இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு பரிசாக படகொன்று

245

ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற 3ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்த இளம் வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவின் குடும்பத்துக்கு மீன்பிடித்துறை அமைச்சினால் படகொன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இளையோர் ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற இளம் வீராங்கனை பாரமி வசந்தி

ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில்..

புத்தளம் மாவட்டம்சிலாபத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மீனவக் கிராமமான அம்பகந்தவில சரப்பு தோட்டத்தில் வசித்து வருகின்ற 17 வயதான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லாவின் தந்தையின் பெயர் கே.எம் அந்தோனி டியுடர் பெர்னாண்டோ. அவர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். தாயாரின் பெயர் எம். ரீடா பெர்னாண்டோ. அக்கா ஒரு மெய்வல்லுனர் வீராங்கனை. தேசிய மட்டத்தில் 800 மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்த அவர், தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்.

இந்த நிலையில், மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தமது மகளை சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்க செய்வதற்காக தமது சொந்த வீட்டை அடகு வைத்து அந்தப் பணத்தின் மூலமாக அவருடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கும் அளவுக்கு பாரமியின் பெற்றோர்கள் தமது வாழ்க்கையை தியாகம் செய்தனர்.

இதன் பிரதிபலனாக, யாருடைய தயவும் இல்லாமல் மிகவும் குறுகிய காலத்தில் மெய்வல்லுனர் அரங்கில் இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்த பாரமியின் வெற்றியை இன்று முழு நாடும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

கடற்கரையில் ஓடி விளையாடி இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமி

சிலாபத்திலிருந்து ஆசியாவை வெல்ல தாய்லாந்துக்குச்..

எனினும், அவருடைய இந்த வெற்றிப் பயணத்துக்குப் பின்னால் மிகவும் சோகமான கதையொன்றும் இருக்கின்றது என்பதை ஆர்ஜென்டீனாவில் இருந்து நாடு திரும்பிய பிறகு பாரமி வசந்தி முழு நாட்டிற்கும் தெரியப்படுத்தினார்.

அவருடைய தந்தை ஒரு இருதய நோயாளி. தமது அன்றாட தேவைகளை மீன்பிடித் தொழிலின் மூலம் பூர்த்தி செய்துவருகின்ற அவர், பழைய வலையைப் பின்னிப் பின்னி கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தார். அதேபோல, அவருக்கு நிரந்தர படகொன்று இருக்கவில்லை.

இதேநேரம், ஆர்ஜென்டீனாவில் இருந்து நாடு திரும்பிய பாரமி வசந்தி, விமான நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மிகவும் மோசமான நிலையில் உள்ள தனது வீட்டை புனரமைத்துத் தருமாறும், தனது தந்தைக்கு படகொன்றுடன், வலையொன்றையும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவருடைய இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த அப்போதைய வீடமைப்பு அமைச்சரான சஜித் பிரேமதாஸ, அவர் தற்போது வாழ்ந்து வருகின்ற வீட்டை புனரமைத்து கொடுக்கவும், கொழும்புக்கு வந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்காக கொழும்புக்கு அண்மித்த பகுதியில் தொடர்மாடி குடியிருப்பில் வீடொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

றக்பியை கைவிட்டு கிக் பொக்சிங்கில் உலக சம்பியனாகிய அர்ஷான்

எதிர் தரப்புவாதிகள் இருவர், ஒருவரையொருவர் தமது..

இதுஇவ்வாறிருக்க, பாரமியின் குடும்பப் பின்னணி மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவருடைய தந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த படகொன்றுடன் என்ஜின் இயந்திரமொன்றை வழங்குவதற்கு மீன்பிடித்துறை அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதுதொடர்பில் எமது இணையத்தளத்துக்கு பாரமி வழங்கிய செவ்வியில், ”எனது தந்தைக்கு படகொன்றை வழங்கிய மீன்பிடித்துறை அமைச்சுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்று நாடு திரும்பிய போது எனது வீட்டையும், எனது தந்தைக்கு படகொன்றையும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தேன். எனவே எமது குடும்பத்துக்கு பெற்றுக்கொடுத்த இந்த உதவியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனிமேல் எனது தந்தைக்கு யாருடைய தயவும் இன்றியும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும். இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, எதிர்காலத்தில் இலங்கைக்கு இன்னும் இன்னும் வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பேன்” என தெரிவித்தார்.

பாரமியைப் போல தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி நாட்டிற்கு கௌரவத்தைப் பெற்றுக் கொடுக்கின்ற அனைத்து வீரர்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி உரிய அதிகாரிகள் உதவி செய்தால் நிச்சயம் இலங்கையின் நாமத்தை சர்வதேச அரங்கில் ஜொலிக்கச் செய்ய முடியும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<