உபாதைக்குள்ளான இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கும் நிலையில், கொழும்பில் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவிருக்கும் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் ஆட ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்க அழைக்கப்பட்டுள்ளார்
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் அன்டர்சனுக்கு ஓய்வு
சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கொழும்பில்…..
தனது கால்கள் இணையும் பகுதியில் உள்ள தசையில் ஏற்பட்ட உபாதை காரணமாக தினேஷ் சந்திமால் கண்டியில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டர் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த டெஸ்ட் போட்டியில் சந்திமாலுக்குப் பதிலாக அறிமுக வீரர் சரித் அசலங்க இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்த போதிலும், அசலங்வுக்கு முதல் பதினொருவரில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை.
இப்படியானதொரு நிலையில் இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமாலின் இடத்தினை ரொஷேன் சில்வா பிரதியீடு செய்திருந்ததோடு, அவர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான முறையில் ஆடி 85 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
எனினும், ரொஷேன் சில்வாவின் துடுப்பாட்டம் வீணாக இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 57 ஓட்டங்களால் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருந்தது.
இதேவேளை இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் உபாதைக்குள்ளாகிய சந்திமால் பூரண உடற்தகுதியினை நிரூபித்தால் கொழும்பில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை டெஸ்ட் குழாமில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர் இணைப்பு
கொழும்பு, SSC மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள…..
எனினும், இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையின்படி சந்திமால் தனது உபாதையில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதும் அவரால் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது.
“ காயம் காரணமாக (இங்கிலாந்து அணியுடனான) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் போயிருந்த தினேஷ் சந்திமால், உபாதை இன்னும் குணமாகாத காரணத்தினால் இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமாட்டார். “
என ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்திமாலுக்குப் பதிலாக தற்போது தனுஷ்க குணத்திலக்க உள்வாங்கப்பட்டுள்ள காரணத்தினால், ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்த சரித் அசலங்க இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்காக இறுதியாக ஜூலை மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடிய குணத்திலக்க அதன் பின்னர் ஒழுக்க விதி மீறல் குற்றச்சாட்டுக்களினால் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை சிறிது காலம் இழந்திருந்தார். போட்டித்தடைகள் தளர தொடர்ந்து ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட அவர் காயம் காரணமாக மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இழந்தார்.
இப்படியாக நீண்ட கால இடைவெளி ஒன்றின் பின்னர் தனுஷ்க குணத்திலக்க இங்கிலாந்து அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியிலேயே இலங்கை அணியினை முதற்தடவையாக சர்வதேசப் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<