இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் உப தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நடுவருமான கபில ஜயலத் பக்கவாதம் காரணமாக, தனது 53 ஆவது வயதில் காலமானார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி மூளை நோய் ஒன்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் இரண்டு வாரமாக சிகிச்சைபெற்று வந்த இவர், நேற்றைய தினம் (16) சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.
மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும்…
தற்போதைய பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் உப தலைவராக செயற்பட்டு வந்த இவர், முன்னாள் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அத்துடன், நாட்டின் தென்பகுதியில் உள்ள பெந்தோட்டை காமினி தேசிய கல்லூரி, அம்பலாங்கொடை தேவானந்த கல்லூி மற்றும் கராதெனிய மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
கபில ஜயலத், கிரிக்கெட் நடுவராக செயற்பட்டுவந்த நிலையிலேயே, பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளராக கடமையேற்றிருந்தார். இவர், பாடசாலை கிரிக்கெட்டுடன் தொடர்புடைய பல பணிகளைச் செய்திருந்ததுடன், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயற்பட்டார்.
சுழற்பந்து ஜாம்பவான் ரங்கனவின் ஆரம்பமும் இறுதியும்
இனிவரும் நாட்களில் டெஸ்ட் போட்டிகள்…
அதேநேரம், சிறந்த நிர்வாகியாக இருந்து இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்துக்கு உதவிகளை வழங்கியதுடன், பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கும் அவரால் இயன்ற உதவிகளை வழங்கி வந்திருந்தார்.
இதேவேளை, கபில ஜயலத்தின் உடல், அம்பலாங்கொடை – ஹெப்புமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியைகள் அம்பலாங்கொடை பொதுமயானத்தில் நாளை (18) பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<