தினேஷின் சிறந்த தடுப்பால் ரினௌனுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்

400

சுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் மஹேந்திரன் தினேஷ் பெனால்டி ஷுட்அவுட்டில் இரண்டு உதைகளை அபாரமாக தடுத்ததன் மூலம் பொலிஸ் விளையாட்டுக் கழகம் வான்டேஜ் எப்.ஏ. கிண்ண அரையிறுதிக்கு முன்னெற்றம் கண்டது.

ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியின் முழு நேரத்தின் முடிவில் 0-0 என ஆட்டம் சமநிலையுற்றதை அடுத்து பெனால்டி ஷுட்அவுட் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.

சிறைச்சாலை அணியை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறிய சௌண்டர்ஸ்

மழைத் தூறல்களுடன் ஒரு விறுவிறுப்பான காலநிலைக்கு மத்தியில் பொலிஸ் அணி போட்டியை ஆரம்பித்தது. 5ஆவது நிமிடத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பொலிஸ் முதல் உதையை விட்டதோடு ரினௌன் பின்கள வீரர்களுக்கு அந்த அணி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தது.     

ஆரம்பத்திலேயே நுவன்த சாரக்க மூலம் கடும் சவாலுக்கு முகம்கொடுத்த ரினௌன் அணிக்கு அதன் தலைவர் மொஹமட் ரிஸ்னியை மாற்ற வேண்டி ஏற்பட்டது பெரும் பின்னடைவாக இருந்தது.

பொலிஸ் அணியின் தாக்குதலுக்கு மத்தியிலும் தனது ஆட்டத்தை வலுப்படுத்திக் கொண்ட ரினௌன் அணிக்காக மொஹமட் அர்ஷாட் மற்றும் டிலான் மதுஷங்க பல தடவைகள் பந்தை கடத்திச் சென்றபோதும் எதிரணி பின்களத்தை அவர்களால் முறியடிக்க முடியவில்லை.

மழை கடுமையாகும்போது இரு அணிகளும் தனது தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தை மாறி மாறி வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.

முதல் பாதியின் நடுப்பகுதியாகும்போது சதுர குணரத்ன நீண்ட தூரத்தில் இருந்து பந்தை உதைத்தபோது பொலிஸ் அணி கோல் வாய்ப்பை நெருங்கியபோதும் ரினௌன் பின்கள வீரர் ஹகீம் காமில் கோல் கம்ப எல்லையில் இருந்து பந்தை தலையால் முட்டி வலைக்கு வெளியில் தட்டிவிட்டார்.

Photos : Renown SC Vs Police SC | Quarter Final | FA Cup 2018

36ஆவது நிமிடத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தை அர்ஷாட் சிறப்பாக கட்டுப்படுத்தியபோதும் அதனை அவரால் கோலாக மாற்ற முடியவில்லை.  

முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் வழங்கப்பட்ட ப்ரீ கிக் வாய்ப்பிக்போது பெனால்டி எல்லைக்குள் இருந்த ரிஸ்னிக்கு மாற்று வீரராக வந்த ஷாமில் அஹமட்டின் கால்களுக்கு கிடைத்தது. என்றாலும் சமநிலை தவறியிருந்த அவர் பந்தை கோல் கம்பத்திற்கு வெளியால் உதைத்தார்.   

முதல் பாதி ரினௌன் வி.. 0 – 0 பொலிஸ் வி..

இரண்டாவது பாதி ஆரம்பித்தபோது பொலிஸ் அடுத்தடுத்து கோணர் கிக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியது. எனினும், ஆர். மொஹமட் மற்றும் சம்பத் பத்திரண உதைத்த அந்த பந்துகள் அகலப் பறந்தன.

ஆட்டம் ஒரு மணி நேரத்தை எட்டும்போது சிறப்பான ஆக்கிரமிப்பு ஆட்டத்தை அடுத்து ரினௌன் வீரர் டிலான் மதுஷங்க உதைத்த பந்து வலைக்குள் செல்லத் தவறியது. மத்தியகள வீரர்களின் போராட்டமாக மாறிய இந்த போட்டியில் இரு தரப்பும் எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமிப்பது சற்று குறைவாகவே இருந்தது.

இறுதி நேர கோல்களால் பொலிஸ் அணி காலிறுதிக்கு தகுதி

சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற வான்டேஜ் …

82ஆவது நிமிடத்தில் ப்ரீ கிக் மூலம் ரினௌன் அணியின் திலிப் பீரிஸ் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதன்போது அர்ஷாட் தலையால் முட்டிய பந்தை தினேஷ் அபாரமாக தடுத்தார்.

முழு நேரம்: ரினௌன் வி.. 0 – 0 பொலிஸ் வி..

முழு நேரமும் ஆட்டம் கோல் இன்றி நிறைவடைய இம்முறை எப். கிண்ண தொடரின் அரையிறுதிக்கு செல்லும் அணியை தெரிவு செய்வதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, ரினௌன் வீரர்களான மொஹமட் சாஜித் மற்றும் திலிப் பீரிஸின் இரண்டு பெனால்டிகளையும் மஹேந்திரன் தினேஷ் தடுத்ததோடு மொஹமட் அர்ஷாத் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.  

எனவே, ரினௌன் தனது முதல் 3 உதைகளிலும் பந்தை வலைக்குள் செலுத்தவில்லை.

மறுபுறம் பொலிஸ் வீரர் சாமிக்க குமாரவின் உதையை ராசிக் ரிஷாட் தடுத்தபோதும் சதுர குணரத்ன, நிலந்த பத்திரன மற்றும் இஷான் தனுஷ்க ஆகியோர் வாய்ப்பை கோலாக்க, பொலிஸ் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  

பெனால்டி ஷுட்அவுட்ரினௌன் வி.. 1 – 3 பொலிஸ் வி..

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் மஹேந்திரன் தினேஷ் (பொலிஸ் வி..)

மஞ்சல் அட்டை

பொலிஸ் வி.. – நவன்த சாரக்க 7′