அல்மனார் மத்திய கல்லூரி, கல்முனை

அக்பர் வித்தியாலயம், சாய்ந்தமருது

திருச்சிலுவை கல்லூரி, கல்முனை

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<