பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்

258

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், 6ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்மித், வோர்னர், பேன்கிராப்ட் மீதான தடையை நீடிக்க தீர்மானம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ..

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான 29 வயதுடைய ஸ்டீவ் ஸ்மித்திற்கு, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஓராண்டு போட்டித் தடை விதித்துள்ளது. அவரது தடையை குறைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய வீரர்களின் சங்கங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கை எழுந்தன.

ஆனால், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அந்த தடையை நீக்க மறுத்துவிட்டது. சர்வதேச மற்றும் உள்ளூரின் முதன்மையான தொடரில் விளையாட தடைவிதித்ததால், ஸ்மித்திற்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைத்துள்ளது. இதனால், தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவரும் டி20 லீக்தொடர்களில் களம் இறங்க அவர் முடிவு செய்தார்.

இதன்படி, அண்மையில் நடைபெற்ற கனடா மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் ஸ்மித் விளையாடினார். இந்த நிலையில், அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுஇவ்வாறிருக்க, தற்போது பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நான் சஹீட் அப்ரிடி போன்று பந்துவீச விரும்புகின்றேன் – ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் …

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் வீரர் சொயிப் மலிக்கை, ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திரும்ப அழைத்துள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக ஸ்மித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

நாங்கள் ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் நான்கு போட்டிகளுக்குப் பிறகு அணியில் இணைவார் என்று நம்புகிறோம்என்று அந்த அணியின் பயிற்சியாளர் மொஹமட் சலாஹீடீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள மற்றொரு வீரரான டேவிட் வோர்னர் சியால்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6ஆவது பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<