ரியல் மெட்ரிட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளரானார் சென்டியாகோ

224
Santiago Solari
Image Courtesy - marca.com

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஜுலேன் லொபெடகுய் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்தை, தற்காலிகமாக நிரப்பிய சென்டியாகோ சோலாரி அந்த அணியின் முழுநேர பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதிர்சித் தோல்விகளால் பயிற்சியாளரை நீக்கியது ரியல் மெட்ரிட்

ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகுய்…

பார்சிலோனா அணியுடனான போட்டியில் 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் அணி படு தோல்வியுற்றதை தொடர்ந்து ஜுலேன் லொபெடகுய் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். பின்னர், இரண்டு வாரங்களுக்குள் புதிய பயிற்றுவிப்பாளரை நியமிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையில் இடைக்கால பயிற்றுவிப்பாளராக சென்டியாகோ சோலாரி நியமிக்கப்பட்டார்.

சென்டியாகோ சோலாரியின் ஒப்பந்தம் குறித்து ரியல் மெட்ரிட் அணியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில், ரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் இன்றைய (13) சந்திப்பின் போது, எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜுன் 30ம் திகதிவரை ரியல் மெட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளராக சென்டியாகோ சோலாரி நியமிக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஸ்பெய்ன் நாட்டு பயிற்றுவிப்பாளரான ஜுலேன் லொபெடகுயின் கீழ் இறுதியாக விளையாடிய 8 போட்டிகளில் 5 கோல்களை மாத்திரமே ரியல் மெட்ரிட் அணி பெற்றிருந்தது. எனினும், இடைக்கால பயிற்றுவிப்பாளராக சென்டியாகோ சோலாரி நியமிக்கப்பட்ட பின்னர், வெறும் 4 போட்டிகளில் 15 கோல்களை பெற்று, ரியல் மெட்ரிட் அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சென்டியாகோ சோலாரி, ரியல் மெட்ரிட் கழகத்தின் இளைஞர் அணியான கஸ்டில்லா அணியின் பயிற்றுவிப்பாளராக 2016-18 வரை கடைமையாற்றியுள்ளார் என்பது முக்கிய விடயமாகும்.

சொந்த மைதானத்தில் அதிர்ச்சித் தோல்வியுற்ற பார்சிலோனா

லா லிகா கால்பந்து சுற்றின் 12 வது வாரத்திற்கான போட்டிகள் நிறைவுற்றுள்ள…

பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சென்டியாகோ சோலாரியின் வழிகாட்டலின் கீழ் ரியல் மெட்ரிட் அணியினர் மெலில்லா (4-0), வெல்லடோலிட் (2-0), விக்டோரியா பிலிசன் (5-0) மற்றும் செல்டா விகோ (4-2) ஆகிய அணிகளை எதிர் கொண்டு தொடர் வெற்றிகளை பெற்றக்கொண்டனர். இந்த வெற்றிகளானது 116 ஆண்டுகளில் ரியல் மெட்ரிட் அணியின் பயிற்றுப்பாளர் ஒருவருக்கு கிடைக்காத மிகச்சிறந்த ஆரம்பமாகவும் பதிவாகியது.

ஜுலேன் லொபெடகுயின் இடைநிறுத்தத்தை தொடர்ந்து ரியல் மெட்ரிட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி வெற்றிடத்திற்கு பல முன்னனி பயிற்றுவிப்பாளர்கள் எதிர்பார்க்கப்பட்டனர். முக்கியமாக, செல்சி அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அண்டோனியோ கொண்டே, தற்போதைய பெல்ஜியம் அணியின் பயிற்றுவிப்பாளர் ரொபர்டோ மார்டினஸ் மற்றும் மொனோக்கோ அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் லியர்னாடோ ஜர்டியிம் ஆகியோர் எதிர்பார்க்கப்பட்டிருந்தனர். எனினும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த சென்டியாகோ சோலாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. முதற்தர கால்பந்தாட்ட அணியை பயிற்றுவிக்க இவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பும் இதுவாகும்.  

லா லிகா புள்ளிப் பட்டியலில் முன்னிலையிலுள்ள பார்சிலோனா அணியை விட 4 புள்ளிகள் வித்தயாசத்தில் 6வது இடத்திலுள்ள ரியல் மெட்ரிட் அணி, சோலாரியின் பயிற்றுவிப்பில் இம்மாதம் 24ஆம் திகதி ஏய்பர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேலும், சம்பியன் கிண்ண போட்டிகளுக்காக ரோமா அணியை, அந்த அணியின் அரங்கில் எதிர்கொள்ளும் சவாலான போட்டியிலும் எதிர்வரும் 28 ஆம் திகதி ரியல் மெட்ரிட் அணி விளையாடவுள்ளது.

சென்டியாகோ சோலாரி, தனது கால்பந்து பயணத்தை 1996 ரிவர் பிலேய்ட் அணியுடன் ஆரம்பித்தார். பின்னர் ஆர்ஜன்டினா அணிக்காகவும், தொடர்ந்து 1999ம் ஆண்டு, அட்லடிகோ மெட்ரிட் அணிக்காகவும் ஓப்பந்தம் செய்து கொண்ட இவர், பின்னர் 2000-05 ஆம் ஆண்டு வரை ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடினார். ரியல் மெட்ரிட் அணிக்காக 5 பருவகாலங்கள் விளையாடிய இவர், குறித்த காலப்பகுதியில் 7 கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<