மேற்கிந்திய தீவுகளை வழிநடாத்தவுள்ள இலங்கையின் முன்னாள் பயிற்றுவிப்பாளர்

295

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017 பெப்ரவரி மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஸ்டூவர்ட் லோ செயற்பட்டு வந்தார்.

இந்திய தொடரின் பிறகு இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

(null)

அவரது பயிற்றுப்பின் கீழ், ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி, உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், 2019 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் வாய்ப்பையும் உறுதி செய்தது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் கவுண்டி அணியாக மிடில்செக்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்ற காரணத்தால் அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

இதனால், மேற்கிந்திய தீவுகளின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட்டு வந்த நிக் போதாஸை இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது நிக் போதாஸ் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார். அதேபோல, ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் அவர் பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ராஜினாமா செய்த பதவி விலகிய கிரஹம் போர்ட் இலங்கை இளம் வீரர்களுக்கு கூறிய அறிவுறை

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப்….

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரான நிக் போதாஸ், கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட கிரஹம் போர்ட்டின் பதவி விலகலை அடுத்து, இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்தார்.

இவரது பயிற்றுவிப்பின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் முன்னேற்றம் கண்ட இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை முதற்தடவையாக டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்தி வரலாறு படைத்தது.

எனினும், அவரது பயிற்றுவிப்பில் இலங்கை அணி 18 ஒரு நாள் போட்டிகளுக்கு முகங்கொடுத்து 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பங்குபற்றிய 7 டி20 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் தெரிவின் போது சந்திக்க ஹத்துருசிங்கவுடன் போட்டியிட்ட நிக் போதாஸை மீண்டும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<